பள்ளி மாணவர்களுக்கான ”வேலைத் திறன் பயிற்சி” திட்டத்தைக் கைவிட கோரிக்கை !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

குழந்தைப் பருவ மாணவர்களுக்கு வேலைத் திறன் பயிற்சி வழங்கும் திட்டத்தைச் சென்னை மாநகராட்சி கைவிட வேண்டும் என  பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோரிக்கை.

பள்ளியில் மாணவர்கள் ஓவியம் உள்ளிட்ட நுண் கலைகள்  கற்றுக் கொள்ளத் தேவையான ஆசிரியர்கள், இசை, பாடல், நாடகம் உள்ளிட்ட நிகழ் கலைகள் கற்றுக் கொள்ளத் தேவையான ஆசிரியர்கள், விளையாட்டுத் துறையில் உடற்பயிற்சியுடன் கூடிய தடகளம், கால் பந்து, கூடைப்பந்து உள்ளிட்ட குழு விளையாட்டுகள் பயிற்சி மேற்கொள்ள ஆசிரியர்கள், கணினிப் பாடம் கற்றுக் கொள்ள ஆசிரியர்கள் நிரந்தர பணியிடத்தில் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுப்பப்படுகிறது. சமமான கற்றல் வாய்ப்புகள் அனைவருக்கும் உருவாக்கித்தர வேண்டும் என்பதே சமச்சீர் கல்வியின் நோக்கம்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

பொதுச் செயலாளர்  பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு
பொதுச் செயலாளர்  பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு

இவற்றை செய்ய முன்வருவதற்கு பதிலாக  நிர்பயா நிதியில் பாதுகாப்பான நகரம் திட்டத்தின் கீழ் சித்திரத்தையல் உள்ளிட்ட தையல் வேலைத் திறன் பயிற்சிகளை வழங்க திறன் பயிற்சி வழங்குநரை நியமிக்க ஒப்பந்த புள்ளிகள் (tender) சென்னை மாநகராட்சி  கோரி உள்ளதாக பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

வேலைத் திறன் பயிற்சி எந்த வகையிலும் குழந்தைப் பருவ மாணவர்களுக்கு வழங்கக் கூடாது என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

பிஎம் ஶ்ரீ பள்ளி திட்டம் உள்ளிட்ட தேசியக் கல்விக் கொள்கை 2020ஐ ஏற்க மறுப்பதற்கான பல காரணங்களில் ஒன்று குழந்தைப் பருவ மாணவர்களுக்கு வேலைத் திறன் பயிற்சி வழங்க வழி வகுத்துள்ளதாகும்.

மாதிரிப் பள்ளிகள் உள்ளிட்ட தேசியக் கல்விக் கொள்கை 2020 யின் பல்வேறு கூறுகளை பள்ளிக் கல்வித் துறை பல்வேறு பெயர்களில் தமிழ்நாட்டில் மிகவும் பக்குவமாக நடைமுறைப்படுத்தி வருவதின் ஒரு கூறாகவே சித்திரத்தையல் உள்ளிட்ட தையல் வேலைத் திறன் பயிற்சியினைப் பார்க்க வேண்டியுள்ளது.

நிர்பயா நிதி பெண்கள் பாதுகாப்பிற்கான நிதி. பாலின சமத்துவம், பெண்கள் மீது நடத்தப்படும் பல்வேறு வன்கொடுமைகளை தடுக்க மேற் கொள்ள வேண்டிய நடவடிக்கைகளுக்கான நிதி.‌

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

குழந்தைப் பருவ பெண் குழந்தைகளுக்கு சித்திரத்தையல் உள்ளிட்ட தையல் வேலைத் திறன் வழங்குவதன் மூலம் பாதுகாப்பான நகரம் எப்படி உருவாகும் என்பதை புரிந்துக் கொள்ள இயலவில்லை.

பெண் குழந்தைகளுக்கு வேலைத் திறன் பயிற்சி அளித்தால் அவர்கள் ஏதாவது ஒரு வேலைச் செய்து தங்களைத் தாங்களே பொருளாதார ரீதியாக தற்காத்துக் கொள்வார்கள் என்பதாக பொருள் தரும் படி சென்னை மாநகராட்சியின் நடவடிக்கை அமைந்துள்ளது.

பள்ளிக்கு படிக்க வந்த குழந்தைப் பருவ மாணவர்களை அரைகுறைத் திறன் கொண்ட கூலித் தொழிலாளர்களாக வேலைச் சந்தையில் (Job Market) சிக்க வைக்கும் நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

சென்னை மாநகராட்சி பள்ளிகள் உள்ளிட்ட தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் இத்தகைய வேலைத் திறன் பயிற்சி வழங்கும் திட்டங்களைத் தமிழ்நாடு அரசு அனுமதிக்கக் கூடாது என்று   பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோருகிறது.

வேலைத் திறன் பயிற்சி வழங்கும் திட்டத்தை உடனடியாக கைவிட்டு, மாநகராட்சி பள்ளிகளில் குழந்தைகளுக்கு தொடக்க வகுப்பு முதல் பாடத்திற்கு ஒரு ஆசிரியர், வகுப்பிற்கு ஒரு ஆசிரியர், கணினி , உடற்பயிற்சி, நுண்கலை,  நிகழ்கலை ஆசிரியர்கள், அலுவல், துப்புரவு மற்றும் பாதுகாப்பு ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு ஊழியர்களை நிரந்தரப் பணியிடத்தில் நியமிக்க சென்னை மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் முன்வர வேண்டும்.

மக்களிடம் சொத்துவரி உள்ளிட்ட ஏராளமான வரிகளை வசூலிப்பதுடன் நூலகம் மற்றும் கல்விக்கான சிறப்பு வரிகளும் (cess) உள்ளாட்சி அமைப்புகள் வசூலிக்கின்றன. வரி வருவாயை நியாயமான முறைகளில் செலவு செய்ய உள்ளாட்சி அமைப்புகள் முன்வர வேண்டும்.

தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் மூலம் பள்ளி செயல்பாடுகளை மேற்கொள்ள அனுமதிப்பது நியாயமான அணுகுமுறை அல்ல. ஒப்பந்ததாரர்கள் தங்களின் கருத்தை குழந்தைப் பருவ மாணவர்கள் மனதில் விதைக்க வாய்ப்புகள் உண்டு. மாநகராட்சி அல்லது அரசு ஊழியர்களாக ஆசிரியர் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களுக்கும் நியமிப்பது மட்டுமே குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும்.

சென்னை மாநகராட்சி குழந்தைப் பருவ மாணவர்களுக்கு  வேலைத் திறன் பயிற்சி வழங்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும். சமூகநீதியின் அடிப்படையில்  சமச்சீராக அனைவருக்கும் கல்விக் கிடைப்பதை தமிழ்நாடு அரசு உறுதிப் படுத்த வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை  சார்பாக பொதுச் செயலாளர்  பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

—  பொதுப் பள்ளிக்கான மாநில மேடை .

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.