ஆடிட்டரிடம் ரூ.1 கோடி லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் கைது !
கும்பகோணம், குடந்தை ராமசுவாமி கோயில் பகுதியை சேர்ந்தவர் ஆடிட்டர் ரவிச்சந்திரன் (68) இவருக்கு சொந்தமாக குலசேகரநல்லூர் கிராமத்தில் உள்ள சுமார் 80 சென்ட் நிலத்தை அவருடைய மருமகன் வெங்கடேஷூக்கு 2020ம் ஆண்டு விற்பனை செய்தார் இந்த நிலத்தை நீர்வளத்துறையினர் கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டும் பணிக்காக கையகப்படுத்தி, அதற்கு இழப்பீடாக ரூ.54 லட்சம் வழங்கினர்
பின்னர் ரவிச்சந்திரன், நீர்வ எத்துறையினர் கையகப்படுத்திய நிலத்தில் இருந்த சுமார் 30 தேக்கு மரங்களை யாருக்கும் தெரியா மல் சட்டவிரோதமாக வெட்டி யுள்ளார். இதையறிந்த நீர்வளத் துறை அதிகாரிகள், வருவாய்த்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 30 தேக்குமரங்களையும் கைப்பற்றி, குடந்தை சப் கலெக்டர் அலுவலகத்துக்கு கொண்டு வந்து ஒப்படைத்தனர். இது பற்றி பந்தநல்லூர் போலீசில் வருவாய்த் துறையினர் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதையறிந்த அரியலூர் மாமாவட்டம் திருமாந்துறையை சேர்ந்த வரும். தற்போது தர்மபுரி மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்புப்பிரிவில் பணியாற்றி வரும் போலீஸ் இன்ஸ்பெக்டர் தெப்போலியன் மார்ச் 8ம் தேதி ஆடிட்டர் ரவிச்சந்திரனை தொடர்பு கொண்டு, தேக்கு மரங்கள் வெட்டியது தொடர்பா பந்தநல்லூர் போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப்பதிவு செய்யப் போவதாகவும், வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க வேண்டு மானால் ரூ. ஒரு கோடி தனக்கு வழங்குமாறு மிரட்டியுள்ளார்.
மேலும் கலெக்டருக்கு உறவினர் என்றும் நம்ப வைத்துள்னார். இதையடுத்து பந்தநல்லூர் போலிசார் வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க, ஆடிட்டர் ரவிச்சந்திரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியனிடம் ரூ.25 லட்சம் ரூ. 55 லட்சம், ரூ. 20 லட்சம் என்று தர்மபுரி உள்ளிட்ட பல இடங்களுக்கு சென்று ரூ. ஒரு கோடியை கொடுத்துள்ளார்.
இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் மீண்டும் ரவிச்சந்திரனை தொடா்பு கொண்டு, மேலும் ரூ. தொடர்பு ரூ ஒரு கோடி வழங்க வேண்டும் என்று மிரட்டியுள்ளார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இதனால் மனமுடைந்த ரவிச்சந்திரன், தஞ்சை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில், போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் மீது புகார் செய்தார் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க எஸ்பி ராஜா ராமன் உத்தரவிட்டார்.
இதையடுத்து தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்தனர். கடந்த 3ம் தேதி தர்மபுரி தொப்பூர் சுங்கசாவடி பகுதியில் ஆடிட்டர் ரவிச்சந்திரனிடம் இருந்து போலிஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் ரூ. 5 லட்சம் வாங்கியபோது மறைந்திருந்த தனிப்படை போலீ சார், நெப்போலியனை பிடித்து கைது செய்து, தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். பின்னர் குடந்தை முதலாவது மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தி நெப்போலியனை புதுக்கோட்டை சிறையில் அடைத்தனா்.