அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

நாயகபோதை … தெளிய காலமெடுக்கும் !

திருச்சியில் அடகு நகையை விற்க

வாழும் அம்பேத்கருக்கு திருத்தணி தொகுதி ஒதுக்கியுள்ளது தவெக கட்சி. அது எந்தக்கட்சி எனக்கேட்காதீர்கள்? அது நடிகர் விஜய்யின் கட்சி. அந்த வேட்பாளர் தனியே தன்னந்தனியே சுற்றி வருகிறார்.

விஜய், தமிழ் சினிமாவில் பெரிய வசூல் நாயக நடிகர். குழந்தைகள் முதல் இளையோர்கள் வரையில் ஈர்த்துள்ள நடிகர். அதாவது, முதல் தலைமுறை வாக்காளர்களின் நாயகன் அவர். அந்த கூட்டத்தை வைத்துதான் அவர் கட்சி தொடங்கியுள்ளார். விஜய்யின் அரசியல் கூட்டங்களுக்கு வரும் கூட்டமெல்லாம் அந்த கட்சிக்காக, அதன் கொள்கைக்காக கூடிய கூட்டமல்ல. விஜய்யை பார்க்க கூடிய அவரது ரசிகர்களின் கூட்டம், கொஞ்சம் பொதுமக்களின் கூட்டம். இயல்பாகவே, திரையில் மட்டுமே பார்க்கும் நடிகர்களை நேரில் பார்க்க மக்களுக்கு ஒரு ஆர்வம் வரும். விஜய்யை போன்ற மாஸ் ஹீரோவை ஒருமுறை நேரில் பார்க்கவேண்டும் என்கிற ஆசையில் வருகிறார்கள். ஒருமுறை பார்த்தபின் திரும்ப திரும்ப போய் யாரும் பார்க்கமாட்டார்கள். அதாவது மோகம் 30 நாள் வகையறாதான். தீவிர ரசிகர் தன் தலைவனை மீண்டும் மீண்டும் போய் பார்ப்பார். அது நாயக போதை, அந்த போதை தெளிய நாளாகும்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

விஜய்க்கு கூடிய கூட்டத்தைப் பார்த்து அது அரசியல் மாற்றத்துக்காக கூடிய கூட்டம் என நரேட்டிவ் செட் செய்யப்படுகிறது. அது அரத பழைய சினிமா டெக்னிக். அது விஜய்க்கு ஒர்க்கவுட்டாகிறது. அவரது ரசிக கண்மணிகளான வேட்பாளர்களுக்கு செட்டாகாமல் உடைகிறது.

தவெக விஜய்234 தொகுதியில் (சரியானதானே சொல்றன்) விஜய்யின் ரசிகர்கள் தேர்தலில் நிற்கிறார்கள். விஜய்யை தவிர மற்ற வேட்பாளர்களின் பிரச்சாரத்தைப்போய் பாருங்கள். வாழும் அம்பேத்கரைப்போல்தான் 90 சதவித வேட்பாளர்கள் தனியே தன்னந்தனியே வலம் வருகிறார்கள். நடிகர் விஜய்க்கு கூடுகிற கூட்டமெல்லாம் அந்த கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களுக்கே கூடுவது கிடையாது. அதைத்தான் திருத்தணியில் போட்டியிடும் வாழும் அம்பேத்கர் வழியாக வெளிப்படுத்தியுள்ளது. பொதுச்செயலாளர் புஸ்ஸி.ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ்அர்ஜுனா, நிர்மல்குமார் போன்றவர்கள் நிற்கும் தொகுதியில் வரும் கூட்டம்மெல்லாம் பணம் தந்து அழைத்துவரப்படும் கூட்டம்.

