”சகோதரி அசோகவர்ஷிணி ” இதுதான் உங்கள் ஊடக அறமா?
Thanthi TV நெறியாளர் சகோதரி Ashokha Varshini அவர்களுக்கு..
நலம், நலமே சூழ எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிரார்த்திக்கின்றேன்..
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்ஹா தொடர்பாக, பாஜக-வை சேர்ந்த ஹெச்.ராஜா ஷர்மா உடனான ஒரு பேட்டியை கண்டேன்.
அதில் ஹெச்.ராஜா, 800 ஆண்டுகளுக்கு முன் சிக்கந்தர் மலைக்கு ஏன் சென்றார் என்று கேள்வி எழுப்பி, கோவிலை இடிக்கத்தான் சென்றார் என்று ஒரு பொய்யான பதிலையும் சொல்கிறார்.
ஒரு நேர்மையான நெறியாளராக இதற்கு நீங்கள் ஆதாரத்தை கேட்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாற்றமாக 800 ஆண்டுகளுக்கு முன்னாள் நடந்ததற்கு இப்பொழுது என்ன செய்ய முடியும் என்று அவர் சொன்ன கருத்தை ஏற்று பேசுகிறீர்கள். இதன் வழியே பொது புத்தியில் எதை நிறுவ நீங்கள் துடிக்கிறீர்கள்?
அதுபோலவே, லண்டன் பிரிவி கவுன்சில் ஒட்டுமொத்த மலையும் கோவிலுக்கே சொந்தம் என்று 1931-ல் தீர்ப்பளித்ததாக ஹெச்.ராஜா குறிப்பிடுகிறார். ஆனால், அந்த தீர்ப்பில் அப்படி ஒன்றும் இல்லை என்றும், மொத்த மலையும் அரசுக்கு சொந்தமானது என்றும் அதில் கோவில்கள் ஹிந்துக்களுக்கும், சிக்கந்தர் தர்ஹா முஸ்லிம்களுக்கும் உரிமையுடையது என்றும் தானே இருக்கிறது என்று திமுக பேச்சாளர் ஒருவர் மற்றொரு தொலைக்காட்சியின் விவாதத்தில் கேள்வி எழுப்புகிறார். ஒரு பாஜக பேச்சாளரை வைத்துக்கொண்டே இந்த கேள்வி எழுப்பப்பட்டும் அதை அந்த பாஜக பேச்சாளர் மறுக்கவில்லை.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
ஒரு நெறியாளராக நீங்கள் இதையெல்லாம் முன் கூட்டியே தெரிந்து வைத்து அவர் வைக்கும் பொய்யான வாதத்தை மறுத்து மக்களுக்கு உண்மை செய்தியை சொல்லியிருக்க வேண்டுமல்லவா? அதுதானே ஒரு ஊடகத்தில் வேலை?
மாறாக, அவர் சொல்லும் அனைத்து கருத்தையும் ஏற்று முஸ்லிம்களை குற்றவாளியாக சித்தரிக்கிறீர்களே.! இதுதான் உங்கள் ஊடக அறமா?
அல்லது பலரும் சொல்வது போல நீங்களும் ஒரு சங்கி ஊடகவியலாளர் தானா?
தந்தி டி.வி நிர்வாகம் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்களை பரப்புவதற்குத்தான் உங்களை இந்த வேலைக்கு அமர்த்தி இருக்கிறதா?
ஏன் தான் இத்தனை அநீதியாக நடந்து கொள்கிறீர்கள்? ஒரு பொய்யை ஏற்று மக்களுக்கு தவறான தகவல்களை பரவச்செய்கிறோம் என்கிற உருத்தல்கள் உங்களைப் போன்றவர்களுக்கெல்லாம் இருக்கவே இருக்காதா?
— பரகத் அலி – சீனியர் பத்திரிகையாளர்.