ஜல்சா மருத்துவர் கைது ! மருத்துவமனை உரிமையாளர் மீது வழக்குப்பதிவு !
சாத்தூரில் ஜல்சா மருத்துவர் கைது ! மருத்துவமனை உரிமையாளர் மீது வழக்குப்பதிவு !
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகர் பகுதியில் கிருஷ்ணவேணி என்பவருக்கு சொந்தமான கிருஷ்ணா மருத்துவமனை இயங்கி வருகிறது, இந்த மருத்துவமனையில் சாத்தூர் அருகே உள்ள ஒத்தையால் கிராமத்தைச் சேர்ந்த நாகலட்சுமி ( 24 ) பெண் செவிலியர் பல வருடங்களாக அங்கு பணிபுரிந்து வருகிறார்.
அதே மருத்துவமனையில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ரகுவீர் (39) இவர் குழந்தைகள் நல மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.06.09.2023 நேற்று வழக்கம்போல் இருவரும் பணிக்கு வந்துள்ளனர்,
மருத்துவர் ரகுவீர், செவிலியர் நாகலட்சுமியும் ஒன்றாக ஒரே அறையில் மருத்துவம் பார்க்கும் பணியில் இருந்ததாகவும், அந்த நேரத்தில் மருத்துவர் ரகுவீர் கேமரா நன்றாக வேலை செய்கிறதா என பாரு என சொல்லி செவிலியரின் கையை பிடித்து இழுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். உடனடியாக நாகலட்சுமி மருத்துவரின் கையை தட்டி உள்ளார், இதில் கோபமடைந்த மருத்துவர் ரகுவீர் நாகலட்சுமி தலை முடியை பிடித்து இழுத்து சரமாரியாக தாக்கியுள்ளார்.
பின்னர் இங்கு நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என நாகலட்சுமியை மிரட்டி உள்ளார். அழுது கொண்டே நாகலட்சுமி மருத்துவமனை உரிமையாளரான கிருஷ்ணவேணி இடம் மருத்துவர் ரகுவீர் என்னிடம் தவறான முறையில் நடந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.
இதற்கு மருத்துவமனை உரிமையாளர், கிருஷ்ணவேணி மருத்துவரை அழைத்து கண்டிக்காமல் அலட்சியமாக செவிலியரிடம் இதுபோல் இங்கு நடக்கத்தான் செய்யும் இதை நீ கண்டுகொள்ளாமல் விட்டுவிடு இல்லையென்றால் பணியை விட்டு சென்று விடு என்று உரிமையாளர், கிருஷ்ணவேணி கூறியதாக சொல்லப்படுகிறது,
இந்த நிலையில் தனது தாயாருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அழுது கொண்டே நடந்தவற்றை நாகலட்சுமி சொல்லி உள்ளார். பின்னர் செவிலியரின் தாயார் மருத்துவமனைக்கு வரவே மருத்துவர் ரகுவீர்ரிடம் இது தொடர்பாக கேட்டபோது சரியாக பதில் அளிக்காமல் வெளியே செல்லுங்கள் என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட செவிலியரை அவரது தாயார் அழைத்துக் கொண்டு சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். இது குறித்து செவிலியர் அளித்த புகாரின் பேரில் சாத்தூர் நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து மருத்துவர் ரகுவீரை கைது செய்தனர். மேலும் மருத்துவமனை உரிமையாளரிடமும் காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.