‘குஷி’ ரீ-ரிலீஸ்! மும்தாஜ் அப்செட்!
விஜய்யின் ‘கில்லி’, ‘சச்சின்’ படங்கள் ரீ ரிலீசாகி, நன்றாகவே கல்லா கட்டியதால், 2000-ல் எஸ்.ஜே.சூர்யா டைரக்ஷனில் தான் தயாரித்த ‘குஷி’ படத்தை வரும் 25-ஆம் தேதி மீண்டும் ரிலீஸ் பண்ணுகிறார் சூர்யா மூவிஸ் ஏ.எம்.ரத்னம். இப்போது வினியோகிப்பவர் சக்தி பிலிம் ஃபேக்டரி சக்திவேலன். டிரெய்லர் ரிலீசுக்கு ஏ.எம்.ரத்னம், எஸ்.ஜே.சூர்யா, டைரக்டர் ஆண்ட்ரூ, சக்திவேலன் ஆகியோர் வந்திருந்தனர்.
ரீ ரிலீசை முன்னிட்டு செம குஷியான ஏ.எம்.ரத்னம், சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் மீடியாக்களுக்காக டிரெய்லரையும் இரண்டு பாடல்களையும் வெளியிட்டார். விஜய்-மும்தாஜ் காம்பினேஷனின் ‘கட்டிப்புடி கட்டிப்புடிடா…” பாடலை திரையிட்டதும் ஒன்ஸ்மோர் கேட்டு அதிர்ச்சியடைய வைத்தார்கள் 2கே கிட்ஸ் மீடியா அணில் குஞ்சுகள். இதனால் எஸ்.ஜே.சூர்யாவும் ரத்னமும் அளவுகடந்த மகிழ்ச்சியில் செம குஷியானார்கள்.
இதே குஷியுடன் மைக் பிடித்த ரத்னம், “எஸ்.ஜே.சூர்யா மனசு வைத்தால் குஷி-2’ எடுப்பேன்” என்றார்.
மேடையில் இருபது பேர் இருந்தாலும் அரை மணி நேரம் தம்கட்டிப் பேசும் சக்திவேலன், இந்த மேடையில் நாலு பேர் இருந்ததால் அவ்வளவு லேசில் மைக்கை விடவில்லை. சும்மா பொளந்து கட்டிட்டாரு.

எஸ்.ஜே.சூர்யா பேசும் போது,
“செந்தமிழ் தேன் மொழியாள்” என்ற மெலடி பாட்டைத் தான் தேவா சாரிடம் சொல்லி கட்டிப்புடி கட்டிப்புடிடா பாட்டாக மாத்தினேன். இந்தப் படத்தின் ரீ ரிலீஸ் அன்று முதல் காட்சிக்கு உலகில் எந்த மூலையில் இருந்தாலும் மும்தாஜ் மேடம் வந்தால் நல்லாருக்கும்” என்றார்.
இந்த ரீ ரிலீஸ் நிகழ்ச்சி முடிந்த மறுநாளே,
“நான் இப்போது முழுமையாக இறைபணியில் இறங்கிவிட்டேன். சினிமா நினைவுகளை மறந்துவிட்டேன். எனவே இப்போதைய இளம் ரசிகர்கள் என்னுடைய கடந்த காலத்தைத் தேடாதீர்கள். என்னுடைய பழைய போட்டோக்களையோ, சினிமாக்களையோ பார்க்காதீர்கள்” மும்தாஜ் பெயரில் சோஷியல் மீடியாக்களில் இப்படி ஒரு நியூஸ் வைரலானது.
இது மும்தாஜே சொன்னதா? இல்ல மும்தாஜ் பெயரில் ஃபேக் நியூஸான்னு தெரியல.
— ஜெடிஆர்
Comments are closed, but trackbacks and pingbacks are open.