அனைத்து மாவட்ட பத்திரிக்கை சங்கங்களின் கவனத்திற்கு…
மல்லாந்து படுத்துக்கொண்டு எச்சில் துப்பினால் அது நம்மில் தான் விழும்…
பத்திரிக்கையாளர்களையே பத்திரிகையாளர்கள் அவமானப்படுத்தக்கூடிய சூழ்நிலைகளை உருவாக்க வேண்டாம்…
ஒரு மாவட்டத்தில் பத்திரிகையாளர்கள் போலியானவர்கள் என்று சொல்லும் அளவிற்கு பத்திரிக்கை சங்கங்கள் என்ன செய்து கொண்டுள்ளன…
பத்திரிகையாளர்களுக்கு பிரச்சனைகள் என்றால் பேசி தீர்க்க வேண்டும்… அதற்குத்தான் சங்கங்கள்..
ஒருவர் போலி நிருபர் என்று சொல்லக்கூடிய முழு அதிகாரமும் பத்திரிக்கை வெளியீட்டாளருக்கு மட்டுமே உள்ளது…
அதாவது அந்த நிறுவனத்தைப் போல.. அந்த நிறுவனத்தின் அனுமதி இல்லாமல் மற்றொருவர் செயல்படுவது..?
எந்த பருவ இதழாக இருந்தாலும் மத்திய அரசின் RNI பதிவு பெற்ற/ R.D is. no பத்திரிக்கையின் செய்தியாளர்களை போலி நிருபர்கள் என்று சொல்லும் அதிகாரம் பத்திரிக்கை வெளியீட்டாளர் தவிர யாருக்கும் உரிமை கிடையாது.
காவல்துறைக்கோ, மற்றொரு பத்திரிகை நிறுவனத்திற்கோ.. மற்றொரு தினசரி பத்திரிக்கைகளுக்கோ எந்தவித அதிகாரமும் கிடையாது.. அப்படி இருக்கும் பொழுது போலி நிருபர்கள் என்ற ஒரு செய்தியை அந்தந்த மாவட்ட நிருபர்கள் தான் வழங்குகின்றனர். இதனை சங்கங்கள் ஏன் தடுக்க முன் வரவில்லை.. அதற்கான நடவடிக்கைகளை ஏன் எடுக்கவில்லை…?
அவ்வாறு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சங்கங்களை கலைத்து விட்டு செல்லுங்கள்..
உங்களால் பத்திரிக்கை துறையை காப்பாற்ற முடியவில்லை என்றால் பத்திரிக்கை துறையில் எதுக்காக இருக்கிறீர்கள்.?
நாட்டின் நான்காம் தூண் என்று வாய்கிழிய பேசினால் மட்டும் போதாது..
பத்திரிக்கை துறையை காப்பாற்றும் முன் வர வேண்டும்..
இங்கு போலி நிருபர்கள் என்று எதுவுமே கிடையாது.
இங்கு குற்றம் செய்கின்றனர். அது உண்மையா.? இல்லையா என்பதை மட்டுமே பார்க்க வேண்டும்.
பத்திரிகையாளர்கள் சட்டவிரோத செயல்களை வெளியிடும் பொழுது அவர்களுக்கு வைக்கப்படும் பெயர்தான்
போலி நிருபர்கள்… என்ற பட்டம் ?
ஒரு நிதி நிறுவனம் பொதுமக்களிடமிருந்து லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கும் பொழுது அதனை செய்தியாக வெளியிடும் பொழுது…
அல்லது வெளியிடும் முன்… அதனை தடுப்பதற்காக செய்தியாளர்களின் மீது பொய்யான குற்றச்சாட்டுகளின் பெயரில் அவர்களை குற்றவாளியாக ஆக்கப்படுகின்றனர்.
பத்திரிகைகளில் தினசரி நாளிதழ்களின் இயல்புகள் வேறு…
பருவ இதழ்களின் இயல்புகள் வேறு…
தினசரி நாளிதழ்கள்
அன்றாட நடைபெறும் இயல்பான நிகழ்வுகளை வெளியிட்டு வருகின்றனர்..
பருவ இதழ்கள்.. மற்றும் புலனாய்வு இதழ்கள்.. குற்ற சம்பவங்களை …. உரிய ஆதாரங்களுடன் புலனாய்வு செய்து.. வெளியிடுகின்றன….
இந்த விஷயத்தில் தினசரி நாளிதழ்களுக்கும்…
புலனாய்வு இதழ்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன..
‘”இதனை உயர் நீதிமன்றமே உறுதிப்படுத்தி உள்ளன.
