தவெகவுக்குத் தாவ திமுகவை பிராண்டிய கண்ணன் ரவி !
கே .ஆர்.ஜி .குரூப் கண்ணன் ரவி தயாரிப்பி ல் சாம் ரோட்ரிக்ஸ் டைரக்ஷனில், பிரபுதேவா-வைகைப்புயல் வடிவேலு காம்பினேஷனி ல் உருவாகியிருக்கும் படம் ‘பேங் பேங்’. இந்த தீபாவளிக்கு ரிலீஸ் பண்ணப்போவதாக இரண்டு மாதங்களுக்கு முன்பே சொன்னார் கண்ணன் ரவி . ஆனால் தனது மகன் தீபக் ரவியின் திருமண வேலைகள் இருந்ததால், ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. ஆனாலும் தீபாவளிக்கு முதல் நாள் படத்தின் புரமோஷன் என்ற பெயரில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் கண்ணன் ரவி .
சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்த இவ்விழாவில் படத்தின் டைரக்டர் சாம் ரோட்ரிக்ஸ், படத்தின் நடிகைகள் அனு கீர்த்தி வாஸ், யாவீ ஜெயின், நடிகர் பப்லு பிருத்வி ராஜ், எடிட்டர் ஆண்டனி , காஸ்ட்யூம் டிசைனர் ஸ்வரூபா ஆகியோர் கலந்து கொண்டனர். பிரபுதேவாவும் வடிவேலுவும் வரவில்லை . படத்தின் டிரெய்லரோ , பாடலோ திரையிடப்படவில்லை .
அனுகீர்த்தி வாஸ், யாவீ ஜெயி ன், ஸ்வரூபா , ஆண்டனி ஆகி யோர் படத்தைப் பற்றி எதுவும் பேசாமல் கண்ணன் ரவிக்கும் சாம் ரோட்ரிக்ஸுக்கும் நன்றி சொன்னார்கள்.
சாம் ரோட்ரிக்ஸ் பேசும் போது, “இன்றைக்கு கண்ணன் ரவி சாரைப்பற்றித்தான் ஏராளமான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ’ஜோக்கோ ’ நிறுவனத்தின் ஸ்ரீதர் வேம்பு ஐயரைப்போலத் தான் கண்ணன் ரவி சாரும். இதற்கு மேல் தெளிவான விளக்கத்தை இங்கே அவரே சொல்வார்” பக்கா ப்ளானுடன் மைக் முன் வந்தார் கண்ணன் ரவி எடுத்த எடுப்பிலேயே , “நான் எந்த அரசியல்வாதிக்கும் பினாமி இல்லை . அப்படி நான் இன்னாருக்கு பினாமின்னு நிரூபிச்சா அவர்களுக்கு 5 கோடி தருகிறேன்.
நான் சம்பாரிக்கும் பணத்தில் ஒருபகுதியை மக்களுக்காக செலவு செய்கிறே ன். இன்னைக்குக் கூட எனது ஊரான திட்டக்குடி மக்களுக்கு அஞ்சு கண்டெய்னர்களி ல் தீபாவளிப் பொருட்கள் அனுப்பியிருக்கேன்.

இந்தியாவில் சம்பாரித்து வெளி நாட்டில் பதுக்கவில்லை . துபாயில் சம்பாரித்து தமிழ்நாட்டில் தான் செலவு செய்கிறேன். இந்தியாவில் அரசாங்கங்களுக்கு வரி வருவாய் தான் ஆதாரம். ஆனால் நம்ம நாட்டில் நல்ல ரோடு இல்லை , குடிநீ ர் இல்லை . நா ன் மணல் வி யாபா ரத்திலும் சம்பாரிக்கிறே ன். இல்லீகலைக் கூட லீகலா பண்ணுவேன்.
இந்தப் படத்திற்கு நாங்கள் இந்தோனேஷியா போயிருந்த போ து, இருபது வருடங்களுக்குப்பிறகு அங்கு எரிமலை வெடித்தது. அதை யும் ஷூட் பண்ணியிருக்கோம். அந்த எரி மலையைப்போலத்தான் நான். எப்போது வெ டிப்பேன்னு எனக்கே தெரியாது. எனது மகன் திருமணம் வைதீக முறைப்படி, புரோகிதர்கள் மந்திரம் ஓத நடந்ததை விமர்சிக்கிறார்கள். அதற்கு திரு.துரை முருகனையும் விமர்சிக்கிறார்கள். அது அவரின் கட்சிப் பி ச்சனை .
நான் மாப்பிள்ளை வீட்டுக்காரன், அதிலும் இந்து மத நம்பிக்கை கொண்டவன். அதனால் தான் ஐயர்கள் மந்திரம் ஓத திருமணம் நடந்தது” என பேசிக் கொண்டே வந்தவர், திமுகவினர் யாரும் கோவிலுக்குப் போனதில்லையா ? அவர்கள் வீ ட்டுப் பெண்கள் சாமி கும்பிடுவதில்லையா ? என சகட்டுமேனிக்கு திமுக மீது பாய்ந்து பிராண்டினார் கண்ணன் ரவி .

