ஈனில் இலக்கிய அமைப்பு சார்பில் “தாடி முளைத்த நெடும்பனை ” கவிதை நூல் அறிமுகம் விழா

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

ஈனில் இலக்கிய அமைப்பு சார்பில் பேராசிரியர் சதீஷ் குமரன் எழுதிய கவிதை நூலான “தாடி முளைத்த நெடும்பனை ” நூல் குறித்த அறிமுகம் மற்றும் ஆய்வரங்கம் நிகழ்வு மிகச் சிறப்பாக நடந்தேறியது. இந்நிகழ்வில் கவிஞர் கோ. கலியமூர்த்தி தலைமை தாங்கி சிறப்பானதொரு தலைமை உரை வழங்கினார். தொடர்ந்து பாரதி கலைக்குழு தோழர் காந்தியின் பாடலுடன் நிகழ்வு தொடங்கியது.

சட்டக் கல்லூரி மாணவர்கள் திறன்மிகு பேச்சாளர் கவிஞர் தம்பி ஹரிஹரன் வீரப்பன், செல்வி சுபஸ்ரீ செல்வி சண்முகவள்ளி, செல்வி. நித்யா மற்றும் சுஜாதா சஞ்சய் குமார், ஆகிய ஆறு வளரும் இளம் பேச்சாளர்கள் படைப்பாளர்கள்  கவிதை நூல் குறித்து அறிமுகம் மற்றும் ஆய்வுரை நிகழ்த்தினார்கள். சாதியம், பெண்ணியம், சமத்துவம், காதல், சமூகம் என பல்வேறு தலைப்புகளில் வளரும் இளம் தலைமுறைகள் தங்களுக்கே உரிய தனித்துவமான சிந்தனை போக்குடன் அற்புதமான உரையை வழங்கி வியப்பில் ஆழ்த்தினார்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

ஒவ்வொருவரின் உரையும் ஒரு நறுமணம் நிறைந்த மூலிகை தேநீர் போல முத்தாய்ப்பாய் அமைந்தது என்றால் அது மிகை இல்லை. கௌரா பதிப்பகத்தின் பதிப்பாசிரியர் தோழர் ஜெய்கணேஷ் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்வை ஈனில் இலக்கிய அமைப்பின் நிறுவனர் சிறார் எழுத்தாளர் சங்கச்  செயல்பாட்டாளர் எழுத்தாளர் கதை சொல்லி தோழர் கார்த்திகா கவின் குமார் தொகுத்து வழங்கி ஒருங்கிணைத்தார். கவிஞர் சதீஷ் குமரன் ஏற்பரை வழங்கினார்.

நிறைவாக கவிஞர் கலியமூர்த்தி அவர்கள் ஒரு அபாரமான சமகாலத்திற்கு தேவையான பின் உண்மைத்துவம் எனும் இன்றைய நவீன உலகில் நிகழ்ந்துவரும் கோட்பாடுகளை சொல்லி நாம் எந்த திசையை நோக்கி நகர வேண்டும் எந்தச் சூழலில் இருந்தாலும் நம் எத்தகைய நெஞ்சுரத்தோடு ஆக்கத்துடன் அச்சமின்றி அறிவுப் பூர்வமாய் செயல்பட வேண்டிய செயலூக்கத்தை  வழங்கினார்.

இந்நிகழ்விற்கு பெரம்பலூர் கவிஞர் தோழர் அகவி மற்றும் அங்குசம் யாவரும் கேளீர் பொறுப்பாசிரியர் ஐயா முனைவர் திருமலை நெடுஞ்செழியன் உள்ளிட்ட சான்றோர்கள் பங்கேற்று சிறப்பித்தார்கள். நன்றி உரையை செல்வி சாய் மக .ஸ்ரீ மற்றும் சஷ்டிகா வழங்கினார்கள்…

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.