தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் தொழில் வர்த்தகப் பொருட்காட்சி 2025

0

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

மதுரை தமுக்கம் மைதானத்தில் 23.04.2025 புதன்கிழமை முதல் 27.04.2025 ஞாயிற்றுக்கிழமை வரை 5 நாட்கள் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் தொழில் வர்த்தகப் பொருட்காட்சி 2025 நடைபெறுகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட ஸ்டால்களுடன் நடைபெற உள்ளது. தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களிலுள்ள சிறிய, பெரிய உற்பத்தியாளர்களும், வணிக நிறுவனங்களும் ஸ்டால்கள் அமைத்து அதி நவீனமான பொருட்களையும், சாதனங்களையும் பார்வைக்கு வைத்து விற்பனை செய்ய உள்ளனர்.

தமிழக அரசின் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களும் அதிகளவில் ஸ்டால்கள் அமைக்கவுள்ளனர். சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பொருட்காட்சியை பார்வையிட்டு பயனடைவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

வர்த்தகப் பொருட்காட்சி
வர்த்தகப் பொருட்காட்சி

பொருட்காட்சியில் உணவகங்கள், சிறுவர் சிறுமிகளுக்கான நவீன விளையாட்டு சாதனங்களும் அமைக்கப்பட உள்ளன.  தென்மாவட்டத்தில் முதன்முறையாக குளுகுளுப் பேருந்தில் 12 விளையாட்டுகள் இடம்பெற உள்ளன. பொருட்காட்சிக்கான அனுமதி இலவசம்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பொருட்காட்சி அனுமதி சீட்டு எண்களின் அடிப்படையில் குலுக்கல் முறையில் மதியம் 1 மணி, 3 மணி, 5 மணி, 7 மணி மற்றும் 9 மணி ஆகிய நேரங்களில் தினசரி ஐந்து பரிசுகளும், பொருட்காட்சி இறுதி நாளன்று மெகா பம்பர் பரிசாக  பர்னிச்சர் இருசக்கர வாகனம் பம்பர் பரிசுகளாக ஸ்கூட்டி மோட்டார் சைக்கிள் ஒன்றும்,  எலக்ட்ரிக் பைக், டபுள் டோர் பிரிட்ஜ்   வழங்கப்பட உள்ளன. பொருட்காட்சி ஐந்து நாட்களும் தினசரி காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் நடைபெறும்.

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் டாக்டர் ஜெகதீசன் மற்றும் பொருட்காட்சி குழுவினர் இணைந்து இப்பபொருட்காட்சி நடத்துகின்றனர்.

 

—  ஷாகுல், படங்கள்: ஆனந்தன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.