பயமாக இருக்கிறது…. இன்றைய தலைமுறையினரின் போக்கு…..!!! ஏன் தெரியுமா ?

ரவி சந்திரன்

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

பயமாக இருக்கிறது…. இன்றைய தலைமுறையினரின் போக்கு…..!!!

பிடித்த ஒரே பொருள் – செல்ஃபோன்

Dhanalakshmi Srinivasan University | Samayapuram ...

படிக்காமல் பாஸ் ஆக வேண்டும்.

கஷ்டப்படாமல் வேலை கிடைக்க வேண்டும்…

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

யாருக்குமே மரியாதை தரக்கூடாது..

தனக்கு தெரியாத விஷயம் எதுவுமே இல்லை என்ற மனநிலை…

எல்லாமே உடனே கிடைக்க வேண்டும்..

காசுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம்…

சினிமா, கிரிக்கெட், செல்ஃபோன் இவைதான் உலகம்..

பெண்கள் மீது மரியாதையே இல்லை..

ஆசிரியர்கள், மூத்தோர்கள் எல்லாம் புழு பூச்சி மாதிரி…

வரலாறு, பண்பாடு, கலை, இலக்கியம், அரசியல் குறித்த அடிப்படை புரிதல்கள் கூட இல்லை‌..

ஒரு பேங்க் செலான் கூட நிரப்பத் தெரியாது..

ஒரு வரி கூட வாசிப்பதில்லை..

தப்பில்லாமல் தமிழோ, ஆங்கிலமோ எழுதவும், பேசவும் வராது…

ஒரு விஷயத்தை கோர்வையாகச் சொல்ல வராது..

வீதியில் நின்று விஷம் குடித்துக் கொண்டிருந்தாலும் அதையும் செல்பி எடுத்து போட வேண்டும்..

பள்ளிச் சீருடையுடன் கூட டாஸ்மாக் போகிற அளவுக்கு தைரியம்‌‌..

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

சின்ன வயசிலேயே வாயைத் திறந்தாலே கெட்ட வார்த்தை‌..

எப்போதும் ஏதாவது ஒரு போதையில் தன்னை மூழ்கடித்துக் கொள்ள விரும்புகிற மனநிலை..

எதிலும் நிரந்தரமாக நிலை கொள்ளாத அலைபாயும் மனம்..

ஜட்டி தெரிய பேண்ட் போட்டு, காண்டாமிருகம் மாதிரி முடிவெட்டி, எவரையும் கண்களைப் பார்த்து பேச முடியாமல் விநோதமாக வெறித்த பார்வையுடன் நடப்பது….

இந்த அபாயத்தை சமூகம் இன்னும் முழுமையாக உணரவில்லை..

பள்ளி ஆசிரியர்களுக்கும் ஓரளவுதான் தெரியும்..

பெற்றோர்களின் அளவுக்கு மீறிய செல்லம்தான் சகலத்துக்கும் காரணம்..

தங்களை அறியாமல் அவர்கள் இவர்களின் அனைத்து அடாவடிகளுக்கும் துணை போகிறார்கள்…

அவர்கள் பார்க்கிற பிள்ளைகளில்லை இவர்கள்….

இவர்கள் உள்ளுக்குள் வேறொரு ஜோம்பியாக வளர்ந்து கொண்டிருக்கிறார்கள்..

பள்ளியில் படிக்கிற போது அவன் தன்னை முழுமையாக வெளிப்படுத்துவதில்லை..

இவர்களுக்கும் அந்த இரு தலைமுறையினருக்கும் மலையளவு வித்தியாசம்..

மேற்சொன்னவை ஏதோ ஆண் பிள்ளைகளுக்கு மட்டும் என்று என்ன வேண்டாம். இது இருபாலருக்கும் பொருந்தும்.

காலம்காலமாக மூத்தோர் இளையோர் மீது வைக்கிற குற்றச்சாட்டாக எண்ணிவிடாதீர்கள்

கடந்த பல்லாயிரம் வருடங்களில் இப்படி ஒரு ரசனை கெட்ட, சுய சிந்தனையற்ற, சோம்பலும் அலட்சியமும் கொண்ட தலைமுறையை உலகம் சந்திக்கவே இல்லை.

எதிர்கால வரலாறு…..

மறுக்க முடியாத வேதனை தரும் உண்மை..

பயமாக இருக்கிறது……இன்றைய தலைமுறையின் போக்கு….

– ரவி சந்திரன்

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.