‘குளோபல் ஸ்டார்’ ராம்சரணுடன் இணைந்த பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

‘குளோபல் ஸ்டார்’ ராம்சரணுடன் இணைந்த பாலிவுட் நடிகை ஜான்வி கபூர்! ‘குளோபல் ஸ்டார்’ ராம்சரண் -புச்சி பாபு சனா- வெங்கடா சதீஷ் கிலாறு – விருத்தி சினிமாஸ் -மைத்ரி மூவி மேக்கர்ஸ்- சுகுமார் ரைட்டிங்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான #RC16 படத்தில் பாலிவுட் நடிகையும், பேரழகியுமான ஜான்வி கபூர் இணைந்திருக்கிறார்.

‘குளோபல் ஸ்டார்’ ராம்சரண் அடுத்ததாக ‘உப்பென்னா’ புகழ் இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் பான் இந்திய திரைப்படமாக உருவாகும் #RC16 படத்தில் நடிக்கிறார். முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் பெருமையுடன் வழங்கும் இந்த திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாறு தயாரிப்பாளராக களம் இறங்குகிறார். அவருடைய விருத்தி சினிமாஸ் எனும் பட நிறுவனம் சார்பில் பிரம்மாண்டமான பொருட்செலவில் இப்படம் தயாராகிறது.

திருச்சியில் டைட்டானிக் கப்பலா ? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான பொருட்காட்சி !

இந்த திரைப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நடிக்கிறார். இன்று அவரது பிறந்தநாள் என்பதால், அவரை பட குழுவினர் வரவேற்று வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் இந்த ஜோடி ரசிகர்கள் விரும்பும் வகையில் மயக்கும் கெமிஸ்ட்ரியை திரையில் வழங்குவர்.

இந்த மெகா முயற்சிக்கு ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

மக்களுடன் மண்ணச்சநல்லூர் S.கதிரவன் ! நம்ம வீட்டு எம்.எல்.ஏ. !

இயக்குநர் புச்சி பாபு ஆற்றல் வாய்ந்த திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார். அது உலகளாவிய ரசிகர்களின் கவனத்தை கவரும். இந்த திரைப்படத்தில் இடம்பெறும் ஏனைய நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் பற்றிய விவரங்களை தயாரிப்பாளர்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார்கள்.

நடிகர்கள் : ராம்சரண், ஜான்வி கபூர்

தொழில்நுட்பக் குழு

எழுத்து & இயக்கம் : புச்சி பாபு சனா
வழங்கும் நிறுவனம் : மைத்ரி மூவி மேக்கர்ஸ்
தயாரிப்பு நிறுவனம் : விருத்தி சினிமாஸ் & சுகுமார் ரைட்டிங்ஸ்
தயாரிப்பாளர் : வெங்கட சதீஷ் கிலாறு
இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.