கல்வி மட்டுமல்ல, குழந்தைகள் ஆடும் விளையாட்டும் இனி … காவிமயம் தான் !
All India Council for Technical Education (AICTE) தேசிய கல்விக் கொள்கை – 2020 க்காக 75 வகையான உள்நாட்டு விளையாட்டுகளை ‘பாரதீய விளையாட்டுகள்’ என்ற பெயரில் அடுத்த ஆண்டு பள்ளிகளில் அறிமுகம் செய்யப்போவதாக செய்திகள் சொல்கின்றன. இந்திய சிந்தனை முறை என்ற சொல்லப்படும் இந்த பெரும்பாலான விளையாட்டுகளின் பெயர்கள் இந்தியில் தான்.
அவற்றுள் சில:
லங்டி-தாங், பட்டாங் உத்தாயன், சீத்தா உத்தர், பகாடி பாட், ஜட்டுயி பித்தாரே, மர்தாணி கேல், சந்தால் கட்டி அல்லது கில்லி தண்டா, யுபி லக்பி. இதில் கில்லி தண்டா, நம்ம ஊர் கிட்டிப்புள் தான். ஆனால் இதை மகாபாரதத்தில் கிருஷ்ணன் அர்ஜுனன் பீமன் ஆகியோர் ஆடியதாக AICTE இணைய தளம் சொல்கிறது.
இந்த விளையாட்டுகளில் மற்றொரு முக்கிய விளையாட்டு சர்ப்-ராஜூ. அதாவது பாம்பு ஏணி விளையாட்டு தான். இதில் 68 கட்டங்களுக்கு ‘வைகுந்தா’ என்று பெயர் இட்டிருக்கிறார்கள். சில கட்டங்களுக்கு ‘மோகா’ , சில கட்டங்களுக்கு ‘காமா’ , என்றும் பெயராம்! வைகுந்தத்துக்கு ஏறிப்போகும் கட்டங்களுக்கு ‘கர்மா’ வாம் பெயர்!
கல்விமட்டுமல்ல, குழந்தைகள் ஆடும் விளையாட்டும் காவிமயம் தான்.
– எழுத்தாளர் அழகிய பெரியவன்