அங்குசம் பார்வையில் “ஜெயிலர்”
அங்குசம் பார்வையில் “ஜெயிலர்”
பல வருடங்களாக ரஜினி படங்களில் இருக்கும் இண்ட்ரோ சாங், அதிரடி ஃபைட், பஞ்ச் டயலாக் இப்படி எதுவுமே இல்லாமல், இந்த ‘ஜெயிலரி’ல் பூஜை அறையில் தான் ரஜினி எண்ட்ரி சீனே ஆரம்பமாகிறது, திஹார் ஜெயிலில் ஜெயிலராக இருந்து ரிட்டையர்டான பின், மனைவி ரம்யா கிருஷ்ணன், அசிஸ்டெண்ட் கமிஷனராக இருக்கும் மகன் வசந்த் ரவி, மருமகள் மிர்னாமேனன், பேரன் ரித்விக் இவர்களே உலகம் என வாழ்கிறார் ரஜினி. சாந்தமான முகம், சற்றே தளர் நடை மெல்லிய குரலில் பேச்சு, மகனுக்கும் பேரனுக்கும் ஷூ பாலிஷ் போடுவது, பேரனை யூடியூப்பராக்குவது, இன்னைக்கு தக்காளிச் சட்னி இல்லையா? என மனைவியிடம் ஏக்கத்துடன் கேட்பது, வில்லன் விநாயகத்திடம் உங்கள் நேரில் சந்திச்சு மன்னிப்புக் கேட்கிறேன். என் குடும்பத்தை டிஸ்டர்ப் பண்ணாதீங்க’ என கெஞ்சுவது பல சீன்களில் தன்னை ஒரு சராசரி குடும்பத்தலைவனாக காண்பித்து மனசை வருடுகிறார் சூப்பர் ஸ்டார்.