திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி தமிழாய்வுத் துறையின் இந்திய அறிவு ஒருங்கில் தமிழின் கொடை கருத்தரங்கு

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

இந்திய அறிவு ஒருங்கிற்கு மட்டுமல்ல, மனிதகுல அறிவு ஒருங்கிற்கே தமிழர்களின் அறிவுக்கொடையே முதன்மையானது  திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழாய்வுத்துறைப் பன்னாட்டுக் கருத்தரங்கில் அறிஞர்கள் பெருமிதம்.

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி தமிழாய்வுத் துறை இந்திய அறிவு ஒருங்கில் தமிழின் கொடை என்னும் தேசியக் கருத்தரங்கை நடத்தியது. கருத்தரங்கத் தொடக்க விழாவிற்குக் கல்லூரி முதல்வர் அருள்முனைவர் சி.மரியதாஸ், சே.ச. தலைமை வகித்தார். முனைவர் ஆ.ஜோசப் சகாயராஜ் வரவேற்புரையாற்றினார். தமிழாய்வுத்துறைத் தலைவர் முனைவர் ஞா.பெஸ்கி நோக்கவுரையாற்றினார். 56 ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய ஆய்வுக்கோவை வெளியிடப்பட்டது.

Frontline hospital Trichy

கல்லூரி அதிபர் அருள்முனைவர் பவுல்ராஜ் மைக்கேல், சே.ச. ஆய்வுக்கோவையை வெளியிட்டு தொடக்கவுரையாற்றினார். தம் தொடக்கவுரையில், இயற்கையோடு இயைந்த வாழ்வு நடத்திய தமிழா்கள் தாம் கண்டன, கேட்டன, உயிர்த்தன, உற்றன, உண்டன என அனைத்தையும் மேலாண்மை செய்யும் ஆற்றல் பெற்ற அறிவார்ந்த சமூகமாக முகிழ்த்துத் தம் வாழ்க்கைமுறையை அமைத்து வாழ்ந்தனர் என்பதே வரலாறு.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

இந்திய அறிவு ஒருங்கிற்கு மட்டுமல்ல, மனிதகுல அறிவு ஒருங்கிற்கே தமிழர்களின் அறிவுக்கொடை மிகப்பெரிய பங்களிப்பைச் செய்துள்ளது என்பதை அடையாளப்படுத்தும்விதமாக எமது கல்லூரித் தமிழாய்வுத்துறை தமிழ்நாட்டிலே முதன்முதலாக இத்தகு தேசியக் கருத்தரங்கம் நடத்துவதும், அந்தக் கருத்தரங்கில் பகிரப்படும் ஆய்வுக் கட்டுரைகளைத் தொகுத்து நூலாக வெளிக்கொணர்வதும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது எனப் பதிவு செய்தார்.

இந்திய அறிவு ஒருங்கில் தமிழின் கொடை தேசியக் கருத்தரங்குகல்லூரி முதல்வர் அருள்முனைவர் சி.மரியதாஸ், சே.ச. தம் தலைமையுரையில்,  பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய தமிழ்மொழியின் எண் குறிகளும், அவற்றின் பயன்பாடுகளும், அளவை முறைகளும், உலகப் பயன்பாட்டில் தனித்துவமானவை. தமிழ் எழுத்துக்களை ஒத்துள்ள இந்தோ அராபிய எண்கள், தமிழரே  கணிதவியலின் முன்னோடி என்கிற கூற்றை மெய்ப்பிக்கின்றன. தமிழ் இலக்கியங்களின் பல இடங்களில் கூற்றில் தமிழரின் உளவியலும், அறவியலும் வெளிப்படுகின்றன.

ஏற்றுமதி இறக்குமதி குறித்த பதிவுகளும், நாளங்காடி, அல்லங்காடி என்கிற வகைப்பாடுகளும் தமிழர்தம் பொருளியல் அறிவுக்கு சான்று சொல்கினறன. அவ்வாறு ஒவ்வொரு துறையிலும் தனித்த முத்திரையைத் தம் அறிவுத்திறத்தால் கொண்டிருந்த தமிழர்களின் அறிவுக்கொடையை முரசறைந்து அறிவிக்க எமது கல்லூரித் தமிழாய்வுத்துறை இந்திய அறிவு ஒருங்கில் தமிழின் கொடை என்னும் பொருண்மையில் தேசியக் கருத்தரங்கை நடத்துவது குறித்து மகிழ்கிறேன்.