2026 யாவரும் கேளீர் ஏப்ரல் மாத இதழ்

தவெக என்பது நடிகர் விஜய்யின் முகத்தை முன்னிறுத்தி தொடங்கப்பட்ட கட்சி. அந்த கட்சிக்கென கொள்கை, கோட்பாடு என எந்த வெங்காயமும் கிடையாது, தெரியாது. கட்சி தொடங்கிய விஜய்-க்கே தெரியாது. தேர்தல் பரப்புரை என்கிற பெயரில் நடிகர் விஜய் சுற்றுப்பயணம் போகிறார். அவர் போன பகுதிக்கு ஒருவாரம் அல்லது ஒருமாத இடைவெளிவிட்டு மீண்டும் செல்லட்டும் கடந்தமுறை வந்த கூட்டத்திலிருந்து 50 சதவிதம் குறைந்திருக்கும். அதாவது அது முழுக்க முழுக்க விஜய்யை பார்க்க மட்டுமே கூடும் கூட்டம். இந்த கூட்டத்தைப் பார்த்துதான்  மயங்குகிறார்கள். விஜய் கலந்துக்கொள்ளாத ஒரு பொதுக்கூட்டத்துக்கு இப்படி கூட்டம் வந்தால் , ஒப்புக்கொள்ளலாம் மக்கள் செல்வாக்கு இருக்கிறது என. ஆனால், விஜய் ரசிகர்களே வரமாட்டார்கள்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

மாற்றம்வேண்டும் என கருத்துக்கணிப்பு சொல்கிறதே, மக்கள் பேட்டியளிக்கிறார்களே எனக்கேட்கலாம்.

தேர்தல் கருத்துக்கணிப்பு என்பதன் பின்னால் பலப்பல அரசியல் உள்ளது. மக்கள் கருத்து என்பது, நாட்டில் ஒரு பிரச்சனையை தீர்த்தால் இன்னொரு பிரச்சனை உருவாகும். இது தனிமனிதருக்கும் பொருந்தும். இது இயல்பானது. எந்த பிரச்சனையையும் ஒரு சிட்டிக்கில் தீர்த்துவிடமுடியாது. மாவட்டத்தை நிர்வாகம் செய்யும் மாவட்டஆட்சியருக்கு, திடீரென தாகம் எடுக்கிறது. தண்ணிர் குடிக்க அரசுப்பணத்தில் ஒரு வாட்டர் பாட்டில் வாங்கவேண்டும் என்றால், அதற்கான அதிகாரியை அழைத்து பேசி பணம் ஒதுக்க வைக்கவேண்டும் அல்லது அவர் செலவு செய்துவிட்டு அதனை  பின்பு அரசிடம் பில் தந்து வாங்கிக் கொள்ளவேண்டும். அரசு இயந்திர நடைமுறை அப்படி.

sathyakumarசாதாரண மக்களுக்கு அதெல்லாம் அவ்வளவாக தெரியாது. அதனால் பிரச்சனையை தீர்க்கவில்லை என ஆளும்கட்சி மீது ஒரு அதிருப்தி வரும். அப்போது,அவர்கள் அரசுக்கு எதிராக புலம்புவார்கள். நடுத்தர வயதை கடந்தவர்கள் மாறி மாறி வரும் ஆட்சி மீது அதிருப்தியாகி புது ஆட்சி வரட்டுமே என நினைத்து, புதியவர்கள் வரும்போது ஆதரிப்பார்கள். இதெல்லாம் ஒரு ராத்திரியில் பெரும் மாற்றத்தையெல்லாம் தந்துவிடாது. இதை புரிந்து கொள்ளாமல் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வருபவர்கள் நேராக முதலமைச்சராகிவிட நினைக்கிறார்கள். பெரும்பாலான மக்கள் அதனை இப்போதுயெல்லாம் சந்தானம் காமெடி போல் கடுப்பாகிறார்கள்.

நடிகர் விஜயகாந்த் அரசியலுக்கு வந்தபின்பு 10 ஆண்டுகளுக்கு அந்த நாயக பிம்பம் அரசியல் களத்திலிருந்தது. விஜய்-க்கெல்லாம் இந்ததேர்தலிலேயே நாயகபிம்பம்  உடைந்துக்கொண்டு இருக்கிறது. இத்தேர்தலில் அக்கட்சிக்கு கிடைக்கும் வாக்குகள் அடுத்த தேர்தலில் பெரியகட்சிகளோடு பேரம் பேச நடிகர் விஜய்க்கு உதவும்.

கடன் வாங்கி தேர்தல் வேலை பார்க்கும் விஜய் கட்சி நிர்வாகிகளின் நிலைமையை நினைத்தால்தான் கவலையாக இருக்கிறது. தேர்தல் முடிவுக்கு பின்னர் எத்தனை வேட்பாளர்களின் குடும்பங்கள் தெருவில் நிற்கப்போகிறதோ?

—   ராஜ்பிரியன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.