கிருஷ்ணகிரி பள்ளி மாணவி பலாத்காரம் ! பள்ளி தாளாளர் சீமான் கட்சி பிரமுகர் உள்பட 8 பேர் கைது !

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறையினர் பள்ளியில் விசாரணை நடத்திய நிலையில் நடந்த சம்பவம் உறுதி செய்யப்பட்டது.

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

கிருஷ்ணகிரி பள்ளி மாணவி பலாத்காரம் பள்ளி தாளாளர், சீமான் கட்சி பிரமுகர், உள்பட 8 பேர் கைது !

கிருஷ்ணகிரி அருகே தனியார் பள்ளியில் தேசிய மாணவர் படை என்.சி.சி.முகாமின் போது எட்டாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த விவகாரத்தில் பள்ளித் தாளாளர், முதல்வர், என்சிசி பயிற்சியாளர் உள்பட 7 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் கிராமத்தில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு கடந்த 5- ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரையில் தேசிய மாணவர் படை (NCC ) முகாம் அப்பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்கு தனி வகுப்பு எடுப்பதாகவும் நாட்டு நலப்பணி திட்டம் என்ற என்.எஸ்.எஸ் முகாம் குறித்த பயிற்சி அளிப்பதாக பள்ளியின் முதல்வரை சந்தித்து அனுமதி கோரினார்.

பின்னர் பள்ளி நிர்வாகத்தின் ஒப்புதல் உடன் 17 மாணவிகள் பயிற்சியில் பங்கேற்றனர். இந்த மாணவிகளுக்கு கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தைச் சேர்ந்த நாம் தமிழர் நிர்வாகி சிவராமன் (30) என்பவர் தலைமையிலான குழுவினர் பயிற்சி அளித்தனர். இந்தப் பயிற்சி முகாமில் பங்கேற்ற எட்டாம் வகுப்பு பயிலும் 12 வயது மாணவியை அதிகாலை 3 மணி அளவில், என்.சி.சி. பயிற்சியாளரான காவேரிப்பட்டணத்தைச் சேர்ந்த சிவராமன் (30) என்பவர் மாணவியை அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

இதுகுறித்து, பாதிக்கப்பட்ட மாணவி, பள்ளி முதல்வர் சதீஷ்குமாரிடம் புகார் தெரிவித்தார். சதீஷ்குமார் இதுகுறித்து, யாரிடமும் தெரிவிக்க வேண்டாம் என மிரட்டியுள்ளார். இந்த நிலையில் கடந்த 16- ஆம் தேதி பாதிக்கப்பட்ட மாணவிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அப்போது, பள்ளி முகாமில் நடந்த சம்பவம் குறித்து தனது தாயிடம் மாணவி தெரிவித்துள்ளார்.

அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றும் தாய், தனது மகளை கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இதுகுறித்து, பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில், பர்கூர் அனைத்து மகளிர் போலீஸார் போக்ஸோ சட்டப் பிரிவின் கீழ் பயிற்சியாளர் சிவராமன், பள்ளி முதல்வர் சதீஷ்குமார் ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இந்தச் சம்பவம் குறித்து, சேலம் சரக டி.ஐ.ஜி. உமா, கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை நேரில் விசாரணை நடத்தினர்.

மேலும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறையினர் பள்ளியில் விசாரணை நடத்திய நிலையில் நடந்த சம்பவம் உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து பள்ளி முதல்வரான , திருப்பத்தூர், பூங்காவனத்தம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சதீஷ்குமார்; பள்ளியின் சமூக அறிவியல் ஆசிரியர் கந்திகுப்பம் இந்திரா நகரைச் சேர்ந்த ஜெனிபர்; பள்ளித் தாளாளரான கந்திகுப்பத்தைச் சேர்ந்த சாம்சன் வெஸ்லி; பயிற்சியாளர்களான தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டம் கொள்ளுப்பட்டியைச் சேர்ந்த சக்திவேல்; கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டம் பேரிகை அருகே உள்ள அமுதகொண்டப்பள்ளியைச் சேர்ந்த சிந்து; கிருஷ்ணகிரி கிட்டம்பட்டியைச் சேர்ந்த பெண் சத்யா; பர்கூரை அடுத்த சின்ன ஒரப்பத்தைச் சேர்ந்த முன்னாள் சிஆர்பிஎப் வீரர் சுப்பிரமணி உள்பட 7 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

மேலும், தலைமறைவான காவேரிப்பட்டணம் திம்மாபுரம் காந்தி நகரைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி சிவா என்கிற சிவராமன் (30) சுதாகர் ஆகிய 2 பேரையும் போலீஸார் தேடி வந்த நிலையில், இதில் சிவராமன் நேற்று நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். சிவராமன் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளராக இருந்து வருகிறார்.

சமீபத்தில் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு நாம் தமிழர் கட்சி நிர்வாகி சிவக்குமார் என்பவர் டியூசன் எடுப்பதாக கூறி 30 மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்து அவ்வப்போது மிரட்டி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதன் காரணமாக கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மணிகண்டன் 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.