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறையின் சிறந்த நூலுக்கான முதல் பரிசைப் பெற்ற முனைவர் பட்ட ஆய்வாளர் திருமிகு.பா.எழில்ச்செல்வன், இளம் எழுத்தாளர்களாகத் தம் நூல்களை வெளியிட்டள்ள இளங்கலை மூன்றாம் ஆண்டு மாணவர்கள் மு.வசீர் அகமத் மற்றும் செ.ஜா.அரசி மார்லின் ஆகியோர் பாராட்டப்ப்பெற்றனர். முதுதமிழ் எழிலரசி எழுத்தாளர் கேத்தரீன் ஆரோக்கியசாமி தொடக்கவிழா அரங்கில் சிறப்பிக்கப்பட்டார்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இந்திய அறிவு ஒருங்கில் தமிழின் கொடை தேசியக் கருத்தரங்குதாமரை இதழ் ஆசிரியர் தோழர் சி.மகேந்திரன் தொடக்க விழாவில் விழாவில் பங்கேற்று விழாப் பேருரையாற்றினார். அவர் தம் உரையில், தமிழ்ச் சமூகத்தின் நீண்ட பயணத்தில் அறிவுக்கு அட்டி அறிய மாயாது தமிழரின் அறிவு மலைமுகட்டில் நிற்கும். அறிவு காரணம், அவை உருவாக்கி வைத்துள்ள கருதுகோள்கள் மனிதரைப் போல தனித்துவத்துடன் தெளிவாகத் தெரிகிறது. மிகவும் வலிமை பொருந்தியவை. அறிவையும், கல்வியையும் சங்க காலம் கொண்டாடியிருக்கிறது. அறிவுதான் முதன்மை என்பதற்கு பல ஆதாரங்களை சங்கப் பாடல்களில் காண முடிகிறது. தமிழரின் கல்வி அறிவின் சிறப்பை வெளிப்படுத்த முரசுக்கட்டில் ஒன்று நமக்கு போதும் எனச் சொல்லி பல சான்றுகளோடு தமிழரின் அறிவுத் தொன்மையை விவரித்தார்.  தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் டே.வில்சன் நன்றியுரையாற்றினார். தொடக்க விழா நிகழ்வுகளை முனைவர் ஜா.சலேத்  நெறியாள்கை செய்தார்.

தொடர்ந்து நடைபெற்ற அமர்வுகள் தலைமையில் முனைவர் கணநாதன், முனைவர் மரிய செசிலி, முனைவர் இராஜாத்தி ஆகியோர் தலைமையில் மூன்று அமர்வுகள் நடைபெற்றன. இந்த அமர்வுகளில் கருத்தரங்கப் பேராளர்கள் தங்கள் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர். அமர்வுகளை முனைவர் ஆ.ராஜாத்தி ஒருங்கிணைத்து வழிநடத்தினார்.

இந்திய அறிவு ஒருங்கில் தமிழின் கொடை தேசியக் கருத்தரங்குகருத்தரங்க நிறைவு விழாவிற்குக் கல்லூரிச் செயலர் அருள்முனைவர் கு.அமல் தலைமை வகித்தார். தம் தலைமையுரையில், உலகின் வரலாறு அந்த காலக்கட்டத்தின் சமூக, அரசியல் குறிப்பாகப் பொருளாதாரத்தைத் நிர்ணயித்தவையோடு இணைத்துப் பார்க்கப்பட்டு, பகுக்கப்பட்டு எழுதப்பட்டது என்பதே உண்மை. அந்த அடிப்படையில் விவசாயப் புரட்சியுகம், தொழிற்புரட்சியுகம், தகவல் புரட்சியுகம் என மூன்று யுகங்களாக உலக வரலாறு பகுக்கப்படுகின்றது. விவசாயப்புரட்சியுகம் வரையிலான உலக வரலாறு தமிழர்களாலே உருவானது என்பதை யாராலும் மறுக்க இயலாது.

இன்று போற்றிப் புகழப்படும் அனைத்துத் துறைகளையும் தமிழர்களே தம் அறிவுத்திறத்தால் ஆண்டனர் என்கிற வரலாற்று உண்மையை வெளிப்படுத்தும்விதமாக எமது கல்லூரித் தமிழாய்வுத்துறை இந்திய அறிவு ஒருங்கில் தமிழன் கொடை என்னும் தேசியக் கருத்தரங்கை நடத்துவது குறித்து மகிழ்கிறேன்.  இணை முதல்வர் முனைவர் பா.இராஜேந்திரன் வாழ்த்துரையாற்றினார். பணிமுறை இரண்டு தமிழ்த்துறை ஒருங்கிணைப்பாளர் முனைவர் சு.சீனிவாசன் முன்னிலை வகித்தார்.

இந்திய அறிவு ஒருங்கில் தமிழின் கொடை தேசியக் கருத்தரங்குதஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழக நாட்டப்புறவியல் துறைத் தலைவர்   முனைவர் அ.காமராசு கருத்தரங்க நிறைவுரையாற்றனார். அவர் தம் உரையில், தமிழரின் அறிவுத்தொன்மையை நிரூபிக்க வேண்டிய கால நெருக்கடியில் நிற்கிறோம். தொல்காப்பியரின் அறிவு வியக்க வைக்கிறது. இடைச்செருகல், கருத்தியல் திணிப்பு இவற்றைத் தூர எறிந்துவிட்டு தமிழனே உலக அறிவின் முன்னோடி என்பதை  உரத்து சொல்வோம் எனப் பதிவு செய்தார்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

நிறைவில் கருத்தரங்கச் செயலர் முனைவர் ஆ.அடைக்கலராஜ் நன்றியுரையாற்றினார். தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் இரா.முரளிக் கிருட்டினன் நிறைவு விழா நிகழ்வை நெறியாள்கை செய்தார். தமிழ் ஆய்வாளர்கள், தமிழ் ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், தமிழாய்வுத்துறை மற்றும் பிறதுறைப் பேராசிரியர்கள், முனைவர் பட்ட ஆய்வாளர்கள், மாணவர்கள் உள்பட 296 பேர் இக்கருத்தரங்கில் பங்கேற்றுப் பயன்பெற்றனர்.

 

—      அங்குசம் செய்திப்பிரவு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.