அங்குசம் சேனலில் இணைய

‘கிகி’ஸ் டான்ஸ் ஸ்டுடியோ ஆரம்பம் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

‘கிகி’ஸ் டான்ஸ் ஸ்டுடியோ ஆரம்பம் ! சின்னத்திரை தொகுப்பாளினி- நாட்டிய மங்கை -நடிகை- என பன்முகத் திறன் கொண்ட திருமதி கிகி சாந்தனு பாக்கியராஜ் சென்னை அடையாறில் ‘ ‘கிகி’ஸ் டான்ஸ் ஸ்டூடியோ’ எனும் பெயரில் இரண்டாவது நாட்டிய பயிற்சிப் பள்ளியை தொடங்கியுள்ளார்.

நாட்டியம், நடனம் என்பது இளம் வயதினருக்கு அவர்களின் திறமைக்கேற்ப வாய்ப்பு வழங்கும் கலையாக இருந்தாலும்.. அவர்களின் உடல் ஆரோக்கியத்தையும், மன வலிமையையும், சமூகத்துடன் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் கலையாகவும் திகழ்கிறது. சிறார்களும், சிறுமிகளும் தங்களின் மன அழுத்தத்திலிருந்து விடுதலை பெறவும், கவன சிதறலிலிருந்து ஒருமுகமான கவனத்தை பெறவும், உத்வேகத்துடன் தொடர்ந்து இயங்கவும் நடனத்தை கற்றுக் கொள்கிறார்கள்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

கிகி சாந்தனு கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை தியாகராய நகரில் ‘கிகி’ஸ் டான்ஸ் ஸ்டுடியோ’வை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இந்நிலையில் இரண்டாவது கிளையை அடையாறு பகுதியில் தொடங்கியிருக்கிறார். இங்கு ஃபிட் கிட்ஸ் எனும் உடற்பயிற்சிக்கூடம் உள்ளது . அவர்களுடன் இணைந்து, ‘கிகி’ஸ் டான்ஸ் ஸ்டுடியோ’வை தொடங்கியிருக்கிறார்.

It's the gold standard! Download Peppy Gold now and use my code for a sparkling start: 'PG*YVWWWW5225'

இதன் தொடக்க விழாவில் பூர்ணிமா பாக்யராஜ், கே. பாக்யராஜ், நடிகர் கலையரசன், பரத், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜனனி, சம்யுக்தா ஷான், திருமதி சுஹாசினி மணிரத்னம், காயத்ரி ரகுராம் உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு கிகி சாந்தனு மற்றும் சாந்தனு பாக்யராஜிற்கு வாழ்த்து தெரிவித்தனர்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

இந்த டான்ஸ் ஸ்டுடியோவில் சோர்வான மனநிலையில் வருகை தந்தாலும் அல்லது உற்சாகமற்ற சூழலில் வருகை தந்தாலும்.. உங்கள் மனதுக்கு பிடித்த பாடலை ஒலிக்க விட்டு.. அதற்காக உங்களுக்கு சௌகரியமான முறையில் டான்ஸ் ஆடினால்.. உங்கள் உடலும், மனமும் புத்துணர்ச்சி அடைந்து மகிழ்ச்சி பரவுவதை உணர்வீர்கள்.

இந்த டான்ஸ் ஸ்டுடியோவின் உள்கட்டமைப்பு.. நடன கலைஞர்கள் நடனப் பயிற்சி பெறுவதற்கு வசதியாக பிரத்யேகமான முறையிலும், சர்வதேச தரத்திலும் ஒலி மற்றும் ஒளி அமைப்புடன் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது இதன் தனி சிறப்பம்சம்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.