இதுதான் அரசியல் தர்மமா?

சாட்டையை சுழற்றுவாரா... ஸ்டாலின்....

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக தமிழ்நாட்டின் 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றி விஸ்வரூப வெற்றி பெற்றிருக்கிறது. மேலும் தோல்வியடைந்த இடங்களில் கூட சொற்ப எண்ணிக்கையிலான வாக்குகள் வித்தியாசத்திலேயே திமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்கள் தோல்வியை தழுவி இருக்கின்றனர்.

100 சதவீத வெற்றியை பெறுவோம் என்று கூறிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினினுடைய சொல் நிறைவேறாவிட்டாலும் திமுகவினுடைய வெற்றி மிகப் பெரிய வெற்றியாகவே கருதப்படுகிறது. அதேநேரம் தோல்வியை நழுவ விட்ட சில இடங்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் இருந்தும் திமுகவினரின் உள்ளடி வேலைகளாலேயே திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு தோல்வி ஏற்பட்டு இருக்கிறது. திமுக Vs அதிமுக என்பதை விட திமுக Vs திமுக நிர்வாகிகள் என்று சொல்லலாம்.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

திருச்சி மாநகராட்சியை பொறுத்தவரை திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 100சதவீதம் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்பு இருந்தும் கூட சில இடங்களில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் வெற்றியை பறிகொடுத்து இருக்கின்றனர். அதற்கு காரணம் அதிமுகவின் ஆளுமையான வேட்பாளர்கள் என்பதைவிட திமுகவின் உள்ளடி வேலை என்றே கூறலாம். ஆம்.. வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்பு இருந்தும் நழுவவிட்ட திருச்சி மாநகராட்சி வார்டுகள் பற்றி பார்ப்போம்.

14-வது வார்டு :-

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 14வது வார்டில் அதிமுக வைச் சேர்ந்த ஆவின் சேர்மன் கார்த்திகேயனின் தம்பி அரவிந்தன் போட்டியிட்டார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் திருமாவளவனை பின்னுக்குத்தள்ளி 1,322 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த வார்டில் திமுகவைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் வேலு சுயேட்சையாக களம் இறங்கியது திமுக வேட்பாளருக்கு பலவீனமாக அமைந்தது. 14வது வார்டில் திமுகவைச் சேர்ந்த முன்னணி தலைவர்கள் பலர் இருந்தும்கூட வணிகர் சங்கத்தினுடைய ஆதரவு இருப்பதனால் திருமாவளவனுக்கு 14வது வார்டு கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் திமுக நிர்வாகிகள் திருமாவளவனுக்கு போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லையாம்.

37வது வார்டு :-

திருச்சி மாநகராட்சி 37வது வார்டில் அதிமுகவைச் சேர்ந்த அனுஷ்யா என்பவர் வெற்றி பெற்றார். இந்த வார்டில் திமுகவைச் சேர்ந்த லலிதாம்பிகை என்பவர் போட்டியிட்டார். இந்த வார்டில் திமுக தோற்பதற்கு திமுகவினரின் கவனக்குறைவும், நிர்வாகிகள் வேட்பாளருக்கு போதிய ஒத்துழைப்பு அளிக்காததுமே காரணம் என்று சொல்லப்படுகிறது.

47வது வார்டு :-

திருச்சி மாநகராட்சி 47வது வார்டு திமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கக் கூடிய சிபிஎம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வெற்றிச்செல்வன் களம் இறக்கப்பட்டார். சிபிஎம்-க்கு வார்டு ஒதுக்கப்பட்டது முதலே திமுகவினர் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் வெற்றிச்செல்வனுக்கு திமுகவின் வட்டச்செயலாளர்கள், நிர்வாகிகள் போதிய ஒத்துழைப்பு தரவில்லை, பிரச்சாரத்திற்கு கூட பெருமளவில் திமுகவினர் பங்கேற்கவில்லை. பேருக்கு அவ்வப்போது வந்து தலையைக் காட்டி செல்லும் திமுக நிர்வாகிகள் வெற்றி செல்வனை பெரிதாக ஆதரித்து வாக்குகள் கேட்காதது தோல்விக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. இதனால் 157 வாக்குகள் வித்தியாசத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த செந்தில்நாதன் வெற்றிபெற்றார். திமுகவினர் சிறிது முயற்சி எடுத்து இருந்தால் கூட வெற்றிச்செல்வன் வெற்றி பெற்றிருக்க முடியும்.

