பல மாநிலங்களில் இருந்து கர்நாடக தேர்தலுக்கு பார்வையாளர்களாக சென்ற காங்கிரஸ் கட்சி பிரமுகர்களுக்கு இந்த வெற்றியில் துளி அளவு கூட பங்கு இல்லை !
பல மாநிலங்களில் இருந்து கர்நாடக தேர்தலுக்கு பார்வையாளர்களாக சென்ற காங்கிரஸ் கட்சி பிரமுகர்களுக்கு இந்த வெற்றியில் துளி அளவு கூட பங்கு இல்லை !
கர்நாடகாவில் உள்ள சித்தராமையா, டி.கே. சிவகுமார் போன்ற தலைமை பல மாநிலங்களில் இல்லை.
தமிழ்நாட்டிலும் அவர்களை போன்று தலைமையை உருவாக்கி, அவர்களை முன்நிறுத்தி தேர்தலை சந்தித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
கார்த்திக் சிதம்பரம்.
காரைக்குடியில் பேட்டி.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த கார்த்தி சிதம்பரம் கூறியதாவது.
மேலும்,
சட்டமன்ற தேர்தல் முடிவுகள் பாராளுமன்றத்தில் எதிரொலிக்கும் எனக் கூற முடியாது என்றவர்,
கர்நாடக தேர்தல் வெற்றியில் இருந்து காங்கிரஸ் கட்சி கற்றுக்கொள்ள பாடங்கள் அதிகம் உள்ளதாகவும் தெரிவித்தார்.
சென்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது, மகளிருக்கு ஆறாயிரம் கொடுப்போம் என்ற காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதி உரிய நேரத்தில் மக்களிடம் சென்று சேராததால் தோல்வியை சந்தித்தோம் என்றவர், தற்போதைய தேர்தலில்,
கர்நாடகத்தில் தேர்தல் பணியினை ஆறு மாதங்களுக்கு முன்பே தொடங்கி திட்டங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்த்ததால் மகாத்தான வெற்றி கிடைத்ததாகவும் தெரிவித்தார்.
கர்நாடகா காங்கிரஸின் வெற்றி தமிழ்நாடு காங்கிரசுக்கு ஒரு மிகப்பெரிய பலம் என்ற
கார்த்திக் சிதம்பரம்,
கர்நாடக தேர்தல் வெற்றியை தேசிய கண்ணோட்டத்துடன் பார்க்க முடியாது.
என்னைப் பொருத்தவரை மாநிலத்தின் கண்ணோட்டமாக தான் பார்க்கிறேன் என்றும் கூறியவர்,
பல மாநிலங்களில் இருந்து பார்வையாளர்களாக சென்ற காங்கிரஸ் கட்சி பிரமுகர்களுக்கு இந்த வெற்றியில் துளி அளவு கூட பங்கு இல்லை என்றும் கூறினார்.
பாலாஜி