‘டாக்ஸிக்’-ல் கியாரா அத்வானியின்  ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

கன்னட ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிக்கும்  ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, படத்தில், கியாரா அத்வானி ஏற்றுள்ள ‘நாடியா’  கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக்   வெளியிடப்பட்டுள்ளது.

கியாராவின் நடிப்பு குறித்து இயக்குநர் கீத்து மோகன்தாஸ் என்ன சொல்றாருன்னா…

“ கியாரா திரையில் உருவாக்கியிருப்பது உண்மையிலேயே பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது. அவர் இக்கதாபாத்திரத்தை திரையில் கொண்டு வந்த விதத்திற்கும்,  அவரது நம்பிக்கைக்கும், மனப்பூர்வமான அர்ப்பணிப்பிற்கும் நான் மிகவும் பெருமை கொள்கிறேன்” என்கிறார்.

யாஷ் மற்றும் கீத்து மோகன்தாஸ் இணைந்து கதையை எழுதியுள்ள இப்படத்தை வெங்கட் கே.நாராயணா மற்றும் யாஷ் இணைந்து கே.வி.என். புரொடக்சன்ஸ் & மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் நிறுவனங்களின் சார்பில் தயாரித்துள்ளனர்.2026  மார்ச் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

—  ஜெ.டி.ஆர்

Comments are closed, but trackbacks and pingbacks are open.