மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் அறிமுகம்.. தொடர் – 19
மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் அறிமுகம்.. தொடர் – 19
எழுத்தின் துணையில் வலுவாகிட… வலுவாக்கிட… என்கிற பிரகடனத்தோடு துடிதுடிப்பாகச் செயல்படும் கவிஞர், எழுத்தாளர், ஆவணப் பட இயக்குனர், உதவிப் பேராசிரியர் எனப் பன்முகத் திறன் கொண்ட இளைஞர் திரு. ஜோ. சலோ அவர்கள்.

2003ஆம் ஆண்டில் வெளிவந்த ‘விலங்கொடிய’ என்கிற முதல் நூலிலிருந்து தமது எழுத்துப் பயணத்தைத் துவங்கியவர். ‘யுகனும் நானும்’ என்கிற தற்போதைய நூல்வரை மொத்தம் 35 நூல்களை எழுதியுள்ளார்.
முன்பு அய்க்கப்பில் முழு நேர ஊழியராக இருந்தவர் தற்போது திருச்சிராப்பள்ளி தூய வளனார் தன்னாட்சி கல்லூரித் தமிழாய்வுத்துறை உதவிப் பேராசிரியராக கல்விப் பணியாற்றுவதோடு, ‘மாமனிதம்’ என்கிற மாத இதழின் ஆசிரியராக இதழ்ப் பணியும் புரிபவர்.

இலக்கியச் செல்வர் விருது, தொல்காப்பியர் விருது, அறிஞர் அண்ணா விருது உட்பட பல விருதுகளுக்குச் சொந்தக்காரர். அதனோடு மூன்று ஆவணப் பட இயக்குனர். சில பல நூல்களின் தொகுப்பாசிரியராகவும், பதிப்பாசிரியராகவும் தமிழ்ப் பணி புரிந்தவர். நாளும் பல நல்ல தமிழ்த் தொண்டாற்றிடும் ஜோ. சலோ அவர்களின் தொண்டுகள் சிறக்க நாமும் வாழ்த்துவோம்.
-பாட்டாளி