ஜாமீனில் வந்த முன்னாள் அமைச்சருக்கு திருச்சியில் கறி விருந்து !

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

ஜாமீனில் வந்த முன்னாள் அமைச்சருக்கு

திருச்சியில் கறி விருந்து !

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து கொண்டிருந்தபோது வாக்களிக்க வந்த திமுக பிரமுகர் ஒருவரை தாக்கியதாக அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு ஜெயக்குமார் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அவர் மீது பல்வேறு வழக்குகள் தொடர்ந்து பதிவு செய்யப்பட்டு வந்தது, இதையடுத்து அனைத்து வழக்குகளில் இருந்தும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன் கிடைத்து.

நீங்கள் வேலை பெறுவது எளிது...

இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திருச்சி கண்டோன்மென்ட் காவல்நிலையத்தில் தினமும் காலை கையப்பமிட்டு வருகிறார். இதற்காக திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பிரபல ஹோட்டலில் தங்கி உள்ளார். இந்த ஹோட்டல் தற்போது அதிமுக முக்கிய பிரமுகர் ஒருவரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றும் கூறுகின்றனர்.

3

15 நாட்கள் இந்த ஹோட்டலிலேயே முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தங்கியிருப்பார் என்றும் கூறப்படுகிறது. மேலும் அவரைப் பார்க்க தினமும் பல அதிமுகவினர் வந்து செல்கின்றனர். அதேநேரம் அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரன் நேற்று முன்தினம் கர்நாடக அரசு மேகதாது பகுதியில் அணை கட்டுவதை கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தினார், திருச்சிக்கு எப்பொழுது வந்தாலும் டிடிவி தினகரன் தற்போது ஜெயக்குமார் தங்கியிருக்கும் அதே ஓட்டலில் தங்குவது வழக்கம் ஆனால் இந்த முறை அமைச்சர் ஜெயக்குமார் அந்த ஹோட்டலில் தங்கி இருந்ததால் அவர் அந்த ஹோட்டலில் தங்கவில்லை. இது ஒருபுறமிருக்க.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திருச்சியில் இருக்கும் நிகழ்வுகளை ஒருங்கிணைப்பதில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 3 அதிமுக மாவட்ட செயலாளர்கள் இடையேயும் கருத்துவேறுபாடு நிலவுகிறதாம். ஒரு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் என் கட்டுப்பாட்டில் தான் இருப்பார் என்றும், மற்றொரு மாவட்டம் அமைச்சரை நான் பார்த்துக் கொள்கிறேன் என்றும் கூறுகின்றனராம். இப்படி முன்னாள் அமைச்சரை கவனித்துக் கொள்வதில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் இடையே அன்பு சண்டை நிகழ்கிறதாம்.

4

இந்த நிலையில் திருச்சியைச் சேர்ந்த அதிமுகவின் முக்கிய பிரமுகர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாள் அமைச்சருக்கு விருந்து வைத்து வருகிறார்கள். இந்த வரிசையில் இன்று மார்ச் 16 ஆம்பூர் ஜெயராமன் முன்னாள் அமைச்சருக்கும் மற்றும் மற்ற நிர்வாகிகளுக்கும் தனது வீட்டில் கிடா வெட்டி விருந்து வைக்கிறாராம். இப்படி முன்னாள் அமைச்சர் திருச்சியில் காலை கையெழுத்து போட்ட பிறகு மிகவும் பிசியாக இருக்கிறாராம்..

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.