அங்குசம் சேனலில் இணைய

மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் அறிமுகம்.. தொடர் – 3

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் – பதிவு 3

சிறந்த கவிஞரும், வாழ்வியல் சிந்தனையாளரும், திருச்சி பாரத மிகு மின் நிறுவனத்தில் பொது மேலாளராகவும், மனித வளத்துறை மேலாளராகவும் பணியாற்றி தற்போது பணி நிறைவு பெற்றவருமான பன்முக ஆற்றலுடையவர்… கவிஞர் ம.திருவள்ளுவர் அவர்கள்.
இவர் இதுவரை 12 நூல்கள் எழுதியுள்ளார். இதில் 4 கவிதை நூல்கள் 8 வாழ்வியல் நூல்கள். இவரது முதல் கவிதை நூல் ‘நடந்து காட்டும் மிதியடி’ (1998) ‘செதுக்கத் துடிக்கும் சிறகுகள்’, ‘முற்றத்தில் வானம்’ (ஹைகூ), ‘சகாராவில் செண்பகங்கள்’ (காதல் கவிதைகள்) என 4 கவிதை நூல்களும், ‘புதிய பார்வை, புதிய வார்வை, புதிய வாழ்க்கை’ (2003) ‘சுவாரசியங்கள்’, ‘ஏக்கங்கள்’, ‘சுயம்அறி – சுடர் விடு’, ‘இதோ தீர்வு’, ‘கனவெல்லாம் நனவாக’, ‘தூண்டில்கள் -100’, ‘பிடிச்சிருக்கா’. என 8 வாழ்வியல் நூல்களும் எழுதியுள்ளார்.

மனித வள மேம்பாட்டுப் பயிற்சியாளராயும், தலைமைத்துவப் பயிற்சியாளராயும், சன், கலைஞர், பொதிகை போன்ற தொலைக்காட்சிகளில் சிறப்பு விருந்தினராகவும் பங்கேற்ற கவிஞர் ம. திருவள்ளுவர், மேலும் மேலுமாய் உச்சம் தொட்டு உலா வர, சிறந்த கவிஞராக மிளிர,

நமது நல்வாழ்த்துகள்

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

-பாட்டாளி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.