சங்கரைச் சுற்றியுள்ளவர்கள் சங்கரை விட ஆபத்தானவர்கள் !

0

மாரிதாஸ் குறித்துப் பேசியது போல சங்கர் குறித்தும் பேசுங்கள் எனப் பலர் என்னிடம் சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.
எனக்கு பல தகவல்கள் வந்து கொண்டே இருந்தாலும் நான் பேசவில்லை.

மீடியா வெளிச்சத்தில் தான் வாழ வேண்டும் என்றால் அப்போதே பேசியிருப்பேன். எனக்கு அதில் எப்போதும் உடன்பாடில்லை. மீடியா வெளிச்சம் சமூகத்தின் உயர்வு சார்ந்த வெளிச்சமாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதில் ஆழமான கருத்து எனக்குண்டு.

மாரிதாஸ் ஒரு கருத்தியலின் பின்னணியில் செயல்பட்ட நபர். அந்தக் கருத்தியல் தமிழ்நாட்டிற்கு எவ்வகையிலும் பொருத்தப்பாடு கொண்டதல்ல.

பெலிக்ஸ் - சவுக்கு சங்கர் - லியோ
பெலிக்ஸ் – சவுக்கு சங்கர் – லியோ

- Advertisement -

அக்கருத்தியலை நடைமுறைக்கு கொண்டு வர, எதிர்க்கருத்துடன் செயல்படுபவர்களை அழிக்கும் முயற்சியில் மாரிதாஸ் இறங்கினான். எனவே அந்தநபரை அடிக்க வேண்டிய தேவை எழுந்தது. சங்கர் அப்படிப்பட்ட கருத்தியல் பின்னணி கொண்ட நபர் அல்ல. மீடியா என்ற பெயரில் மாபியா வேலைகளைச் செய்பவர் என்று அப்போதே அறிந்தேன்.

மாரிதாஸைப் பேசிய போது சங்கர் எனக்குப் போன் செய்து நான் செய்ய முடியாததை நீங்கள் செய்துவிட்டீர்கள்.
உங்களை கட்டி அணைக்க வேண்டும் என்று பேசினார். அது மட்டுமே நானும் சங்கரும் பேசிய ஒரே உரையாடல்.

4 bismi svs

சங்கருடைய செயல்கள் அரசை விமர்சிப்பதல்ல. மிரட்டுவது. மிரட்டும் ஆயுதத்தை கையிலெடுப்பவனின் ஆயுள் நீடிக்காது.
தான் பின்னிய வலையில் சங்கரே சிக்குவார் என எனக்கு தெரியும். எனவே நான் பேசவில்லை.

சூர்யா சேவியர்
சூர்யா சேவியர்

இருப்பினும் இதுபோன்ற பதிவுகள் மூலம் வெளிப்படுத்தியே வந்தேன். மாலதிக்கு சொத்து என்பது இப்போது வெளியே வருவது.
மாலதிக்கும், சங்கருக்கும் உண்டான தொடர்பு, அதையொட்டி வாங்கிய சொத்து ஒரு வருடத்திற்கு முன்பே நான் அறிந்தது தான்.

சங்கர் குறித்த இன்னும் ஏராளமான விபரத்தை நான் அறிவேன். அவையெல்லாம் சங்கரே வெளிப்படுத்த வேண்டிய சூழல் நிச்சயம் உருவாகும். ஏனெனில் சங்கரைச் சுற்றியுள்ளவர்கள் சங்கரை விட ஆபத்தானவர்கள்.

சங்கரிடம் சவுக்கு இல்லை. சங்கர் சார்ந்தோரின் கைகளிலேயே சவுக்கு உள்ளது. எப்போது வேண்டுமானாலும் சுழட்டுவார்கள்.

– முகநூலில் – சூர்யா சேவியர்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.