அதன் பின் பத்திரிகையாளர்கள் கே ட்ட கேள்விகளுக்கு சம்பாந்த சம்பந்தமே இல்லாமல் திடீர் திடீரென திமுகவை பிரா ண்டிக் கொண்டே இருந்தார்.
இதுல பெருங்கொ டுமை என்னன்னா … சில கேள்விகளுக்கு திமுகவை அட்டாக் பண்ணி கண்ணன் ரவி பதில் சொல்லி முடித்தவுடன் சில மீடியாக்காரர்களே கை தட்டி, விசில் அடித்தது தான். இதைத்தான் திட்டக்குடி கண்ணன் ரவி யும் எதிர்பார்த்திருப்பார் போல.
” போ தும் இத்தோட முடிச்சுக்கிருவோம்” என விழா தொகுப்பாளினி கவிதா சொன்ன பிறகும் அரை மணி நேரம் தம் கட்டிப் பேசினா ர் கண்ணன் ரவி மேற்படி கண்ணன் ரவி பேசி முடித்த சில நிமிடங்களிலேயே சோஷியல் மீடியா க்களில் “டேய் நீ யார்டா ? எங்க கட்சி யப் பத்தி ப் பே சுற அளவுக்கு நீ பெரிய புடுங்கியா ? திமுக மீது கை வை க்க நி னைச்ச எவனும் உருப்பட்டதேயி ல்லை . உன்னோட யோக்கி யதையை நாங்க சொல்லவா ? நீ துரை முருகனுக்குத் தான் சம்பந்தி .
அத்தோட நிறுத்திக்க. இல்லேன்னா உன்னோட கேவலமான சங்கதிகளை வெளியே எடுத்துவிட்டோம்னா நீ தாங்கமாட்ட” என திமுகவினர் சோஷி யல் மீடியாக்களில் கொந்தளிக்க ஆரம்பித்துவிட்டனர்.

கண்ணன் ரவியின் பேட் ஃப்ளாஷ்பேக் நமக்கும் ஓரளவு தெரியும். ஆனால் இப்ப திடீர்னு திமுக மீது ஏன் பாய்ந்து பிராண்டுறார்னு நம்ம நட்பு வட்டத்தில் விசாரிச்சப்பதா ன், “ சில மாதங்களுக்கு முன்பு திட்டக்குடியில தவெக கொடியை ஏத்தி வச்சு, அங்கே இருக்கும் அந்தக் கட்சியின் புள்ளிகளுக்குலம்பா
ஒரு அமவுண்ட் கொடுத்தாரு இப்ப கல்யாணம் ஆன கண்ணன் ரவியி ன் மகன் தீபக் ரவி . சீக்கி ரமே தவெகவுக்குத்தான் இப்படிப் பேச ஆரம்பிச்சிருக்காரு. ஆனா ல் இது அவருக்குத் தான் ஆபத்து” என்கிறார்கள்”
சாம் ரோட்ரிக்ஸ் சொன்னது போல ஸ்ரீதர் வேம்பு தான் கண்ணன் ரவி . அந்த ஸ்ரீதர் வேம்பு யார்? காவிகளின் காலடிகளை க் கழுவும் அவரி ன் கேடுகெட்ட குணம் என்ன? இதெல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரி யும்.
— ஆண்டவர்






Comments are closed, but trackbacks and pingbacks are open.