முதல்வர் கரூர் செல்லும் வழியில் நன்றி சொல்ல திரண்ட பெண்கள் கூட்டம் ! வீடியோ
முதல்வர் கரூர் செல்லும் வழியில் நன்றி சொல்ல திரண்ட பெண்கள் கூட்டம் ! வீடியோ
கரூர் திருமாநிலையூர் மைதானத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், 76 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் 01.07.2022 இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார்.
வீடியோ லிங்
https://youtube.com/shorts/zDYMWJVwt_I
திருச்சியிருந்து கரூர் செல்லும் வழியில் அவருக்கு, குளித்தலை, கிருஷ்ணராயபுரம், மாயனுார் ஆகிய இடங்களில் பிரமாண்டமான வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதற்கு இடையில் திருச்சி அருகே அல்லூர் பகுதியில் முதல்வரின் வாகனம் சென்று கொண்டு இருந்த போது….. 100க்கு மேற்பட்ட பெண்கள் கூட்டமாக வெளியே வந்து கொண்டு இருந்தனர். முதல்வர் வாகனம் செல்வதை பார்த்ததும் அந்த வாகனம் முன்பு சென்றனர். உடனே வாகனத்தை நிறுத்த சொன்ன முதல்வர் அவர்களிடம் வணக்கம் தெரிவித்துக்கொண்டே எப்படி இருக்கீங்க என்று நலம் விசாரித்தார்.
வீடியோ
https://youtube.com/shorts/zDYMWJVwt_I
அங்கிருந்தவர்களில் வனிதா என்பவர் ( இவர் சேவை ஆயத்த ஆடை மையத்தின் ஒருங்கிணைப்பாளர் ) முதல்வருக்கு வேனுக்கு முன்னே சென்று.. உங்களை மாதிரி யாருமே ஆட்சி பண்ண முடியாது சார் ! எங்களுக்கு எல்லாம் பெரிய உதவி பண்ணியிருக்க சார்… ரொம்ப நன்றி சார்…. என்று சொன்னவர்களை பார்த்து முதல்வர் எங்கிருந்து வரீங்க என்று கேட்க, உடனே வனிதா என்பவர்… நாங்க எல்லோரும் இங்க இருக்கிற சேவை ஆயத்த ஆடை பயிற்சி வேலை செய்கிறோம்… இந்த மையத்திற்கு குளித்தலை உள்ளிட்ட பகுதியில் இருந்து வேலைக்கு வருகிறார்கள் சார்… அவர்கள் தினமும் அரசாங்க பேருந்து இலவசமா வருகிறோம்…. சார். தினமும் 400 ரூபாய் வரை சம்பாதிக்கிறார்கள். இது எல்லாமே உங்களால் தான்.. சாத்தியம் ஆனாது சார்…அதற்காக நன்றி சொல்கிறோம் என்று சால்லையை பூரிப்போடு கொடுத்து நன்றி சொன்னார். முதல்வர் ஸ்டாலினும் அவர்களின் நன்றியை ஏற்றுக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தார்…