”கொத்தவரங்காய் மாதிரி இருந்துகிட்டு என்னமா பன்றான் பாரு?”னு நக்கலாக சொல்லி கேள்விபட்டிருக்கிறோம். உண்மையில், பார்ப்பதற்கு குச்சி மாதிரியும், ஈர்க்கும் சுவை இல்லாமல் இருக்கலாம். ஆனால், கொத்தவரங்காய் ரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்தவும், செரிமானத்தை மேம்படுத்தவும், இதயத்தைப் பாதுகாக்கவும் உதவுகிறது என்றால் நம்ப முடிகிறதா?
ஆம். இதில் நார்ச்சத்து, கால்சியம் ஜி மற்றும் புரதச்சத்து நிறைந்துள்ளன. ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது. கெட்ட கொழுப்பைக் கரைத்து ரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது. சுண்ணாம்புச் சத்து மற்றும் கால்சியம் இருப்பதால் எலும்புகள் வலுவடைகின்றன. நார்ச்சத்துக் மிகுந்துள்ளதால் மலச்சிக்கலைப் போக்கி வயிறு தொடர்பான சிக்கல்களைத் தவிர்க்கும். ஆளைப்பார்த்து எடை போடக்கூடாதென்று சும்மாவா சொல்லி வைத்தார்கள்.
— பேரா.சா.அருள்
Comments are closed, but trackbacks and pingbacks are open.