அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

சினிமா தயாரிப்பாளரும் விவசாயி போலத் தான்!

திருச்சியில் அடகு நகையை விற்க

‘அஸ்னா கிரியேஷன்ஸ்’  சையத் தமீன் தயாரிப்பில்,  சந்தோஷ் ரயான் இயக்கத்தில்,  இன்வஸ்டிகேசன் த்ரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள படம் ‘ஜஸ்டிஸ் ஃபார் ஜெனி’.

விரைவில் திரைக்குவரவுள்ள  இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பரணி ஸ்டுடியோவில் டிசம்பர் 09- ஆம் தேதி காலை நடந்தது.

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

இந்நிகழ்வினில்  பேசியவர்கள்…..

தயாரிப்பாளர் சையத் தமீன்

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

“இங்கு என்னை வாழ்த்த வந்துள்ள அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. வஞ்சிக்கப்பட்ட தோழிக்கு நீதி வேண்டி போராடும் பெண்ணின் கதை தான் இது. இது உண்மையில் நடந்த கதை. இந்த கதையில் வரும் வில்லனுக்கு,  2017 ஆம் ஆண்டு பூந்தமல்லி கோர்ட்டில் தண்டனை வழங்கப்பட்டது.  உண்மையில் நடந்ததை வைத்து தான் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் என்பவர்  எல்லா பிஸினஸ்  போல, இன்னும் சொல்லப் போனால் விவசாயி போல பொருளை உற்பத்தி செய்து சந்தைக்கு கொண்டு வருகிறார்.   ஆனால் இடையில் உள்ளவர்கள் தான் ஆரம்பத்திலேயே  சம்பாதிக்கிறார்கள். தயாரிப்பாளருக்கு இறுதியில் தான் என்ன கிடைக்கிறது என்பதே தெரியுது. இந்த நிலை மாற வேண்டும். படம் பார்த்து உங்கள் ஆதரவைத் தந்து புதிய தயாரிப்பாளரை வாழ வையுங்கள்”.

கலை இயக்குநர்  பாலாஜி

” முதல் படம் போல் இல்லாமல், மிக அருமையாக இப்படத்தை இயக்கியுள்ளார் சந்தோஷ். படம் நன்றாக வந்துள்ளது”.

ஒளிப்பதிவாளர் வீரமணி

” இப்படத்தை கொச்சின் மற்றும் சென்னை யில் இரவு பகலாக ஷூட் பண்ணினோம். இரண்டு கலர் டோனில் ஷூட் செய்துள்ளோம். படம் மிக நன்றாக வந்துள்ளது அனைவரும் ஆதரவு தாருங்கள்”.

இசையமைப்பாளர் கௌதம் வின்செண்ட்

“என் ஊர் கேரளா. ஆனால் நான் படித்தது, வேலை பார்ப்பது சென்னையில் தான். இந்தப்படத்தில் 3 பாடல்கள் உள்ளது. மூன்றும் அருமையாக வந்துள்ளது. என் மனைவி  இரண்டு பாடல்கள்  பாடியுள்ளார். நாங்கள் எல்லோரும் புதியவர்கள் உங்கள் ஆதரவைத் தாருங்கள்”.

ஜஸ்டிஸ் ஃபார் ஜெனிநடிகர் சினான்

“இயக்குநர் சந்தோஷுக்கும் தயாரிப்பாளருக்கும் நன்றி. எனக்கு இது பெரிய வாய்ப்பு. எனக்கு கொடுத்த கேரக்டரை நன்றாக செய்துள்ளேன் என நம்புகிறேன்”

நடிகர் பிட்டு தாஸ்

“இந்த வாய்ப்பு கிடைத்தது எனது கனவு நனவானது போல இருக்கிறது. பாக்யராஜ் சார் இருக்கும் மேடையில் இருப்பது பெருமை. இது என் இரண்டாவது தமிழ்படம். நானே டப்பிங் செய்துள்ளேன் படம் பார்த்து ஆதரவைத் தாருங்கள்”.

நடிகை ஆஷிகா அசோகன்

“பாக்யராஜ் சார் போன்ற ஆளுமையுடன் இந்த மேடையை பகிர்ந்துகொள்வது மகிழ்ச்சி. சமூகத்தில் நடந்து கொண்டிருக்கிற ஒரு முக்கியமான விசயத்தை படத்தில் பேசியுள்ளார்கள். படம் முழுக்க என்னுடன் உழைத்த அனைவருக்கும் நன்றி”.

நடிகை ஐஸ்வர்யா

“இரண்டு வருடமாக இந்த மேடைக்காக  காத்துக்கொண்டிருந்தேன். இந்த வாய்ப்பை தந்த இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி. இந்தப்படத்தில் சமூகத்திற்கு மிக அவசியமான விசயத்தை பேசியுள்ளோம்”.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

இயக்குநர் சந்தோஷ் ரயான்

“இந்தப் படத்தை தயாரித்த சையத் தமீன் அவர்களுக்கு நன்றி. இப்படத்திற்கு முழு ஆதரவைத் தந்த லால் தேவ் சகாயம் சாருக்கு நன்றி. சரவணன் மசூத் இருவருக்கும்நன்றி. ஜஸ்டிஸ் ஃபார் ஜெனி, இது நம் நாட்டில் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. இது நம் தனிமனித ஒழுக்கத்தால் தான் மாறும். அதை இந்தப்படம் அழுத்தமாக பேசும். பெண் பிள்ளைகள் பாதுகாப்பு பற்றி பேசியுள்ளோம். எங்களைப் போன்ற புதியவர்களின் முயற்சிக்கு ஆதரவு கொடுங்கள் “.

