கொடுமையே… கொடுமையே   ”ஜெய் ஸ்ரீராம்” கொடுமையே…

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

கொடுமையே… கொடுமையே   ”ஜெய் ஸ்ரீராம்” கொடுமையே…

“என்ன படிக்கிற?”

உலகில் No1 ரோட்டரி இந்தியா-Vision 2030 மூலம் மாற்றும் திட்டம்-MMM முருகானந்தம் தகவல்

“பி.ஏ. செகண்ட் இயர்”

”என்ன சப்ஜெக்ட்?”

தங்க மயில் - Akshaya Tritiya Specials at Thangamayil | Golden Offers | Thangamayil Jewellery Limited

“பி.ஏ.”

“பி.ஏ.தாண்டா.. அதுல என்ன சப்ஜெக்ட்?”

“பிளெய்ன் பி.ஏ.”

சாமியார் யோகி ஆதித்யநாத் முதல்வராக இருக்கும் உத்திரப்பிரதேசத்தின் கல்லூரி மாணவன் ஒருனிடம் மீடியா நண்பர் கேட்ட கேள்வியும், அதற்கு அந்த மாணவன் சொன்ன பதிலும் தான் மேலே உள்ளது.

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

“ஆமான்டா பிளெய்ன் பி.ஏ., மசாலா பி.ஏ., தந்தூரி பி.ஏ.ன்னு சொல்ல வேண்டியது தானே. வெளங்கிரும்டா உங்க கல்வித்துறை” என நம்மாளுக முதல்கட்டத் தேர்தலுக்கு முன்பாகவே மீம்ஸ்களைப் போட்டு, பா.ஜ.க.கும்பலின் கல்வித்தரத்தைக் கழுவி ஊற்றினார்கள்.

அந்த கழுவி ஊற்றிய நாத்தம் போதாதென்று, இப்போது அதே உ.பி.யில் ஒரு பல்கலைக்கழகத்தில் நடந்த கேவலமும் கொடுமையும் மேலும் நாறியுள்ளது.

உ.பி.மாநிலம் ஜான்பூரில் உள்ளது வீர்பகதூர் சிங் பூர்வாஞ்சல் பல்கலைக்கழகம். இப்பல்கலைக்கழகத்தில் மருந்தியல் படிப்புக்கான டிப்ளோமா தேர்வில் நான்கு மாணவர்கள் பாஸானது குறித்து அதே பல்கலைக்கழகத்தின் முன்னாள்  மாணவனான திவ்யன்ஸ் சிங் என்பவனுக்கு சந்தேகம் வந்திருக்கிறது. [ அந்த லட்சணத்துல இருந்துருக்காயங்க அந்த நாலு பேரும் ]

“இவ்ய்ங்க எப்படி பாஸானாய்ங்க? பாஸாகிற அளவுக்கு இவய்ங்க ஒர்த் இல்லையே? எப்படி நடந்துச்சு இந்த பாஸ் பயங்கரம்?” என ஆர்.டி.ஐ சட்டத்தின் கீழ் பல்கலைகழகத்திடம் கேள்வி கேட்டார்.

அவருக்கு வந்த பதிலில், “நாங்க என்னப்பா பண்ண முடியும்? அந்த நாலு பேரும் ஆன்ஸர் பேப்பர் ஃபுல்லா “ஜெய் ஸ்ரீராம்.. ஜெய் ஸ்ரீராம்னு எழுதி வச்சிருந்தாய்ங்க. அதனால அவய்ங்களுக்கு 50 மார்க் போட்டாய்ங்க ரெண்டு பேராசிரியர்கள். அதனால பாஸாயிட்டாய்ங்கப்பா” என பல்கலைக்கழகம் பல்லிளித்திருக்கிறது.

”அட கேடுகெட்ட எடுவட்ட பயலுகளா” என டென்ஷனான திவ்யன்ஸ் சிங், சோஷியல் மீடியாவில் இந்தக் கேவலத்தை அம்பலப்படுத்தியுள்ளார். இதனால் வேறு வழியே இல்லாமல், அந்த இரண்டு பேராசிரியர்களை சஸ்பெண்ட் பண்ணிவிட்டு, அதே நாலு பேருக்கு மீண்டும் பரிட்சை வைக்கச் சொல்லியது பல்கலைக்கழகம். இந்த முறை அந்த நாலு பேரும் வாங்கிய மார்க் பூஜ்ஜியம்.

ராம ராஜ்ஜியத்தில் இப்படிப்பட்ட கேவக்கூத்துகளுக்கு பஞ்சமேயில்லை. பா.ஜ.க.கும்பலுக்கு கூச்சநாச்சமே இல்லை.

-கரிகாலன்          

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.