சினிமா பாணியில் நியோமேக்ஸில் பணத்தை இழந்த காரைக்குடி பழனியப்பன்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

சினிமா பாணியில் நியோமேக்ஸில் பணத்தை இழந்த காரைக்குடி பழனியப்பன்!

காத்தவராயன் திரைப்படத்தில், நகைச்சுவை நடிகர் வடிவேலுவுக்கு பாட்டி செத்து கிடைத்த எல்.ஐ.சி. பணம் மூனு இலட்சத்தை, வட்டிக்கு விடச் சொல்லி உசுப்பேத்துவார் அல்வா வாசு.
“வட்டிக்கு விட்டா வட்டி குட்டி போட்டு… மூணு இலட்சம் முப்பது இலட்சமாகும்… முப்பது இலட்சம் மூணு கோடியாகும். வேலைக்கே போகாம, வேர்க்காம மரத்தடியில கட்டில போட்டு காலுமேல காலுபோட்டு சம்பாரிச்சிட்டிருக்கலாம் னே”னு ரைமிங் பேச்சை நம்பி பணத்தை இழந்து நிற்பார் வடிவேலு. நியோமேக்ஸ் பண்ற பிசினஸ பார்த்து வடிவேலு அந்த காமெடிய வச்சாரா? இல்லை, வடிவேலு காமெடியை பார்த்து நியோ மேக்ஸ் தன்னோட பிசினஸ ஆரம்பிச் சாய்ங்களானு அம்புட்டு குழப்பமாகி போச்சு.

Dhanalakshmi Srinivasan University | Samayapuram ...

காரைக்குடி பழனியப்பன்
காரைக்குடி பழனியப்பன்

நியோமேக்ஸ் நிறுவனத் திடம் மூணு இலட்சம் ஏமாந்த காரைக்குடி பழனியப்பனின் கதை இது. “கட்டுமான தொழில் செய்திட்டு இருக்கேன். மணல், செங்கல், சிமெண்ட், தூசி, மழை, வெயிலில் கிடந்து உடம்பை கெடுத்து சிறிது சிறிதாக சேர்த்த பணம் மூணு இலட்சத்தை நியோமேக்ல போட்டேன். காரைக்குடி கிளையில இருந்து சக்திவேல் என்பவர்தான் வந்து பேசுனாரு. முதலீடு மூனு இலட்சம். கட்டுற பணத்துக்கு முதல்ல மூலக்கரைப்பட்டி கார்லாண்டோ சிட்டி ஜி பிளாக்கில்ஷ 1200 சதுர அடி எடத்த உங்க பேர்ல பதிஞ்சி கொடுத்துருவோம். அப்புறம், 54 மாசத்துக்கு மாசா மாசம் 4500 ரூபாய் வந்துடும். 54 மாசம் முடிஞ்ச பிறகு, இடமா வேணும்னாலும் எடுத்துக்கலாம். இடம் வேணாம், பணமா வேணும்னா ரீ சேல் கேரண்டியாக 6 இலட்சத்தை காசா வாங்கிக்கலாம்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

இப்போ மூனு இலட்சம் போட்டீன்னா, 54 மாசம் கழிச்சி கணக்கு பார்த்தா, வட்டிப் பணமே 2,43,000 வந்துரும். அப்புறம் ரீ சேல் கேரண்டியா 6 இலட்சத்தையும் சேர்த்தா ஆக மொத்தம் 8,43,000 கிடைக்கும்னு அவங்க சொன்னத நம்பி என் பொண்டாட்டி பேர்ல 03.04.2021 அன்னைக்கு 3 இலட்சம் முதலீடு செஞ்சேன்.

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS


அதுக்கு ஆதாரமா, RECARIO PROPERTIES PRIVATE LIMITED  அப்படின்ற பேர்ல, 08.04.2021 தேதி போட்டு, RECEIPT -னு ஒரு சீட்டு கொடுத்தாங்க. மூனு மாசமா வட்டிப் பணம் வரலை. சக்திவேலுகிட்ட கேட்டா, ஒரு மாசத்துல எல்லாம் சரியாயிடும்னு சொல்றாரு. நியோமேக்ஸ் கம்பெனி பத்தி பேப்பர்ல எல்லாம் நியூஸ் வரவும், என் பணத்தை மீட்டுக் கொடுங்கனு மனு கொடுக்க வந்திருக்கேன்.

வீட்டை பேங்க்ல அடமானம் வச்சி பணம் போட்டிருக்கேன். மாசம் தவணை கட்டலைனா இப்போ இருக்க வீடும் போயிடும்னு புலம்புகிறார்” காரைக்குடி பழனியப்பன்.

வீடியோ லிங்:

– வே.தினகரன், ஷாகுல், படங்கள் : ஆனந்த்

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.