அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அங்குசம் பார்வையில் ‘ஐபிஎல்’[ Indian Penal Law] 

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

தயாரிப்பு : ’ராதா பிலிம் இண்டெநேஷனல்’ ஜி.ஆர்.மதன் கிருஷ்ணன். டைரக்டர் : கருணாநிதி. ஆர்ட்டிஸ்ட் : கிஷோர், டிடிஎஃப் வாசன், அபிராமி, குஷிதா, ஆடுகளம் நரேன், போஸ்வெங்கட், திலீபன், ஹரிஷ் பெராடி, சிங்கம்புலி. ஒளிப்பதிவு : எஸ்.பிச்சுமணி, இசை : அஷ்வின் விநாயகமூர்த்தி, எடிட்டிங் : பிரகாஷ் மாப்பு, ஸ்டண்ட் : தினேஷ் சுப்பராயன், பி.ஆர்.ஓ : நிகில் முருகன்.

ஒரு டிராவல்ஸ் கம்பெனியில் வேலை பார்க்கிறார் கிஷோர். அங்கே டிரைவர் ஒருவருக்கு உதவப்போய், வேலையைவிட்டு நீக்கப்படுகிறார். இதனால் மனமுடைந்து நிற்கும் கணவனுக்காக தனது நகைகளையும் கையிருப்பு ரொக்கத்தையும் கொடுத்து சொந்தமாக கார் வாங்கி கிஷோரை ஓனராக்குகிறார் மனைவி அபிராமி. வாழ்க்கை மகிழ்ச்சியாக போய்க்கிட்டிருக்கும் போது, விபத்து ஒன்றில் சிக்கி நடக்க முடியாத அளவுக்கு ஆளாகிறார் கிஷோர். இதனால் இன்னொரு டிராவல்ஸில் காரை வாடகைக்கு கொடுக்கிறார்.

இந்த வார August 12 அங்குசம் இதழில்…

கிஷோருக்கு நடக்கும் அந்த விபத்தால் ஏற்படும் விபரீத விளைவுகள் என்ன, அதிலிருந்து அவர் மீண்டாரா? என்பதற்கான விடை தான் இந்த ‘ஐபிஎல்.’

ஐபிஎல்
ஐபிஎல்

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

கொடநாடு கொலை—கொள்ளையை அடிப்படையாக வைத்துத் தான் இந்தக் கதையை எழுதியிருப்பார் போல டைரக்டர் கருணாநிதி. அதற்கு பொருத்தமாக முதல்வர்  தவழப்பாடியை [ ஆடுகளம் நரேன்] ‘ஸ்மால் மம்மி’ செருப்பால அடிக்கும் சீனும் வைத்திருக்கிறார். இந்த சீன் தான் கதையின் மெயின் லைனாக வந்திருக்க வேண்டும். அப்படி வந்திருந்தால் பொலிட்டிக்கல் பொளேர் சினிமாவாக  இருந்திருக்கும் . ஆனால்  அதையே ஃபுல் ஸ்கிரிப்டில் கொண்டு வர தயங்கி, பம்மியதால் லாக்கப் மரணம், அதில் சிக்க வைக்கப்படும் கிஷோர் போலீஸ் பிடியில் சிக்கிச் சின்னாபின்னமாவது, கோர்ட் மூலம் நியாயம் கிடைப்பது என சுத்திச்சுத்தி அடித்து கிறுகிறுப்பை உண்டாக்கிவிட்டார்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

ஏதோ பெருசா கதை இருக்குது என இடைவேளை வரை நம்ப வைத்த டைரக்டருக்கு… அதன் பின் நம்பிக்கையை காப்பாற்ற முடியாமல் போனது தான் பரிதாபம். திக்குத் தெரியாமல் திரைக்கதை நாலாபக்கமும் அலைவதால் நடிகர்களின் நடிப்பும் செயற்கையாகத் தெரிந்து எரிச்சலைக் கிளப்புகிறது. குறிப்பாக ஹரிஷ் பெராடியும் ஜான் விஜய்யும் ரொம்பவே டென்ஷனாக்குகிறார்கள்.  அதிலும் வரவர இந்த ஜான்விஜய்யின் ‘செமித்தனமான இம்சை’ தாங்கவே முடியல.

ஐபிஎல்சரி..இப்ப இந்த ‘ஐபிஎல்’ மூலம் அறிமுகமாகியிருக்கும் டி.டி.எஃப். வாசன் எப்படி நடிச்சிருக்காருன்னு கண்டிப்பாக சொல்லியாகணும். “ரேஸிங் ஸ்டார்’ என்ற பட்டத்தை  டைட்டிலில் போடுகிறார்கள். நேஷனல் ஹைவேஸிலும் எட்டு வழிச்சாலையிலும் படுபயங்கரமா பைக் ஓட்டி பலபேரை பதற வச்சதால ரேஸிங் ஸ்டார் ஓகே தான். ஆனால்  வளைவு-நெளிவு அதிகமுள்ள இந்த சினிமா சாலைகளில் பயணிப்பது அவ்வளவு சாதாரணமல்ல. முதல் படம் என்பதால் நடிப்பில் கொஞ்சம் திணறியிருப்பது பல சீன்களில் தெரிகிறது. இன்னும் அதிக பயிற்சியும் முயற்சியும் இருந்தால் ரைசிங் ஸ்டார் ஆகலாம்.

அதனால் படத்தின் ஹீரோன்னா அது கிஷோர் தான். தனது அனுபவ நடிப்பால் பல காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறார். இவரின் மனைவியாக அபிராமியும் நன்றாகவே நடித்திருக்கிறார். கிஷோரின் தங்கச்சியாக ஹீரோயின் குஷிதாவுக்கு ஓரளவு நடிப்பு வருகிறது. மதுரை எஸ்.பி.யாக வரும் திலீபனுக்கு இரண்டு சீன்கள் என்றாலும் மனதில் நிற்கும் சீன்கள். லாக்கப்பில் இளைஞனை சாகடிக்கும் இன்ஸ்பெக்டராக போஸ்வெங்கட் அளவுடன் அலப்பறை பண்ணியிருக்கார்.

க்ளைமாக்ஸ் கோர்ட் சீன் படு செயற்கைத்தனமாக இருந்தது தான் இந்த ‘ஐபிஎல்’ வீக்கானதற்கு காரணம்.

—   ஜெ.டி.ஆர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.