ஒத்துழைப்பு கொடுக்காத மா.செ. வென்று காட்டிய ர.ர..!

0

திருச்சி மாவட்டம், துறையூர் நகராட்சியில் அதிமுக 7-வார்டுகளை கைப்பற்றியுள்ளது. 5வது வார்டில் பெரியக்கா, 7வது வார்டில் கௌதமி, 12வது வார்டு திவ்யா, 16வது வார்டு சந்திரா, 20 ஆவது வார்டு பாலமுருகவேல், 21 வது வார்டில் தீனதயாளன், 23 வது வார்டில் சரோஜா உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கவுன்சிலராக வெற்றி பெற்றிருக்கின்றனர்.

4 bismi svs

வேட்புமனு பரிசீலனை முதலே திமுகவினர் தொடர்ந்து அழுத்தம் கொடுப்பதாகவும், பிரச்சாரத்தின் போது கூட மிரட்டல்களை சந்தித்ததாகவும் இப்படி தொடர்ந்து பல்வேறு இன்னல்கள் ஏற்பட்ட போது கூட வேட்பாளர்களே அதை சந்தித்ததாகவும், ஆரம்பம் முதலே மாவட்ட செயலாளர் சரியான ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றும் கூறுகின்றனர்.

மேலும் தேர்தல் செலவு ஒரு ரூபாய் கூட கட்சி சார்பில் தராமல் அனைத்து வேட்பாளர் களும் சொந்த காசை செலவு செய்து வெற்றி பெற்றிருக்கின்றோம். வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி பிரச்சாரத்தின் போது கண்டுகொள்ளவில்லை என்று பார்த்தால், வெற்றி பெற்ற பிறகும் கூட மதிக்கவில்லை என்று கூறுகின்றனர் வெற்றி பெற்றவர்கள்.

- Advertisement -

- Advertisement -

வெற்றி பெற்றவர்கள் மாவட்டச் செயலாளர் பரஞ்சோதியை சந்தித்தபோது கூட வாழ்த்து கூட சொல்லாமல் அனுப்பியதாகவும், மேலும் ஜெயலலிதா பிறந்த நாளன்று துறையூர் பேருந்து நிலையம் அருகில் அண்ணாசிலை பகுதியில் அன்னதானம் நடத்திய போது கூட வெற்றி பெற்றவர்களை சந்தித்த பரஞ்சோதி வெற்றி பெற்றவர்களுக்கு சால்வை கூட அணிவிக்கவில்லையாம். மாவட்டச் செயலாளரின் ஒத்துழைப்பு இல்லாமலேயே எந்த அளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறோம். அவருடைய ஒத்துழைப்பு சிறிதளவு இருந்திருந்தால் கூட கூடுதல் இடங்களை கைப்பற்றி இருப்போம் என்று கூறுகின்றனர் துறையூர் பகுதி ரத்தத்தின் ரத்தங்கள்.

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.