ஊழல் முறைகேடுகளை புலனாய்வு பத்திரிகைகள் உரிய முறையில் புலனாய்வு செய்து வெளியிட வேண்டும் என்றும் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றமே அறிவுறுத்தி உள்ளது.”
சமீப காலமாக பருவ இதழ்கள் மற்றும் புலழாய்வு பத்திரிகையாளர்கள் மட்டுமே குற்றவாளியாக உருவாக்கப்படுகிறார்கள்.
காரணம் அவர்கள் சட்டத்திற்கு புறமான உண்மையை வெளி உலகத்திற்கு சொல்லிவிடுவார்கள் என்ற ஒரு அச்சத்தின் காரணமாக அவர்களை ஒரு வட்டத்திற்குள் கொண்டு வர வேண்டும் என்கிற அடிப்படையில் ஒரு சில காவல்துறை உதவி ஆய்வாளர்களால் உருவாக்கப்பட்டதுதான் ” மிரட்டி பணம் பறிக்கும்” ஒரு வழக்கு ஆகும்.
சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் லஞ்சம் பெற்றுக்கொண்டு நிறுவனத்தை காப்பாற்றும் நோக்கில் பத்திரிகையாளர்களின் மீது பொய் வழக்கு பதிவு செய்வதே வாடிக்கையாக வைத்துள்ளனர். இது ஜனநாயகத்துக்கு விரோதமான செயலாகும்.
யாரும் இங்கு போலி நிருபர்கள் கிடையாது. போலி நிருபர்கள் என்று சொல்வதற்கு காவல் துறைக்கு எந்தவித அதிகாரமும் கிடையாது.
நிருபர்கள் தவறு செய்கிறார்கள் என்றால் பொதுவாக அவர்களை நடத்த வேண்டும்.. போலி நிருபர்கள் என்று முத்திரை குத்த வேண்டிய அவசியம் இல்லை.
மற்ற துறைகளில் எவ்வாறு குற்றம் செய்தவர்களை கையாளுகின்றார்களோ. அதேபோல நிருபர்களையும் கையாள வேண்டும். அதுதான் சட்ட நடைமுறை.
லஞ்சம் வாங்கிய அதிகாரிகளை அனைவரும் போலி அதிகாரிகள் என்று சொல்ல முடியுமா? குற்றம் செய்துள்ளார் என்றால் அதற்கு உரிய ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து உரிய தண்டனை பெற்று தரலாம். அதை விட்டு விட்டு… ஆதாரங்களை சமர்ப்பிக்க முடியாது என்ற காரணத்தினால்.. குற்றவாளிகளை தப்பிக்க விட வேண்டும் என்று பத்திரிகையாளர்களை போலி பத்திரிக்கையாளர்கள் என்று முத்திரை குத்தி குற்றவழியாக உருவாக்கப்படுகின்றனர்.
இதனை அனைத்து பத்திரிக்கை சங்கங்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளன..
மானங்கெட்ட பத்திரிகையாளர்கள் சங்கங்கள் வெக்கி தலை குனிய வேண்டும்…
ஒரு பத்திரிகையாளன் கைதாகுகின்றான் என்றால்…
அதற்கு சங்கங்களே முழு பொறுப்பு…
அவ்வாறு பத்திரிகையாளர்களை காக்கவில்லை என்றால் சங்கங்களை கலைத்து விட்டு செல்லுங்கள்…
பத்திரிகையாளர்களை காக்கவில்லை என்றால் உங்களுக்கு இங்கே என்ன வேலை…
நீங்கள் மட்டும் ராஜ வாழ்க்கை வாழ்வதற்கா சங்கங்களை உருவாக்கியுள்ளீர்கள்..
எதற்காக மாவட்ட நிர்வாகிகளையும்… தலைவர்களையும் எதற்காக செயல்படுத்துகிறீர்கள்…?
நிருபர்கள் தவறு செய்கின்றனர் கைதாகின்றார் என்ற விபரம் மாவட்ட சங்க நிர்வாகிகளுக்கு தெரியாதா…
அது உண்மையா பொய்யா என்று விசாரிக்க கூட உங்களுக்கு நேரமில்லையா…?
மாவட்ட பத்திரிகையாளர் சங்க நிர்வாகிகளை மீறி நிருபர்கள் கைதாகி நின்றார்கள் என்றால்..
அங்கு சங்கங்களுக்கு வேலை இல்லை.. வெக்கி தலைகுனிய வேண்டும்….
RNI – பதவு பெற்ற பத்திரிகைகள் அனைத்தும் பத்திரிகைகள்தான்..
