கள்ளத்தன மது விற்பனை குறித்த கேள்விக்கு மீடியா தான் விற்கிறது என அடாவடியாக பதில் சொன்ன எஸ்.ஐ. வேடிக்கை பார்த்த இன்ஸ் வீடியோ
கள்ளத்தன மது விற்பனை குறித்த கேள்விக்கு மீடியா தான் விற்கிறது என அடாவடியாக பதில் சொன்ன உப்பிலியபுரம் எஸ் ஐ.வேடிக்கை பார்த்த இன்ஸ்பெக்டர் .
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் காவல் சரகத்திற்குட்பட்ட சோபனபுரத்தில் இயங்கி வரும் அரசு மதுபானக் கடைகளால் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும், அதனை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி, தாமதமானதால் கிராம பொதுமக்கள் சார்பில் வருகின்ற 5-ம் தேதி திங்கட்கிழமையன்று பட்டினிப் போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
வீடியோ லிங்
அதனைத் தொடர்ந்து அமைதிப் பேச்சுவார்த்தை துறையூர் தாசில்தார் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது பிரபல நாளிதழ் பத்திரிக்கையாளர் அங்கு வரவே தாசில்தார் அமைதிப் பேச்சு வார்த்தையின் போது நிருபர்கள் அனுமதி கிடையாது எனக் கூறினார். தாசில்தாரிடம் நிருபர் விளக்கம் கேட்டுக் கொண்டிருக்கும் போது, குறுக்கிட்ட உப்பிலியபுரம் எஸ் ஜ பிரபாகரன் என்பவர் நிருபரிடம் ஆவேசமாக , “நீங்கள் எப்படி உள்ளே வரலாம் , வெளியே செல்லுங்கள் , இந்தக் கூட்டத்தில் உங்களுக்கு அனுமதி கிடையாது என மிகக் கடுமையாகப் பேச ,நிருபர், “அதை தாசில்தார் சொல்லிவிட்டார்.
நீங்கள் ஏன் இவ்வளவு கோபப்படுகிறீர்கள். என்று பேசிவிட்டு வெளியே சென்று விட்டார்.
வீடியோ லிங்
மீட்டிங் முடிந்து வெளியே வந்த எஸ்ஐ பிரபாகரனிடம் நிருபர், “சார் தங்கள் கண்ட்ரோலில் உப்பிலியபுரம் பகுதிகளில் மட்டும் சுமார் 20 இடங்களில் அனுமதியின்றி டாஸ்மாக் சரக்குகளை சந்துக் கடைகள் மூலம் விற்பனை செய்து வருகின்றனர். அவர்கள் மீது ஏன் சார் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கேட்டது தான் தாமதம்.
வீடியோ லிங்
வானத்திற்கும், பூமிக்குமாய் ஒரே குதியாய் குதித்த எஸ்ஐ பிரபாகரன் , “தமிழ்நாடு அரசுதான் சந்துக்கடை நடத்துகிறது , மீடியா வாகிய நீங்க தான் கள்ளத்தனமாக சந்துகடையை நடத்துகிறீர்கள் என மிக ஆவேசமாக , தகாத வார்த்தைகளைப் பேசியுள்ளார்.
இந்த வீடியோ பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கள்ளத்தனமாக சந்துக்கடைகளில் தமிழக அரசே மது விற்பதாகவும், பப்ளிக் சந்துகடை நடத்துவதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும் என்றும், மீடியா தான் கள்ளத்தனமாக மது விற்பதை ஊக்கப்படுத்துகிறது எனவும் உப்பிலியபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பத்திரிக்கை நிருபரிடம் வாக்குவாதம் செய்து அடாவடியாக பேசிய சம்பவத்தை துறையூர் காவல் நிலையம் முன்பு கூடி நின்று வேடிக்கை பார்த்த பொதுமக்கள் ஒரு பத்திரிக்கையாளரையே மதிக்கத் தெரியாத காவல்துறை பொதுமக்கள் புகாருக்கு எப்படி பதில் சொல்வார்கள் என அங்கிருந்து கலைந்து சென்றனர்.
வீடியோ லிங்
இவ்வளவு பிரச்னை நடந்து கொண்டிருக்கும் போது எந்த சலனமும் இல்லாமல் நமக்கேன் வம்பு என துறையூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் சந்திரகாந்த் உள்ளிட்ட போலீசார் இருவரையும் சமாதானப்படுத்தாமல் கடமையே கண்ணாக நின்று கொண்டிருந்ததும் வீடியோவில் பதிவாகி உள்ளது.