கே.என்.நேரு தம்பி ராமஜெயம் கொலை பொலிட்டிக்கல் மர்டர் – திமுக பொதுச்செயலாளர் பேச்சு!
கே.என்.நேரு தம்பி ராமஜெயம்
கொலை பொலிட்டிக்கல் மர்டர் –
திமுக பொதுச்செயலாளர் பேச்சு!
அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி கே.என். ராமஜெயத்தின் மகன் விநீத் நந்தன் மற்றும் அக்ஷயா கௌசிக் திருமணம் சென்னை திருவான்மியூரில் இன்று மார்ச் 16 ஆம் தேதி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
இதில் திமுகவின் பொதுச் செயலாளரும், தமிழக நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் பேசியது,
அமைச்சர் கே.என். நேருவை அனைவரும் புகழ்கின்றனர். ஆம் புகழ தான் செய்வார்கள். திருநாவுக்கரசை காலனா செலவு செய்யாமல் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறச் செய்தவர் நேரு. என்னை அப்படி வெற்றி பெற வைத்தால் நானும் அப்படி தான் சொல்லுவேன். எல்லாரும் மணமகன் வீடு, மணமகன் வீடு என்று பேசுகிறார்கள். நான் மணமகன் வீடு தான், ஆனால் இன்று நான் பெண் வீட்டுக்காரன். ஏன்னா இந்தப் பெண் சீனிவாச ரெட்டி வீட்டு பெண். என் தொகுதியில் இருக்கிற ஒரு ஊர்க்காரங்க, அந்த ஊர் எனக்கு நல்லா ஓட்டுப் போடுற ஊரு, அதனால தான் நான் இன்னைக்கு பெண் வீட்டுக்காரன். சீனிவாசன் நல்ல அமைதியானவர், சென்னை தொழில் செய்யக் கூடியவர். திமுககாரர் அதனால் தான் வந்தவுடன் ஊரிலிருந்து எத்தனை பேர் வந்தாங்கன்னு கேட்டேன்.
எல்லாரும் கே.என். நேரு சொன்ன வேலையை செய்யுறவருனு சொன்னாங்க. நானும் பாத்திருக்கேன் தலைவரும், தளபதியும் ஏதாவது வேலைனா நேரு கிட்ட சொல்லுங்கனு சொல்லுவாங்க. நேரு உடனே தம்பி ராமஜெயம் எங்கடா, உடனே ராமஜெயத்தை கூப்பிடுற…. கூப்பிட்டு பொறுப்பை ஒப்படைப்பார். இப்படி கொடுக்கும் பணியை சிறப்பாக செய்து முடிக்க கூடியவர் தான் ராமஜெயம்.மாவீரன்.
திருச்சியில் கழகத்தினுடைய கொடியை பறக்க விடுவதில் முதன்மையானவர், அவருடைய கழக்கப்பற்று, அவருடைய எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் ஓர் துர்காரியத்தை செய்து விட்டார்கள்.
நான் ஒன்று கேட்கிறேன், உலகத்தில் எத்தனையோ கேஸ்களை கண்டுபிடிக்கிறார்கள் போலீஸ், இதுவரை இந்த கேஸ்ல ஒருத்தன சந்தேகப்பட்டவது ஸ்டேஷன்ல நிறுத்தி இருக்காங்களா. “ஈஸ் த பொலிட்டிக்கல் மர்டர்” ஆனாலும் நீதி என்றைக்கு மறைந்து விடாது. இந்த மண விழாவில் தமிழக முதல்வரை கேட்டுக் கொள்கிறேன். காவல்துறை உங்கள் கையில் இருக்கிறது. போலீஸ் உங்கள் கையில், யார் குற்றவாளி என்பதை கண்டுபிடித்து, குற்றவாளிகளை நிறுத்தினால் தான் நியாயம் கிடைக்கும் என்று கூறினார்.