59வது வார்டு :-

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 59வது வார்டு திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த விடுதலை சிறுத்தை கட்சிக்கு கொடுக்கப்பட்டது. விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் அருளின் மனைவி மேரி சுஜா களமிறக்கப்பட்டார். மேரி சுஜாவிற்கு சீட்டு ஒதுக்கப்பட்டது முதலே திமுகவினர் நேரடியாகவும் மறைமுகமாகவும் திமுக தலைமைக்கு எதிர்ப்புகளை தெரிவிக்கத் தொடங்கினர். ஆனாலும் கூட்டணி உடன்பாடு முடிந்துவிட்டதால் தொகுதியை மாற்ற முடியாது என்று கூறி இரு அமைச்சர்களும் விடுதலை சிறுத்தை கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 59வது வார்டை விடுதலை சிறுத்தை கட்சிக்கு உறுதிப்படுத்தினர். இதனால் அதிருப்தி அடைந்த வட்டச்செயலாளர் கணேசமூர்த்தி, மேரி சுஜாதாவிற்கு வாக்குகள் கேட்டு பெரிய அளவில் பிரச்சாரம் செய்யவில்லை என்றும் சொல்லப்படுகிறது. அதேநேரம் அந்த வார்டை சேர்ந்த திமுக நிர்வாகிகள் யாரும் விடுதலை சிறுத்தை கட்சி வேட்பாளருக்கு போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை. அதுமட்டுமல்லாது திமுக வட்டச்செயலாளர் கணேசமூர்த்தியின் அண்ணன் பாலமுருகனின் மனைவி கீதா என்பவர் சுயேட்சை வேட்பாளராக உலக உருண்டை சின்னத்தில் களமிறங்கினார். இவர் 3531 வாக்குகள் பெற்று எதிர்த்து போட்டியிட்ட விடுதலை சிறுத்தை கட்சி வேட்பாளர் மேரி சுஜா உள்ளிட்ட அனைத்து வேட்பாளர்களையும் டெபாசிட் இழக்கச் செய்தார். திருச்சி மாநகராட்சியில் திமுக கூட்டணி டெபாசிட் இழந்த ஓரே வார்டு, 59வது வார்டு தான் என்பது குறிப்பிடத்தக்கது.

65வது வார்டு :-

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 65 ஆவது வார்டு திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. என்றாலும் 65வது வார்டை கைப்பற்ற திமுக மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம் தீவிர முயற்சி எடுத்தார். ஆனாலும் கூட்டணி உடன்பாடு முடிவடைந்ததால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 65வது வார்டு உறுதி செய்யப்பட்டது. ஆரம்பம் முதலே கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ராஜாவிற்கு போதிய ஒத்துழைப்பு அளிக்காமல் இருந்த திமுகவினரால் 62 ஓட்டு வித்தியாசத்தில் சிபிஐ வேட்பாளர் ராஜா தோல்வியடைந்தார். மேலும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் காளீஸ்வரன் சுயேட்சையாக களமிறங்கினார். திமுக நிர்வாகிகள் சிலர் காளீஸ்வரனுக்கு மறைமுகமாக ஆதரவு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த வார்டுகள் அனைத்துமே திமுக அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்பு இருந்தும்கூட வெற்றி வேண்டுமென்றே நழுவ விடப்பட்டிருக்கிறது. இப்படி கட்சிக்கும் விசுவாசம் இல்லாத கூட்டணிக்கு விசுவாசம் இல்லாத நபர்கள் அரசியலில் வளர்வது கட்சிக்கு நல்லதில்லை என்று கூறுகின்றனர் மூத்த உடன்பிறப்புகள்.

டெபாசிட்டே போச்சா…

திருச்சி மாநகராட்சியில் திமுக கூட்டணி டெபாசிட் இழந்த ஓரே வார்டு, 59வது வார்டு தான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

வெற்றிசெல்வனின் தோல்வி ஏன்?

திமுக கூட்டணியில் சிபிஎம் கட்சி சார்பில் 47வது வார்டில் போட்டியிட்டு 157 வாக்கு வித்தியாசத்தில் ஏற்படுத்தப்பட்ட செயற்கை தோல்வி. போட்டியில் இஸ்லாமியர் 4 (இதில் இஸ்லாமிய திமுக அதிருப்தி சுயேட்சை 2, IUML சுயேட்சை 1), கிறிஸ்துவர்கள் 3 (கிறிஸ்துவ திமுக அதிருப்தி சுயேட்சை 1), தனியாக (அதிருப்தி திமுக சுயேட்ச்சை 2), கட்சிகள் 9 – இப்படி ஒரு போட்டி எந்த வார்டிலும் இல்லை. 18 வேட்பாளர்கள் – 2 வாக்குமிஷின்.

 

நேரு செய்த ‘டிரிக்’

திருச்சி மாநகராட்சி 54வது வார்டில் ஏற்கனவே கவுன்சிலராக இருந்த ராமமூர்த்தி திமுக சார்பில் சீட் கேட்டிருந்தார். மேலும் மூவேந்தர் மற்றும் மற்றொரு வட்டச்செயலாளர் புஷ்பராஜ் ஆகியோர் திமுகவின் சார்பில் போட்டியிட சீட்டு கேட்டு இருந்தனர். போட்டி கடுமையாக இருந்ததால் போட்டிகஷீமீ அமைச்சர் கேஎன்.நேரு புஷ்பராஜிற்கு சீட்டை ஒதுக்கினார். இதனால் அதிருப்தி அடைந்த ராமமூர்த்தி சுயேச்சையாக போட்டியிட்டார். ராமமூர்த்தி வெற்றி பெறுவார் என்று பேசப்பட்ட நிலையில் மூவேந்தரை புதிய வட்டச் செயலாளராக நியமித்தார் அமைச்சர் கே.என்.நேரு. இதனால் இரண்டு தரப்பினருடைய ஓட்டும் திமுக வேட்பாளர் புஷ்பராஜிற்கு சென்றது. மேலும் ஆளும் கட்சி வேட்பாளர் என்பதால் புஷ்பராஜ் 2759 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ஆனாலும் சுயேட்சையாக களம் கண்ட ராமமூர்த்தி 2548 வாக்குகள்  பெற்றார்.

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.