பருவ இதழ்களின் செய்தியாளர்களையும், இதழ்களையும் மதிக்காத தினசரி நாளிதழின் செய்தியாளர்களின் நடவடிக்கைகளை வெளிக்கொண்டு வாருங்கள். அல்லது அவர்களை கட்டுப்படுத்துங்கள்..
இல்லை என்றால் பருவ இதழ்களின் வளர்ச்சியை அழித்து விடுவார்கள்..
பருவ இதழ்களின் ஆசிரியர்கள்/ வெளியீட்டாளர்கள் செய்தியாளர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். தாங்கள் எங்கு வழக்கில் சிக்கிக் கொள்வோம் என்று செய்தியாளர்களை சிக்க வைக்கின்றனர். செய்தியாளர்கள் இல்லை என்றால் இங்கு வெளியிட்டார்கள்/ ஆசிரியர்கள் என்ற பெயர் உங்களுக்கு வருவதற்கு வாய்ப்பு இல்லை.
செய்தியாளர்களை பணியில் சேர்க்கும் போது பணி நியமன ஆணை வழங்குகின்றீர்கள்.
அதேபோல் அவர்களை நீக்குவது என்றால் முறைப்படி பணி நீக்க கடிதம் அளிக்க வேண்டும்.
பணிநீக்க கடிதத்தை செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலகத்திற்கும், அங்கீகரிக்கப்பட்ட பத்திரிக்கையாளர் சங்கத்திற்கும்ஒரு நகலை அனுப்பி வைக்க வேண்டும்.
அதன் பிறகும் பணிநீக்கம் செய்யப்பட்ட நபர் அதே நிறுவனத்தின் பெயரில் செயல்பட்டார் என்றால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்.
அதை விடுத்து அடையாள அட்டையில் ஒரு வருட காலம் செய்தியாளர் என்று குறிப்பிட்டு விட்டு … அவரை ஏற்கனவே பணியிலிருந்து நீக்கி விட்டோம் என்று கூறி தப்பித்துக் கொள்ள வேண்டாம்..
அவ்வாறு செய்தீர்கள் என்றால் சட்ட சிக்கலை எதிர்கொள்ள வேண்டியது வரும்.
ஏதோ ஒரு பத்திரிக்கையாளர் அல்லது பத்திரிக்கையாளர் சங்கம் , நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டியது வந்தால் அனைத்து தகவல்களும் உண்மையானதாக இருக்க வேண்டும்.
பணி நியமனம்.
அவர் செய்த குற்றம்.
குற்றத்தின் ஆதாரம்..
பணி நீக்க விவரம்.
பணி நீக்க கடிதம்..
ஆகியவை அவசியமாக கடை பிடிக்க வேண்டும்.
இவை அனைத்தும் நீதிமன்றத்திற்கு உண்டான ஆதாரமாகும்.
இவ்வாறு கடைப்பிடிக்கவில்லை என்றால் சம்பந்தப்பட்ட செய்தியாளர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
யாரும் இங்கு குற்றவாளிகள் அல்ல. குற்றவாளிகளாக உருவாக்கப்படுகின்றனர். பருவ இதழ்களின் செய்தியாளர்கள் குற்றவாளியாக உருவாக்கப்படுவதற்கு மாவட்ட முன்னணி செய்தியாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் மிக முக்கிய காரணமாவார்கள்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
பத்திரிகையாளர்களின் பணியே குற்றங்களை வெளியே உலகத்திற்கு சொல்வது தான். அதற்கு எல்லை கிடையாது.. குற்றங்களை வெளியிடுவதால் பத்திரிகையாளர்களை போலியாக சித்தரிக்கப்படுவதை பத்திரிக்கையாளர் சங்கங்கள் அனுமதிக்க வேண்டாம் என்று வேண்டுகோள் வைக்கப்படுகின்றன.
அனைத்து மாவட்ட சங்கங்களையும் ஒருங்கிணைத்து அனைத்து தினசரி செய்தியாளர்களை ஒருங்கிணைத்து பருவ இதழ்களின் செய்தியாளர்கள், தினசரி நாளிதழ்களின் செய்தியாளர்கள் அனைவரும் வேறுபாடுகள் இன்றி செயல்படுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வைக்கின்றோம்.
எனவே பத்திரிகையாளர்கள் சங்கங்கள் மற்றும் பருவ இதழ்களின் ஆசிரியர்களும் ஒருங்கிணைந்து செய்தியாளர்களின் பாதுகாப்பிற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.
ராஜேஷ் கண்ணன்
தென்னிந்திய பத்திரிக்கையாளர் மன்றம்.