ஜஸ்டிஸ் ஃபார் ஜெனிதயாரிப்பாளர்&  நடிகர் ஜே.எஸ்.கே. சதீஷ்

“இந்த விழா மிகச் சரியாக நடக்கிறது. படக்குழு மிகத் தெளிவாக எல்லாவற்றையும் செய்கிறார்கள்.  இப்படத்தை தயாரித்த சையத் அவர்களுக்கு வாழ்த்துக்கள். பிஸினஸ் பற்றி தெரிந்து, துணிந்து நல்ல படத்தை எடுத்துள்ளார்.  நான் இந்தப் படத்தை பார்த்து விட்டேன், இயக்குநர்  சந்தோஷ் முதல் படம் போல் இல்லாமல் அருமையாக எடுத்துள்ளார். நடித்த அனைவருமே மிக அற்புதமான நடிப்பை தந்துள்ளார்கள். இது போன்ற புதிய படத்தின் விழாவிற்கு வருகை தந்து ஆதரவு தரும் பாக்யராஜ் சாருக்கு தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நன்றி. இப்படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்”.

இயக்குநர் கே.பாக்யராஜ்

“தயாரிப்பாளர் சதீஷ் படம் பார்த்ததாக சொன்னார். அவர் சமீபத்தில் செய்த படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. இப்போதெல்லாம் மிகப்பெரிய வெற்றிப்படமாக இருந்தால் தான் ரீமேக் செய்கிறார்கள்.  அவர் படம் பார்த்து நன்றாக இருப்பதாக சொல்வது படத்திற்கு கிடைத்துள்ள பெரிய பாராட்டு. தயாரிப்பாளர் சையத், இயக்குநர் சந்தோஷ், மற்றும் படக்குழுவிற்கு என் வாழ்த்துக்கள். சந்தோஷ் என்னை அழைக்கும் போது, படத்தின் அவுட்லைன் சொன்னார். யாரிடமும் உதவியாளராக இல்லாமல் இருந்தாலும், மிகத்  தெளிவாக கதை சொன்னார். அதிலேயே அவர் திறமை தெரிந்தது. இங்கு தயாரிப்பாளர் கதை சொன்னது இன்னும் அருமையாக இருந்தது. க்ரைம் சப்ஜெக்ட் எனக்கு மிகவும் பிடித்த சப்ஜெக்ட்.  முதல் படத்திலேயே சந்தோஷ் அருமையாக இதை எடுத்துள்ளார். இந்தப்படத்தில் யார் யார் நடித்திருக்கிறார்கள் என்பதை விட, என்ன மாதிரி கதையை எடுத்திருக்கிறார்கள் என்பது தான் முக்கியம். இப்போதெல்லாம்  ரிவியூ  நன்றாக இருந்தால், படத்திற்கு போகலாம் என ஆடியன்ஸ் நினைக்க ஆரம்பித்து விட்டார்கள். எனவே பத்திரிகையாளர்கள் இம்மாதிரி சின்ன படங்களுக்கு நல்ல விமர்சனங்கள் தந்து ஆதரவு தாருங்கள்”.

ஒரு மருத்துவ கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட நிலையில்,  அவளது கொலைக்கான காரணத்தைத் தேடி அலைகிறாள்  அவளது தோழி.  கொலையின் பின்னணியையும், அந்த கொலைக்கான நியாயத்தை கண்டுபிடித்தாளா? கொலையை செய்தது யார்? அதன் பின்னால் உள்ள மர்மம் என்ன? என்பது தான் இப்படத்தின் கதை.

இப்படத்தில் ஆஷிகா அசோகன் முதன்மைப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மற்றும்  சாண்ட்ரா அனில், ஐஸ்வர்யா, சினான், பிட்டு தாமஸ், ரேகா, ஹரீஷ் பெராடி, நிழல்கள் ரவி ஆகியோர் நடித்துள்ளனர்.

கோயம்புத்தூர், சென்னை, மற்றும் கொச்சின் ஆகிய இடங்களில் நடத்தி ஷூட்டிங் நடந்துள்ளது.

*தொழில்நுட்பக் குழு*

இயக்கம் : சந்தோஷ் ரயான்

தயாரிப்பு – சையத் தமீன்,

ஒளிப்பதிவு:வீரமணி ,

எடிட்டிங் : சந்தீப், நந்தகுமார்

இசை : கௌதம் வின்செண்ட் ,

கலை இயக்கம்: பாலாஜி,

உடை வடிவமைப்பு :ஆன்சி ஹெர்மன்,

மேக்கப்: சுதீஷ் வன்னப்புரம்,

மக்கள் தொடர்பு :ஏ.ராஜா

—  ஜெ.டி.ஆர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.