அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

உலகின் பல சாதனை மனிதர்களின் ஊற்றாய் திருச்சி தேசியக்கல்லூரி !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

2026 ஆம் கல்வியாண்டில் கால்தடம் பதிக்கும் புதிய மாணவர்களை வரவேற்கும் விதமாக, திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரியில் வரவேற்பு விழா நடைபெற்றது.
”இந்தியாவின் மேனாள் குடியரசுத் தலைவர் வெங்கட்ராமன் , இந்திய ரிசர்வ் வங்கியின் மேனள் கவர்னர் சி.ரங்கராஜன், இலங்கையின் தூதரக அதிகாரி வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட உலகின் தலைசிறந்த ஆளுமைகள் பலரை உருவாக்கிய கல்லூரி.

பேராசிரியர் இராதாகிருஷ்ணன், பேராசிரியர் சத்தியசீலன், அறிவொளி, அப்துல் காதர், முனைவர் நீலகண்டன் உள்ளிட்ட தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்களை உருவாக்கிய பெருமை தேசியக் கல்லூரிக்கு உண்டு என்றும்; ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தேசியம் என்கிற வார்த்தையைப் பயன்படுத்துவதற்குக் கூட தடை விதிக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் உருவான தேசியக் கல்லூரி தலைசிறந்த தேசியவாதிகளையும் ஆகச் சிறந்த அறிவாளிகளையும் உருவாக்கிய கல்லூரி” என்பது உள்ளிட்ட பெருமிதங்களை பட்டியலிட்டு தலைமை உரையாற்றினார் கல்லூரி முதல்வர் முனைவர் து. பிரசன்ன பாலாஜி.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

தேசியக் கல்லூரியில் வரவேற்பு விழா

”மாற்றுத்திறனாளி மாணவராக இருந்தாலும் ஸ்ரீகாந்த் அமெரிக்காவில் சாதனை படைத்து இந்தியாவிற்குப் பெருமை சேர்த்ததையும் சுந்தர்பிச்சை என்ற தமிழர் எந்தப் பின்புலமும் இல்லாமல் உலகத்திற்கே வழிகாட்டக்கூடிய கூகுள் நிறுவனத்தைத் தொடங்கியதையும் அன்சாரி அகமது சேட் என்கிற தன்னம்பிக்கையாளரின் வெற்றியையும் ” தன் பங்கிற்கு பதிவு செய்தார், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழ்நாடு காகித விற்பனையாளர் சங்கத்தின் தலைவர் முத்துமாணிக்கம்.
”தாய் தந்தையைப் போற்றி வாழக்கூடிய சமுதாயம் மட்டுமே உன்னதமான சமுதாயமாக அடையாளம் பெறும் என்பதையும் வெற்றி என்கிற சிகரத்தை அடைவதற்கு எப்போதும் தன்னம்பிக்கையோடும் தளராத முயற்சியோடும் முயன்று கொண்டே இருக்க வேண்டும்” என்பதையும் அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார். நிறைவாக கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் சுந்தர் நன்றியுரையாற்றினார்.
ஏதோ, பள்ளி படிப்பை முடித்து காலத்தின் கட்டாயத்தின் பேரில் கல்லூரியில் கால் தடம் பதிக்கிறோம் என்கிற பொதுவான புரிதலோடு வந்திருந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில், இத்துனை வரலாற்று சிறப்புமிக்க கல்லூரியில்தான் தன் பிள்ளைகளை சேர்த்திருக்கிறோம் என்ற பெருமிதத்தோடும் பூரிப்போடும் விடைபெற்றார்கள்.

யாவரும் கேளீர்

—   அங்குசம் செய்திப்பிரிவு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.