அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

‘கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா’ டிரெய்லர் ரிலீஸ் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க

‘கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா’ டிரெய்லர் ரிலீஸ் !

ஃபேவின்ஸ் பால் தயாரிப்பில் பிரபுராம். செ இயக்கத்தில், நடிகர்கள் மஹத் ராகவேந்திரா-ஐஸ்வர்யா தத்தா நடித்துள்ள திரைப்படம் ‘கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா’!

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

kettavanu per edutha nallavanda
kettavanu per edutha nallavanda

வர்ணாலயா சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஃபேவின்ஸ் பால் தயாரிப்பில், இயக்குநர் பிரபுராம். செ இயக்கத்தில், மஹத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா தத்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரொமாண்டிக் காமெடி படம் ‘கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா’. மஹத் மற்றும் ஐஸ்வர்யா தத்தா இருவருமே ஒரே திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. குறிப்பாக, ரொமான்ஸ் காமெடி ஜானரில் நகர்ப்புற பின்னணியில் உருவாக்கப்பட்ட இந்தக் கதை மேலும் இளமை துள்ளலாக உள்ளது. சமீபத்தில் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா பெரியதிரை மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் முன்னிலையில் நடைபெற்றது. விரைவில் படத்தின் பாடல்களும் வெளியாக இருக்கிறது.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

மஹத் வடசென்னையைச் சேர்ந்த ஃப்ரீவீலிங் பையனாக இந்தப் படத்தில் நடித்துள்ளார். வடசென்னை பையனாக மஹத் இந்தப் படத்தில் நடித்திருப்பது இந்தக் கதைக்கு கூடுதல் மைலேஜை சேர்த்திருக்கிறது. படம் ரொமாண்டிக் காமெடி ஜானரில் உருவாகி இருந்தாலும் இதில் சில உணர்ச்சிகரமான தருணங்களும் இருக்கிறது. பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணாக நடிக்கும் ஐஸ்வர்யா மற்றும் மஹத்தின் ஆன் ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி நிச்சயம் ரசிகர்கள் மனதைக் கவரும் என்று படக்குழு நம்பிக்கைத் தெரிவித்துள்ளது.

இந்த திரைப்படத்தில் வில்லனாக ஆதவ் சசி என்ற புதுமுக நடிகரின் சண்டை காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது. இதனை ‘தங்கலான்’ சண்டை பயிற்சியாளரான ஸ்டன்னர் சாம் செய்துள்ளார். யோகிபாபு மற்றும் மொட்ட ராஜேந்திரனின் காமெடி இந்தப் படத்தில் நிச்சயம் பேசப்படும். பாடல்களுக்கு தரண் குமார் இசையமைத்துள்ளார். பின்னணி இசையை கார்த்திக் கிருஷ்ணன் உருவாக்கியிருக்கிறார். படத்தில் மூன்று பாடல்கள் உள்ளது. யோகிபாபு மற்றும் கரடியின் காதல் பாடல் குழந்தைகளுக்கு பிடித்தமானதாக அமைந்துள்ளது. மஹத் மற்றும் ஐஸ்வர்யா தத்தா இருவருக்குமான ரொமான்ஸ் பாடல் நித்யஸ்ரீயின் குரலில் தரண் இசையில், கு. கார்த்திக் வரிகளில் அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள இந்தப் படத்தின் ஆடியோ மற்றும் திரையரங்குகளில் வெளியாகும் தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

நடிகர்கள்: மஹத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா தத்தா, சாக்ஷி அகர்வால், யோகிபாபு, மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, ஆதித்யா கதிர், தங்கதுரை, கூல் சுரேஷ், மற்றும் பலர்.

தொழில்நுட்பக் குழு:

தயாரிப்பு : ஃபேவின்ஸ் பால்,
தயாரிப்பு பேனர்: வர்ணாலயா சினி கிரியேஷன்ஸ்,
இயக்கம்: பிரபுராம். செ,
ஒளிப்பதிவு: இனியன் ஜே ஹாரிஸ்,
படத்தொகுப்பு: பி. பிரவின் பாஸ்கர்,
பாடல் இசை: தரண் குமார்,
பின்னணி இசை: கார்த்திக் கிருஷ்ணன்,
கலை: கிஷோர்,
பாடல் வரிகள்: லோகன் கு கார்த்திக்,
ஸ்டண்ட்: ஸ்டன்னர் சாம், நடனம்: சசி குமார்,
SFX :கண்ணன்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.