IRCTC ரயில் டிக்கெட் புக்கிங்கில் தில்லுமுல்லு ? ஆத்திரங்கள் வருது மக்களே ….
ஒரு டிக்கெட் எடுக்க ஒழுங்கு மரியாதையா வரிசையில நின்னு போய்க்கிட்டு இருக்கோம்னு வைங்க. அப்ப கவுண்ட்டர்கிட்ட போகும் போது, நம்மளை டக்குனு பிடிச்சு வெளியே தள்ளி விட்டா எப்டி இருக்கும்….
எதுக்கு தள்ளி விடப்பட்டோம், என்ன காரணத்துக்காகத் தள்ளி விடப்பட்டோம்னு எதுவுமே தெரியாம, வெளியே வந்துட்டு மறுபடி அவ்ளோ பெரிய வரிசையில பின்னாடிப் போய் நின்னு வந்தா டிக்கெட் கிடைக்குமா?
அப்டித்தான் இந்த ஐஆர்சிடிசி ஆப்லயும் நடக்குது. தட்கல் டிக்கெட் புக் பண்ற நேரத்துல லாகின் பண்ணிப் போறதே பெரிய விஷயம். இன்னைக்கு அப்டிப் போய், எல்லா டீட்டெய்லும் கொடுத்து பணம் செலுத்தப் போறப்ப, டக்குனு லாக் அவுட் பண்ணி விட்டுருச்சு.
08 டிக்கெட் இருக்கும் போது புக் பண்ண ஆரம்பிச்சேன். டிக்கெட் விலை 425 ரூபாய்கள். 2 நிமிஷத்துல வெளியே தள்ளி விட்டுருச்சு. அடுத்து 5 நிமிஷம் கழிச்சுதான் உள்ளே நுழைய முடிஞ்சது. அப்பப் பார்த்தா வெயிட்டிங் லிஸ்ட் 7. ஆக, என்னையத் தள்ளி விட்டுட்டு அந்த இடைப்பட்ட நேரத்துல யார் யாருக்கோ 100 டிக்கெட் கிடைக்கிற மாதிரி செஞ்சுட்டானுங்க.
நான் என்ன காரணத்துக்காக வெளியேற்றப்பட்டேன்னு எனக்கு சொல்லப்படலை. என்னைய மாதிரி நிறையப் பேரை இப்டி தள்ளி விட்டுருப்பாய்ங்கை. அதே நேரத்துல வேற யாரோ வேண்டியவங்களுக்கு ப்ரியாரிட்டி கொடுத்துருப்பாய்ங்கை. அப்புறம் எதுக்கு இந்த ஆப்?
சரி, ப்ரீமியம் தட்கல்ல பார்ப்போம்னு பார்த்தா 60 டிக்கெட் இருக்குன்னு காட்டுது. டிக்கெட் விலை 720. சரி புக் பண்ணலாம்னு பார்த்து டீட்டெய்ல் கொடுத்தா, அந்தப் பேஜ் மட்டும் ரெஃப்ரெஷ் ஆயிருச்சு.
இப்ப பார்த்தா 1 டிக்கெட்தான் இருக்கு, அதோட விலை 945ன்னு காட்டுது. அது எப்டி 1 நிமிஷத்துக்கும் குறைவா 59 டிக்கெட்டும் காணாமப் போகும்? வேற ட்ரெய்ன்ல ப்ரீமியம் தட்கல் குறைவா இருக்கான்னு பார்ப்போம்னு பார்த்தா எதுலயுமே இல்லை. இதுக்கு 5 நிமிஷம் ஆச்சு. ஏன்னா, ஒவ்வொரு தொடுகைக்கும் ரொம்ப நேரம் எடுக்குது. மறுபடி இதே ட்ரெய்ன்ல ப்ரீமியம் தட்கல் வந்து பார்த்தா அதே ஒரு டிக்கெட் 945லயே இன்னும் இருக்கு.
அது எப்டி 59 டிக்கெட்டும் வித்துப் போய்ட்டு ஒரே ஒரு டிக்கெட் மட்டும் இன்னும் அப்டியே இருக்கு? அப்டிலாம் இருக்க வாய்ப்பு இருக்குன்னாலும், இதைச் சந்தேகப் படத்தான் வாய்ப்பு அதிகமா இருக்கு.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
என்னவோ தில்லுமுல்லு நடக்குதுன்னு மட்டும் எனக்குத் தெரியுது. அப்டிலாம் இருக்காது எல்லாம் கம்ப்யூட்டர் பண்றதுதானேன்னு, கம்ப்யூட்டர் தப்பு பண்ணாது, கம்ப்யூட்டர்ல எல்லாம் ரெக்கார்ட் ஆகும்னு யாராச்சும் சொன்னீங்கன்னா, நீங்கள்லாம் EVMல ஓட்டுப் போட்டு நாசமாத்தான் போவீங்க.
இன்னைக்கெல்லாம் கொள்ளயடிக்கிறது எல்லாம் சட்டபூர்வமாவும், கம்ப்யூட்டர் மூலமாவும்தான் நடக்குதுங்குறதைப் புரிஞ்சுக்கக் கூடிய அறிவும் அனுபவமும் உங்களுக்கு இல்லைன்னுதான் சொல்வேன். இன்னைக்கெல்லாம் டெக்னாலஜி தெரிஞ்சவன்தான் பிஸ்தா.
ஆக, IRCTCல ஏதோ தில்லுமுல்லு இருக்குன்னு மட்டும் நான் உறுதிபட சொல்வேன்.
– பாபு PK எழுத்தாளர்.