67 வகையான மாத்திரைகளுக்கு தடை ! அரசு வெளியிட்ட பட்டியல் – மக்களே உஷார் !

0

67 வகையான மாத்திரைகளுக்கு தடை ! அரசு வெளியிட்ட பட்டியல் – மக்களே உஷார் !  பத்தாம் கிளாஸ் மட்டுமே படித்துவிட்டு மருத்துவம் பார்த்த போலி டாக்டர் கைது என்பது போன்ற செய்திகளை படித்திருக்கிறோம். அட இதிலும் போலியா? என்று அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில், தலைவலி, காய்ச்சல், சளித்தொல்லை, செரிமான பிரச்சினை, மற்றும் சத்துக்குறைபாட்டுக்காக மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் மாத்திரைகளுள் 67 வகையான மாத்திரைகள் போலியானவை என்ற பகிரூட்டும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது, மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம்.

CDSCO
CDSCO

சாதாரண சளி, தலைவலி, காய்ச்சலுக்காக பெரும்பாலோனார் எடுத்த உடனேயே மருத்துவரை நாடி செல்வதில்லை. அவர்களுக்கு தெரிந்த பாட்டி வைத்தியத்தை செய்து பார்ப்பார்கள். அதற்கும் அவகாசம் பொறுமை இல்லாதவர்கள், பெட்டிக் கடைகளில் கிடைக்கும் தலைவலி மாத்திரையை வாங்கிப் போடுவார்கள். இன்னும் கொஞ்சம் விழிப்புணர்வு பெற்றவர்கள், நேராக மெடிக்கலுக்கு சென்று, மருந்தாளுநரிடம் விசயத்தை சொல்லி நல்ல மாத்திரையை வாங்கிய திருப்தியில் தண்ணீர் விட்டு முழுங்கிவிடுவார்கள்.

பொதுவில் மருத்துவர்கள் எழுதித்தரும் பரிந்துரைச் சீட்டில் அவர் எழுதியிருக்கும் கையெழுத்து சில வேளைகளில் மருந்தாளுநர்களுக்கே புரிவதில்லை. பெயரை புரியாதபோது, அவர் பரிந்துரைத்த மாத்திரை அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு தயாரிக்கப்பட்டதுதானா? என்பதை எந்த நோயாளியும் பரிசோதித்து பார்ப்பதற்கு வாய்ப்பே கிடையாது.

- Advertisement -

தடைசெய்யப்பட்ட மாத்திரைகள் (2)
தடைசெய்யப்பட்ட மாத்திரைகள் –

ஆக, பெட்டிக்கடை தொடங்கி, மெடிக்கல் கடை, மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகள் வரையில் அவர்கள் மீதான நம்பிக்கையிலிருந்தே, அவர்கள் வழங்கும் மருந்தை உட்கொள்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறோம்.
இந்த பின்னணியில்தான், மேற்படி பகீர் அறிவிப்பு வெளியாகி நம்மையெல்லாம் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. நாட்டில் புழக்கத்தில் இருக்கும் மருந்து வகைகளை அவ்வப்போது, ஆய்வுக்குட்படுத்தி அவற்றின் தரத்தை பரிசோதித்து உறுதிபடுத்துவதற்கான பணியை மத்திய மற்றும் மாநில அளவிலான மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியங்கள் மேற்கொள்கின்றன.

இதன் ஒரு பகுதியாக, மத்திய மருந்துக்கட்டுப்பாட்டு வாரியம் நாடு முழுவதும் 931 மாதிரிகளை ஆய்வுக்குட்படுத்தியது. இந்த ஆய்வு முடிவுகளிலிருந்துதான், தலைவலி, காய்ச்சல், சளித்தொல்லை, செரிமான பிரச்சினை, மற்றும் சத்துக்குறைபாட்டுக்காக மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் மாத்திரைகளுள் 66 வகையான மாத்திரைகள் போலியானவை என்பதும்; இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த Pharmaroots Healthcare என்ற நிறுவனத்தின் தயாரித்து வெளியாகும் CALCIUM CARBONATE TABLETS IP 500 mg என்ற மருந்து தவறான வர்த்தக பெயருடன் சந்தையில் விற்பணையாகி வந்த அதிர்ச்சி தகவலும் வெளியாகியிருக்கிறது.

4 bismi svs
தடைசெய்யப்பட்ட மாத்திரைகள்
தடைசெய்யப்பட்ட மாத்திரைகள்

இவற்றுள் பெரும்பாலான மருந்துகள் ஹிமாச்சல பிரதேஷ், உத்தரகாண்ட், மத்திய பிரதேசம், கொல்கத்தா, உ.பி, குஜராத் ஆகிய மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவை.

Amoxicillin Tablets 500 mg (Moxyvec-500) என்ற மருந்தை எந்த நிறுவனம் தயாரித்து சந்தைப்படுத்துகிறது என்ற விவரம் கூட இடம்பெறாத வகையில் புழக்கத்தில் இருந்து வருகிறது என்பதெல்லாம் கற்பணையில்கூட நினைத்து பார்த்திட முடியாதவை.Karnataka Antibiotics & Pharmaceuticals Limited என்ற நிறுவனம் தயாரிக்கும் Ranitidine Tablets I.P. 150 mg மாத்திரைகள்; Skymap Pharmaceuticals Pvt நிறுவனத்தின் Metoprolol Tablets IP 25 mg மாத்திரைகள்; Mancare Laboratories Pvt. Ltd நிறுவனத்தின் Co Trimoxazole Oral Suspension I.P. (Altoprim Suspension) என்ற மருந்தும் இந்த தடைப்பட்டியலில் அடக்கம்.

நாடுமுழுவதும் மொத்த மற்றும் சில்லறை மருந்து விற்பனை நிலையங்களில் அதிரடி ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாகவும், அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிலிருந்து விதிமீறலில் ஈடுபட்ட நிறுவனங்களுக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டு அவற்றின் உரிமங்களை ரத்து செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் கடந்த 2023 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் மட்டும் 219 உரிமங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும் சமீபத்தில் வெளியான அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தார் மக்கள் நல்வாழ்வுத்துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

ஒரே நோய்க்கான மருந்து அம்மருந்தை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ஏற்ப விலையில் பாரிய வேறுபாடு இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று. மருந்து நிறுவனத்தின் சலுகைகளுக்காக, அவசியம் இல்லாத மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள், விலை அதிகமான குறிப்பிட்ட நிறுவனத்தின் மருந்துகளை பரிந்துரைக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுகள் பொதுவில் இருந்து வரும் நிலையில், புழக்கத்தில் உள்ள 67 மருந்துகள் தடை செய்யப்பட்டிருப்பது நம் கவனத்தை பெறுகிறது.

மாத்திரைகள்
மாத்திரைகள்

மத்திய மாநில அளவிலான மருந்து தரக்கட்டுப்பாட்டு நிறுவனங்களின் அதிரடி ஆய்வுகளை அதிகப்படுத்த வேண்டும் என்பதோடு, விதிமீறலில் ஈடுபட்டு மக்களின் உயிருடன் விளையாடும் குறிப்பிட்ட மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்வதோடு சலுகைகளுக்காக கண்ணை மூடிக்கொண்டு மேற்படி மருந்துகளை பரிந்துரைக்கும் குறிப்பான மருத்துவர்களையும் எச்சரிக்கும் வகையிலான நடவடிக்கையாக அமைய வேண்டும் என்பதே நம் அனைவரின் எதிர்பார்ப்பும்.

– மித்ரன்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.