‘ஹைடெக்’ தொழிலில் கேரள நடிகை!
‘ஹைடெக்’ தொழிலில் கேரள நடிகை!
கேரளாவைச் சேர்ந்த ஸ்ருதி சாவந்த் ‘மிஸ் திருவனந்தபுரம்’ ஆன பின்பு தனது பெயரை இனியா என மாற்றிக் கொண்டு 2005-ல் மலையாள சினிமாவில் அறிமுகமானார். அங்கே நான்கைந்து படங்களில் நடித்து முடித்துவிட்டு 2011-ல் தமிழ் சினிமாப் பக்கம் ஒதுங்கினார். சற்குணத்தின் ‘வாகை சூடவா’ படத்தில் நடித்து சிறந்த நடிகை விருது பெற்றார்.
இந்த 18 வருடங்களில் கிட்டத்தட்ட 25-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும் டாப் ஹீரோயின் லிஸ்டில் இனியாவின் பெயர் இடம் பெறவில்லை. ஆனாலும் அசராத இனியா, மலையாளம், தமிழ், தெலுங்கு சினிமாக்களில் செலக்டிவான கேரக்டர்களில் நடித்து வருகிறார்.
சினிமா மூலம் சம்பாரித்த பணத்தை கல்யாண மண்டபம், பண்ணை வீடு, ஹைடெக் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் முதலீடு செய்வார்கள் பெரும்பாலான பெரிய ஹீரோக்கள். தப்பித் தவறிக் கூட சொந்தமாக படம் தயாரிக்கமாட்டார்கள். (இதில் கமல் மட்டும் விதிவிலக்கு).
அந்த ஹீரோக்கள் வழியில் இனியாவும் ‘அனோரோ ஆர்ட் ஸ்டுடியோ’ என்ற கம்பெனியை ஆரம்பித்து வாழ்க்கையை இனிமையாக நகர்த்திக் கொண்டிருக்கிறார்.
முழுக்க முழுக்க பெண்களுக்கான காஸ்ட்யூம்கள், காஸ்ட்யூம் டிசைனர், போட்டோ ஷூட் ஸ்டுடியோ, போட்டோகிராபி ஸ்பெஷலிஸ் ட்டுகளுடன் ஹைடெக்காக இந்த ஆர்ட் ஸ்டுடியோவை நிர்மாணித்திருக்கிறார் இனியா.
இந்த ஸ்டுடியோ திறந்து ஓராண்டு நிறைவடைந்ததையும் தனது பிறந்த நாளையும் சேர்த்து பார்ட்டி வைத்து விமரிசையாகக் கொண்டாடினார் இனியா.
-மதுரை மாறன்