இன்ஸ்டாகிராமில் மிரட்டல் ! பிளஸ் 1 மாணவன் தற்கொலை !
திருச்சி கே கே நகர் நெடுஞ்செழியன் சாலை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராஜ் இவர் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மகன் ஜெபாஸ்டின் (வயது 16) கே கே நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை மாணவன் ஜெபாஸ்டின் ஒருவித இறுக்கத்துடன் பள்ளியிலிருந்து வீடு திரும்பி உள்ளார்.
பின்னர் இரவு பெற்றோர் வீட்டில் இருந்த போது திடீரென மற்றொரு அறையில் இருந்த ஜெபஸ்டின் திடீரென்று தான் இருந்த அறையின் கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டு தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து உடனடியாக கேகே நகர் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தூக்கில் பிணமாக தொங்கிய செபாஸ்டின் உடலை கைப்பற்றி பிரோத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கேகே நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் பாலக்கரை பகுதியைச் சேர்ந்த ஒரு கும்பல் அவருக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக கொலை மிரட்டல் விடுத்ததால் தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது.
என்ன காரணத்துக்காக அந்த கும்பல் கொலை மிரட்டல் விடுத்தது?
இந்த மாணவனுக்கும் அந்த கும்பலுக்கும் என்ன தொடர்பு என்பது குறித்து தெரியவில்லை. இந்த சம்பவம் கேகே நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பள்ளி மாணவன் தற்கொலை சம்பவம் குறித்து கே கே நகர் போலீசார் விரிவாக விசாரணை நடத்தினால் தான் உண்மை சம்பவம் என்னவென்று தெரிய வரும்.







Comments are closed, but trackbacks and pingbacks are open.