அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அங்குசம் பார்வையில் ‘கெணத்த காணோம்’ 

திருச்சியில் அடகு நகையை விற்க

தயாரிப்பு : எஸ்.ஆர்.ரமேஷ் பாபு, ஜெகன் பாஸ்கரன். தமிழ்நாடு ரிலீஸ் : ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்.  டைரக்‌ஷன் : சுரேஷ் சங்கையா. ஆர்ட்டிஸ்ட் : யோகிபாபு, லவ்லின் சந்திரசேகர், கவிஞர் விக்கிரமாதித்யன், ஜார்ஜ் மரியான், ரேச்சல் ரேபேக்கா, ராமகிருஷ்ணன், ஹலோ கந்தசாமி, கவிதா பாரதி, ஒளிப்பதிவு: தியாகராஜன், இசை : நிவாஸ் கே.பிரசன்னா, எடிட்டிங் : ராமர், பி.ஆர்.ஓ. : ஸ்ரீவெங்கடேஷ்.

பல ஆண்டுகளாக மழையே பெய்யாமல் குடிதண்ணீருக்கே வழியில்லாமல் வறண்ட பூமியாகிறது இராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் கோடங்கிப்பட்டி கிராமம். [இப்பெல்லாம் இராமநாதபுரம் மாவட்டத்தில் அப்படியெல்லாம் கிடையாது என்பது தான் உண்மை] இருந்தாலும் எடுத்த சினிமாவில் உள்ளதை ஓரளவு சொல்லிட்டு அதிகம் விமர்சக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளோம். ஏன்னா இந்தப் படத்தின் டைரக்டர் சுரேஷ் சங்கையா மறைந்து இரண்டு ஆண்டுகளாகிவிட்டன. மறைந்தவரின் படைப்பை அதிகம் விமர்சிப்பது அறம் அல்ல.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

Kenatha kanom movie, அரசாங்கத்திடம் மன்றாடியும் பலன் இல்லை என்பதால், பெருசு ஒருத்தரின் உதவியுடன் அந்த கிராமம் முழுவதும் நீரோட்டம் பார்க்க்கிறார்கள் மக்கள். அந்த கிராமத்துக் கோவில் பூசாரி மணிவாசகத்தின் [ யோகிபாபு] வீட்டருகே இருக்கும் காலி இடத்தில் நீரோட்டம் தெரிந்து கிணறு வெட்ட ஆரம்பிக்கிறார்கள். அப்படி கிணறு வெட்டும் போது டைனோசர் எலும்புக்கூடுகள் கிடைக்கிறது. அதன் பிறகு அந்தக் கிராமத்தையே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து  அகழ்வராய்ச்சிப் பணிகளை ஆரம்பிக்கிறது அரசாங்கம். அந்தக் கிணற்றின் கதி என்ன என்பதன் க்ளைமாக்ஸ் தான் இந்த ‘கெணத்த காணோம்’.

Kenatha kanom movie, கதையின் நாயகனா? காமெடியனா? என்ற குழப்பம் யோகிபாபுவுக்கு வந்திருக்குமோ என்னமோ? படம் முழுக்க அந்தக் குழப்பம் அப்பட்டமாக தெரிகிறது.  வருகிறார், நாலு வசனம் பேசுறார், போகிறார். ரிப்பீட்டு. பார்க்கவே பரிதாபமாக இருக்கிறார் ஹீரோயின் லவ்லின் சந்திரசேகர்.

முதல்வர் பிறந்தநாள்

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

Kenatha kanom movie, அகழ்வாராய்ச்சியாளராக ரேச்சல் ரெபேக்கா, கலெக்டராக ஜார்ஜ் மரியான், அமைச்சராக கவிதா பாரதி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஹலோ கந்தசாமியின் டயலாக் டெலிவரிதான் நமக்கு இருக்கும் ஒரே ரிலாக்ஸ்.

அகழ்வாராய்ச்சிக்கெல்லாமா மக்களை அடித்து துன்புறுத்தும் அரசாங்கம்? தமிழ்நாட்டில் இதெல்லாம் எங்க எப்ப நடந்தது? படம் மொத்தமும் டாக்குமெண்ட்ரித்தனமாக இருப்பதால் சினிமாவைக் காணோம்.

அங்குசம் பார்வையில் ‘கெணத்த காணோம்’  40/100

—    ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.