அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

தமிழ்நாடு தேர்தல் வரலாறு – 1952 முதல் – 2021 வரை – ஒரு மீளாய்வு பார்வை !

காலப் பெட்டகம் - 17

திருச்சியில் அடகு நகையை விற்க

காலப் பெட்டகத்தில் தமிழ்நாட்டின் தேர்தல் வரலாறு 1952 முதல் 2021ஆம் ஆண்டு வரை முக்கிய தகவல்கள் அடங்கிய விவரங்களுடன் விரிவாக வெளியிடப்பட்டது. இதற்கு அங்குசம் செய்தி இதழ் வாசகர்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி.

1952 – முதல் 2021 வரை நடைபெற்றுள்ள 16 சட்டமன்ற தேர்தல்களில் மக்கள் குழப்பம் இல்லாமல் மிகதெளிவாக தங்களின் முடிவுகளை வழங்கியுள்ளனர் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகின்றது.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

காமராஜர்
காமராஜர்

1952 இல் ஆந்திரா, கர்நாடகா, கேரளவை உள்ளடக்கிய தொகுதிகளுக்கு நடைபெற்ற சென்னை மாகாணத்திற்கான தேர்தலில் மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு அறுதிப்பெரும்பான்மையைத் தரவில்லை. பிற கட்சிகளின் உதவியோடு இராஜாஜி தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டது. 1954 இல் இராஜாஜி கொண்டு வர முயற்சித்த குலக்கல்வித் திட்டத்தால் அவர் பதவி விலக நேரிட்டது. காமராஜர் முதல்வரானார்.

2026 யாவரும் கேளீர் ஏப்ரல் மாத இதழ்

1957 இல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் அறுதிப்பெரும்பான்மையை வழங்கினர். அதே நேரத்தில் 1949 இல் பேரறிஞர் அண்ணாவால் தொடங்கப்பட்ட திமுக  சுயேட்சையாக போட்டியிட்ட நிலையில் 15 தொகுதிகளை மக்கள் வழங்கினர்.

1962 இல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் மக்கள் அறுதிப்பெரும்பான்மையை வழங்கினர். திமுகவுக்கு 50 இடங்களை வழங்கி அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியாக அமர வைத்தனர்.

அறிஞர் அண்ணா
அறிஞர் அண்ணா

1967 இல் நடைபெற்ற தேர்தலில் திமுக 137 இடங்களில் வென்று, இந்தியாவிலேயே முதன்முதலாக மாநிலக் கட்சி ஆட்சிப் பொறுப்பை ஏற்றது என்ற வரலாற்றை படைத்தது. காங்கிரஸ் 51 இடங்களை மட்டுமே பிடிக்க முடிந்தது. இந்தி எதிர்ப்பு முக்கிய பிரச்சார உத்தியாக இந்த தேர்தலை தீர்மானித்தது.

1971 இல் அண்ணா மறைவுக்குப் பின் நடைபெற்ற தேர்தலில் திமுக 184 இடங்களில் வெற்றி பெற்றது. பிள்ளையார் சிலையை உடைத்தும், இராமர் படத்தை இழிவு செய்து பேசிவரும் பெரியார் ஆதரிக்கும் திமுகவுக்காக உங்கள் ஓட்டு என்று இந்து ஆங்கில நாளிதழ் வெளிப்படையாகவே பிரச்சாரம் செய்தும், திமுக இந்த வெற்றியை பெற்றது.

 நடிகர் எம்.ஜி.ஆர் :
நடிகர் எம்.ஜி.ஆர் :

1977 இல் நடைபெற்ற தேர்தலில் எம்.ஜி.இராமச்சந்திரன் தலைமையில் அதிமுக 130 இடங்களில் வெற்றி பெற்றது. திமுக 48 இடங்களைப் பெற்று எதிர்க்கட்சியாக சட்டமன்றத்தில் அமர்ந்தது.

