“கேட்டதெல்லாம் கொடுக்கிற தமிழக முதல்வரே! இதையும் கொடுத்து விடுங்கள்!” – மூத்த அரசியல் தலைவர் குமரி ஆனந்தன் !
“கேட்டதெல்லாம் கொடுக்கிற தமிழக முதல்வரே! இதையும் கொடுத்து விடுங்கள்!” திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கக் கூட்டத்தில் மூத்த அரசியல் தலைவர் குமரி ஆனந்தன் வேண்டுகோள்.
” இலக்கியச்செல்வர் குமரிஅனந்தனின் பயணங்கள் ” நூல் வெளியீட்டு விழாவில் ஜவஹர் ஆறுமுகம் எழுதியுள்ள ” இலக்கியச்செல்வர் குமரிஅனந்தனின் பயணங்கள் ” நூல் வெளியீட்டு விழா மேடையில் குமரி அனந்தன் , திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் சு.திருநாவுக்கரசர் , திருச்சி வேலுசாமி, முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி, கவிஞர்
த.இந்திரஜித் , கவிஞர் வீ.கோவிந்தசாமி ஆகியோர் நிற்பவர் திருச்சி மாவட்ட நலப்பணி நிதிக்குழுவின் பொருளாளர் “சேவை” கே. கோவிந்தராஜு . இந்திய கலாச்சார நட்புறவுக் கழகத்தின் மாநிலத் தலைவர் , கல்வியாளர் சௌமா.இராஜரெத்தினம் இந்த விழாவுக்குத் தலைமை வகித்தார். நூல் வெளியீட்டு விழாவுக்கு உதவும் வகையில் சௌமா.இராஜரெத்தினம் , கவிஞர் வீ.கோவிந்தசாமி, அன்பில் பெரியசாமி, வழக்கறிஞர் அருண் செந்தில் ராம் ஆகியோர் நிதியும் வழங்கினர்.
இளம் வயதில் இருந்து குமரிஅனந்தன் அவர்களுடன் பயணித்த ஜவஹர் ஆறுமுகம், அவருடைய சிறப்புகளை, தனித்தன்மையை, நிறைகளை, அவரிடம் காணப்பட்ட குறைகளைப் பற்றியும் எழுதியுள்ளார். இது எனக்கு வாழ்நாள் பெருமை. இந்தப் பதிவும் ஒரு வரலாறு என்று பதிவு செய்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மூத்த அரசியல் தலைவர் குமரி ஆனந்தன் ! சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் என் கரங்களைப் பிடித்துக் கொண்டு உங்கள் உடல் நலத்தை பார்த்துக் கொள்ளுங்கள். இந்த வயதில் உண்ணா விரதம் இருக்காதீர்கள். அடுத்து நமது ஆட்சி வந்ததும் பாரதத்தாய் கோவில் எழுப்பப்படும் என்று உறுதியளித்து ஆட்சிக்கு வந்ததும் அந்த உறுதியை நிறைவேற்றிய என் அன்பிற்கினிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களே!
கேட்டதெல்லாம் கொடுக்கிற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களே!
இந்த விழாவிற்கு வருகிறபோது நான் மூன்று டப்பாக்களை கொண்டு வந்திருக்கிறேன். இந்த மூன்று டப்பாக்களில் என்ன இருக்கிறது? ஒரு டப்பாவில் 200 கிராம் தவிடு நீக்காத நெல் இருக்கிறது.
இன்னொரு டப்பாவில் தவிடு நீக்கிய அரிசி இருக்கிறது. மற்றொன்றில் 200 கிராம் தவுடு இருக்கிறது. பெருமக்கள் கூடியிருக்கிற சபையில் கேட்கிறேன். இவற்றின் விலை உங்களுக்குத் தெரியுமா?
200 கிராம் தவிடு நீக்காத நெல்லின் விலை ரூபாய் ஆறு. 200 கிராம் தவிடு நீக்கிய அரிசியின் விலை ரூபாய் ஒன்பது ரூபாய். 200 கிராம் தவிடின் விலை ரூபாய் 499. அகஸ்தீஸ்வரம் வாலிபால் குழுவில் இணைந்து நான் விளையாடிய வேலைகளில் என் தாயார் எனக்கு தவிடும் கருப்பட்டியும் கலந்த உருண்டையை கொடுப்பார்.
காரணம் என்னவென்றால் அப்போது தான் என் மகன் திடகார்த்தமாக உடல் கட்டோடு வாலிபால் போட்டிகளிலே விளையாட முடியும் என்று நம்பினார். அதுதான். தவுடில் தான் சக்தி இருக்கிறது. தவ்ட்டில்தான் ஆற்றல் இருக்கிறது. நாம் அந்த தவிடை மொத்தமாக நீக்கிவிட்டு சக்கையை சாப்பிட்டு கொண்டு இருக்கிறோம்.
கேட்டதெல்லாம் கொடுக்கிற முதலமைச்சக மு.க.ஸ்டாலின் அவர்களே! திருச்சிராப்பள்ளி தமிழ்ச் சங்க மேடையிலிருந்து குமரி அனந்தன் வேண்டுகோள் விடுகிறேன். முளை நீக்காத, தவிடு நீக்காத நெல்லை நியாய விலை கடைகள் வழியாக தமிழக மக்களுக்கு வழங்க ஆணையிடுங்கள்.
எதிர்காலத் தமிழ் சமுதாயம் திடகார்த்தமான, ஆரோக்கியமான சமுதாயமாக உருவாக நீங்கள் இந்த ஆணையை உடனே பிறப்பிக்க வேண்டும்.. வேண்டும்.. வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
– ஆதன்