தமிழ்நாட்டின் அதிவேக தடகள வீராங்கனைக்கு பாராட்டு !

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரியில்  மூன்றாம் ஆண்டு பொருளாதாரம் பயிலும் மாணவி செல்வி புவனேஸ்வரி 38-வது தமிழ்நாடு மாநில ஜூனியர் ஓபன் தடகள சாம்பியன்ஷிப் – 2026 போட்டியில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

“தமிழ்நாட்டின் மிக வேகமான பெண்” (Fastest Girl in Tamil Nadu) என்ற சிறப்புப் பட்டத்தைப் பெற்று தனித்துவமான சாதனையைப் படைத்துள்ளார்.   தடகளத்தில் அவரது அபாரமான செயல்திறன் , திறமை, அர்ப்பணிப்பு, கடின உழைப்பு மற்றும் சிறப்பிற்கான இடைவிடாத முயற்சிக்கு  இஃது ஒரு சான்றாகும்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

புவனேஸ்வரி
புவனேஸ்வரி

தேசியக் கல்லூரி முதல்வர் முனைவர் து. பிரசன்ன பாலாஜி அவர்களும், தேசியக் கல்லூரியின் செயலாளர் திருமிகு  கா. ரகுநாதன் அவர்களும் செல்வி புவனேஸ்வரிக்கு அவரது சிறப்பான சாதனைக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, விளையாட்டில் அவரது அர்ப்பணிப்பையும், ஈடுபாட்டையும் பாராட்டினர். அவரது எதிர்கால விளையாட்டு முயற்சிகள் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்தினர். வளரும் மாணவ மாணவிகளுக்கு புவனேஸ்வரியின் சாதனை ஒரு மாபெரும் உந்துதலாக இருக்கும் என்றும் வாழ்த்தினர்.

கல்லூரியின் அனைத்துப் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இளம் தடகள வீராங்கனைக்குத் தங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், கல்லூரிக்குப் பெருமையும் அங்கீகாரமும் பெற்றுத் தந்ததற்காகப் பாராட்டினர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.