தன்னிறைவை நோக்கிய பயணத்தில் திருச்சி இனாம்மாத்தூர் கிராமம் !

அரசு பள்ளியில் காற்றாலை பால் உற்பத்தியாளர்கள் சங்கம், விவசாயம் மற்றும் சுய தொழில் முன்னேற்றம் என தொடர்ந்து இக்கிராமம் தன்னிறைவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது ...

0

லக மகளிர் தின விழா -2024 , பாரம்பரிய மக்கள் தின விழா மற்றும் உலக தண்ணீர் தினம் திறன் வளர்ப்பு பயிற்சி சான்றிதழ் தையல் பயிற்சி வழங்கும் விழா மணிகண்டம் ஊராட்சியில் உள்ள இனாம்மாத்தூர் கிராமத்தில் உள்ள சமூதாய மன்றத்தில் நடைபெற்றது.

2 dhanalakshmi joseph
4 bismi svs

இவ்விழாவில் மணிகண்டம் ஒன்றிய பெருந்தலைவர் கமலம் கருப்பையா தலைமை தாங்கினார். விரிவாக்கத்துறையின் இயக்குநர் அருள்முனைவர் சகாயராஜ் சே.ச தொடக்கவுரையாற்றினார். ரோட்டரி சங்க ஆளுநர் ரொட்டேரியன் கார்த்திக் சிறப்பு விருந்தினாராக கலந்து கொண்டார். மக்கள் கல்வி நிறுவனத்தின் மேலாளர் இளையராஜா வாழ்த்துரை வழங்கினார்.

இவ்விழாவில் இனாம்மாத்தூர் ஊராட்சி தலைவர் பாரதிதாசன் மக்கள் கல்வி நிறுவன இயக்குநர் மகேஸ்வரி, ரோட்டரி சங்க உறுப்பினர்கள் சீனிவாசன், எட்வின் ஆரோக்கியராஜ், துணை ஆளுநர் திருகுமார், தலைவர் மணிகண்டன்,  பாலாஜி தையல் பயிற்சி ஆசிரியர்கள் ராணி, தமிழ்ச்செல்வி, பத்மாவதி மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். விரிவாக்கத்துறை முதுநிலை ஒருங்கிணைப்பாளர் லெனின் வரவேற்றார். முடிவில் தமிழ்ச்செல்வி நன்றி கூறினார். இனாம்மாத்தூரை சேர்ந்த 50 பெண்களுக்கும் எரங்குடி கிராமத்தை சேர்ந்த 20 பேருக்கும் தையல் பயிற்சி சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இவ்விழாவின் முடிவில் தண்ணீரும் சிக்கனமும் என்ற குறும்படம் காண்பிக்கப்பட்டது.

- Advertisement -

- Advertisement -

கல்லூரியின் பணியமர்வு இரண்டின் மூன்றாமாண்டு ஆங்கிலத்துறை மாணவர்கள் இவ்விழாவினை ஏற்பாடு செய்திருந்தார்கள். மாதிரி கிராமமாக உருவாக்க ஏற்கெனவே அரசு பள்ளியில் காற்றாலை பால் உற்பத்தியாளர்கள் சங்கம், விவசாயம் மற்றும் சுய தொழில் முன்னேற்றம் என தொடர்ந்து இக்கிராமம் தன்னிறைவை நோக்கி சென்று கொண்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.