மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் அறிமுகம்.. தொடர் – 20

0

மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் அறிமுகம்.. தொடர் – 20 

 

நமது திருச்சியில் குறிப்பிடத்தக்க படைப்பாளிகள் ஒருவர் எழுத்தாளர் கலைச்செல்வி அவர்கள். தேர்ந்த படைப்பாளர். இதுவரை வலி, இரவு, சித்ராவுக்கு ஆங்கிலம் தெரியாது, மாயநதி, கூடு என்கிற ஐந்து சிறுகதை நூல்களும், சக்கை, புனிதம், அற்றைத் திங்கள், ஆலகாலம், ஹரிலால் த/பெ மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்கிற ஐந்து நாவல்களும் வெளிவந்துள்ளன.
பொதுப்பணித் துறையில் பணி புரிபவர். அந்தப் பொதுப்பணித் துறை சார்பில், ‘ஏற்றத்துக்கான மாற்றம்’ என்கிற நூலொன்று வந்துள்ளது.

திருப்பூர் தமிழ்ச் சங்க விருது 2015, தமிழ்நாடு கலைஇலக்கியப் பெருமன்றம் வழங்கிய அழகியநாயகியம்மாள் விருது 2016, திருப்பூர் அரிமா சங்கம் சக்தி விருது 2016, புதுக்கோட்டை புத்தகக் கண்காட்சி விருது 2017, இலக்கியச் சிந்தனை விருது 2018, “தாழ்வாரம்“ சிறந்த சிறுகதைத்தொகுப்பு 2018க்கான விருது, கணையாழி சிறுகதைக்கான ஸ்பேரா விருது 2021 போன்ற தமிழின் குறிப்பிடத்தகுந்த விருதுகளைப் பெற்றவர்.

 

இவரது படைப்புகளான சக்கை நாவல் புத்தனாம்பட்டி நேரு மெமோரியல் கல்லுாரி, பி.ஏ. பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. கூடு சிறுகதை நூல் கோவை அரசுக் கலைக்கல்லுாரியில் பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளது.
‘தேய்புரி பழங்கயிறு’ என்கிற இவரது புதிய நாவல் அச்சில் இருக்கிறது. விரைவில் வெளிவர இருக்கிறது. அதற்கு நமது வரவேற்புகளையும், வாழ்த்துகளையும் சொல்வோம்.

 

-பாட்டாளி 

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.