கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரியில் உலக காடுகள் தினம் மற்றும் உலக தண்ணீர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி !

நீரின் பயன்பாட்டு முறை, சிக்கனம், பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு நம் வீட்டிலிருந்தும் தொடங்கிப் பள்ளிகள் தோறும், கிராமங்கள் தோறும் கொண்டு சேர்க்கப்படவேண்டும்.

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரியில் உலக காடுகள் தினம் மற்றும்
உலக தண்ணீர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி !

ண்ணீர் சுற்றுச் சூழல் மாணவர் மன்றம் சார்பில் கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரியில் சார்பில் உலக காடுகள் தினம் மற்றும் உலக தண்ணீர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

திருச்சியில் டைட்டானிக் கப்பலா ? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான பொருட்காட்சி !

நிகழ்வில் கல்லூரியின் செயலர் தந்தை அருள் பணி.லூயிஸ் பிரிட்டோ தலைமையில் முதல்வர் ப.நடராஜன் முன்னிலையில் நடைபெற்றது.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

மக்களுடன் மண்ணச்சநல்லூர் S.கதிரவன் ! நம்ம வீட்டு எம்.எல்.ஏ. !

தண்ணீர் அமைப்பு செயல் தலைவர்  கே.சி.நீலமேகம் மாணவர்களிடம் பேசுகையில் நம்மிடமிருந்து மாற்றம் துவங்க வேண்டும். விருந்துகளுக்குச் செல்கிறோம். அங்கு வழங்கப்படும் பாட்டில் தண்ணீரில் பாதிக்குடித்து விட்டு மீதமுள்ள தண்ணீரை அப்படியே விட்டுவிட்டு வந்துவிடுவோம். தெருக்குழாய்களில் பல சரியாக மூடப்படாமல் தண்ணீர் வழிந்து ஓடும் அவலத்தைக் கண்டும் காணாமல் செல்கிறோம். இந்த நிலை மாறவேண்டும். நீரின் பயன்பாட்டு முறை, சிக்கனம், பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு நம் வீட்டிலிருந்தும் தொடங்கிப் பள்ளிகள் தோறும், கிராமங்கள் தோறும் கொண்டு சேர்க்கப்படவேண்டும். மழை நீர்சேமிப்பை தீவிரப்படுத்த வேண்டும். நீர் சேமிப்பு பயன்பாடு, நீரினைப் பயன்படுத்தும் முறை குறித்து உரையாற்றினார்.

தொடர்ந்து தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றத்தின் செயலர் பேரா.கி. சதீஷ் குமார் உறுதி மொழி வாசித்தார். மாணவர்கள் உறுதி மொழி ஏற்றனர். நீர்நிலைகளை பராமரித்து பாதுகாத்திடவும் திறந்த வெளி குப்பைத் தொட்டியாக மாற்றிடமல் நீரைச் சேமித்து நீர் நிலை ஆக்கிரமிக்காமல் நிலத்தடி நீரை பாதுகாத்திட வேண்டும் என்றும் நீர் குறித்த விழிப்புணர்வும் நீர் மேலாண்மையில் நாம் சிறப்புடன் செயலாற்றினால் மட்டுமே எதிர்காலத் தலைமுறையை மீட்டெடுத்து காப்பாற்ற முடியும் என்றும் உறுதி மொழி எடுக்கப்பட்டது.

நிகழ்வில் பேரா. இல .கோவிந்தன் மற்றும் பிறதுறை சார் இருபால் பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.