கொளுத்திப்போட்ட அரவிந்த் கெஜ்ரிவால்..! பதைபதைப்பில் பா.ஜ.க..!

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

கொளுத்திப்போட்ட அரவிந்த் கெஜ்ரிவால்..!
பதைபதைப்பில் பா.ஜ.க..!
———–

திகார் ஜெயிலில் ED க்கு எதிராக
ஜாமீன் பெற்றுவந்த
அரவிந்த் கெஜ்ரிவால்
2 குண்டுகளை கொளுத்திப்போட்டார்

இந்த வார அங்குசம் வார இதழில்…

1. பா.ஜ.க வெற்றிபெற்றால்
மோடிக்குப் பதிலாக அமித் ஷா
பிரதமர் ஆக்கப்படுவார்.

2. தேர்தலுக்குப் பிறகு
உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்
பதவி நீக்கம் செய்யப்படுவார்.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

பா.ஜ.க வில்
75 வயதுக்கு மேற்பட்டவர்கள்
முக்கிய அரசு பதவி வகிக்கக் கூடாது
என்ற நடைமுறையை சுட்டிக்காட்டி
மோடிக்குப் பதிலாக அமித் ஷா வருவார்
என்று அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார்.

பா.ஜ.க வின் மூத்த தலைவர்கள்
அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஜேபி நட்டா
ஆகியோர் இதற்கு பதில் அளித்தனர்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

பா.ஜ.க வில்
75 வயதுக்கு மேற்பட்டவர்கள்
முக்கிய அரசு பதவி வகிக்கக் கூடாது
என்ற விதி கிடையாது என்று
அவர்கள் கோரஸாக சொன்னார்கள்.

ஆனால்,
அத்வானி, முரளி மனோகர் ஜோஷி
உள்ளிட்ட பழைய பெரும் தலைகள்
75 வயது விதியைக் காட்டித்தான்
ஓரம் கட்டப்பட்டனர் என்ற வரலாற்றை
இவர்கள் மறைத்துப் பேசினார்கள்.

அதே வேளையில்,
இவர்கள் யாருமே
யோகி ஆதித்யநாத்
தூக்கி வீசப்படுவார் என்ற
அரவிந்த் கெஜ்ரிவாலின் கருத்தை
மறுத்துப் பேசவில்லை.

அதன் மூலமாக
மோடியா? யோகியா? என்ற
பெரும் உள்கட்சி சண்டையை
பா.ஜ.க.வுக்குள் தூண்டி விட்டுள்ளார்
அரவிந்த் கெஜ்ரிவால்.

உ.பி.யில்
பா.ஜ.க வெற்றிபெறும் தொகுதிகளை
குறைப்பதற்கு மறைமுகமாகக்
களம் இறங்கியுள்ளது யோகியின் கூடாரம்.

Xபக்கத்தில் – திருஞானம்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.