1980 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் திமுக + காங்கிரஸ் கூட்டணி தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் 37 வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர் ஆட்சி கலைக்கப்பட்டு சட்டமன்றத்திற்கு தேர்தல் நடைபெற்றது. திமுக மற்றும் காங்கிரஸ் தலா 117 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், கூட்டணி அரசு என்ற முடிவை ஏற்காத மக்கள் அதிமுகவுக்கு பெரும்பான்மை வழங்கி எம்.ஜி.ஆரை மீண்டும் ஆட்சியில் அமர்த்தினர்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

1984 இல் நடைபெற்ற தேர்தலில், காங்கிரசுடன் கூட்டணி அமைத்த அதிமுக 132 இடங்களிலும் காங்கிரஸ் 61 இடங்களிலும் வென்று மீண்டும் ஆட்சியை அமைத்தது. தேசிய அளவில் இந்திராகாந்தியின் மரணமும், எம்.ஜி.ஆரின் உடல் நலக்குறைவும் இந்த தேர்தலின் முடிவை தீர்மானித்தன. இந்தத் தேர்தலில் கலைஞர் போட்டியிடவில்லை.

கலைஞர் கருணாநிதி
கலைஞர் கருணாநிதி

1989 இல் எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்  நடைபெற்ற தேர்தலில் அதிமுக ஜானகி அணி, ஜெயலலிதா அணி எனப் பிரிந்து தேர்தலை எதிர்கொண்ட நிலையில், ஜெ. அணி 27 இடங்களிலும்; ஜானகி அணி 2 இடங்களிலும் மட்டுமே வெற்றி பெற்றது. திமுக 150 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.

1991இல் காங்கிரஸ் தலைவர் இராஜீவ்காந்தி படுகொலைக்குப் பின், எழும்பூர் தவிர மீதமுள்ள 233 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் அதிமுக + காங்கிரஸ் கூட்டணி 232 இடங்களை கைப்பற்றியது. சென்னை துறைமுகம் தொகுதியில் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி வெற்றிபெற்றார். எழும்பூர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் பரிதி இளம்வழுதி வெற்றி பெற்றார். எதிர்க்கட்சியே இல்லாத சட்டமன்றமாக இது அமைந்தது.

1996 இல் நடைபெற்ற தேர்தலில் திமுக + தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி 212 இடங்களில் (திமுக-173+தமாக-39) வெற்றி பெற்றன. அதிமுக 4 இடங்களில் மட்டுமே வெற்றிப் பெற்றது.

ஜெயலலிதா
ஜெயலலிதா

2001 இல் நடைபெற்ற தேர்தலில், அதிமுக அறுதிப்பெரும்பான்மை பெற்று ஜெயலலிதா ஆட்சியைப் பிடித்தார். திமுக எதிர்க்கட்சியாக அமர்ந்தது.

2006 இல் நடைபெற்ற தேர்தலில் தனிப்பட்ட முறையில் திமுகவுக்கு 98 இடங்கள் மட்டுமே கிடைத்தன. எனினும் காங்கிரஸ் + பாமக ஆதரவோடு திமுக ஆட்சியில் அமர்ந்தது. இதற்கு முன்னதாக 2004 இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திமுக + காங்கிரஸ் கூட்டணி புதுச்சேரி உட்பட 40/40 வெற்றி பெற்றது. அதிமுக படுதோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

2011இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக + தேமுதிக கூட்டணி (150+29) 179 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. திமுக 23 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று எதிர்கட்சி என்ற தகுதியை இழந்தது. ஆளும் கட்சியோடு கூட்டணி அமைத்து வெற்றிபெற்ற தேமுதிக எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது.

2016 இல் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் அதிமுக ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டது. அதிமுக 134 இடங்களில் வெற்றி பெற்றது. திமுக 89 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனாலும், அதிமுக – திமுக இடையே வாக்கு வித்தியாசம் 1.5% மட்டுமே. மூன்றாவது அணியாக போட்டியிட்ட மக்கள் நலக் கூட்டணி யால் திமுக வெற்றியைப் பறிகொடுத்தது.

2021 இல் நடைபெற்ற தேர்தலில், 2016 இல் ஜெயலலிதா மறைவுக்குபின்,  தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அதிமுகவை திமுக வெற்றி கொண்டது.

2026 இல் நடைபெறும் தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம், அய்யா பாமக+சசிகலா கூட்டணி, தமிழக வாழ்வுரிமை கட்சி கூட்டணி என பலமுனை போட்டி நடைபெறுகின்றது. இதற்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 23ஆம் நாள் நடைபெறுகின்றது. வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் நாள் நடைபெறுகின்றது. யார் ஆட்சியில் அமர்வது என்பது வாக்கு எண்ணிக்கை நாளின்போது தெளிவாகிவிடும்.

—            ஆதவன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.