மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் அறிமுகம்.. தொடர் – 18

0

மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் அறிமுகம்.. தொடர் – 18

கவிஞர். இயற்கை ஆர்வலர் மற்றும் எழுத்தாளர். ஆன்மிகப் பற்றாளர். வனத்துறையில் இ.வ.ப (IFS) அதிகாரி. திரு. வ. சுந்தரராசு அவர்கள். கவிதை எழுதும்போது கவிஞர் சோலை எழிலன் ஆகவும், இயற்கை சார்ந்து எழுதும்போது தமது இயற்பெயரான வ. சுந்தரராசு எனவும் எழுதுபவர்.
சோலைச் சிதறல்கள், சோலை மலர்கள், சோலை வனங்கள், வெக்காளி அம்மனே போற்றி, அன்பெனும் ஆயுதம், அன்பே மந்திரம், அன்பே தெய்வம் என இதுவரை 7 கவிதை நூல்களும், மருத்துவ மரங்கள், மரம் மனிதரின் நண்பன், வையம் வளம் பெற, உயிர்த்திடும் உலகம், Jungle Chronicles, Ecological Harmony ஆகிய இயற்கை சார்ந்த நூல்களும் வெளியிட்டுள்ளார்.
4 bismi svs
திருச்சி மாவட்டம், வைரிசெட்டிப்பாளையம் கிராமத்தில் வேளாண்குடியில் பிறந்து, கல்வியிலே சிறந்து விளங்கி, தமிழ்நாடு வனத்துறையில் 36 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறந்த முறையில் பணியாற்றிப் பணிநிறைவு பெற்றவர்.
- Advertisement -

- Advertisement -

இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (Society for Conservation of Nature) என்ற அமைப்பின் தலைவராக இருந்து, பல்வேறு கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் பொதுநல அமைப்புகளில் இயற்கையைப் பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியை மேற்கொண்டிருக்கின்றார்.
Down to Earth எனும் ஆங்கில சஞ்சிகையில் ஒரு கட்டுரையாளராக இதுவரை 58 கட்டுரைகள் எழுதியுள்ளார்.
தெய்வீக ராகம், அன்பெனும் அருமருந்து அன்பும் அறனும், அன்பே தெய்வம், திருநெறி ஆகிய கவிதை நூல்களும், பூவுலகை மீட்போம், அணிநிழற் காடு, Enchanting World of Forests, Heritage Trees ஆகிய அறிவியல் நூல்களும் விரைவில் வெளிவர இருக்கின்றன. அவைகள் விரைவில் வெளி வந்து வெற்றி வாகை சூட நமது நல் வாழ்த்துகளைக் கூறுவோம்.

 

-பாட்டாளி 

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.