பெண் மருத்துவர் கொடூர வன்புணர்வு கொலை ! யார் இந்த குற்றவாளி சஞ்சய் ராய் ? நடந்தது என்ன ?

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

கொல்கொத்தா பெண் மருத்துவரின் கொடூர வன்புணர்வுக் கொலையில் ஊடகங்கள் எந்தளவு நேர்மையாக இருக்கின்றன என்பது தெரியவில்லை.. இந்தப்பதிவில் அந்தக் கொடூர மரணத்தைப்பற்றிப் பேச இருப்பதால் இளகிய மனம் கொண்டவர்கள் இதற்கு மேல் வாசிக்க வேண்டாம். உயிர்காக்கும் மருத்துவர்.. அதிலும் பெண் மருத்துவர்.. அவரது மரணம் பற்றி நாம் பேசியே ஆகவேண்டும் என்பதால் இதை எழுதித்தான் ஆக வேண்டி இருக்கிறது..

Protests infront of RG Kar Medical College and Hospital, Kolkata PTI -1
Protests infront of RG Kar Medical College and Hospital, Kolkata PTI -1

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

கொல்கொத்தாவின் மிகப்பெரிய மருத்துவமனைகளில் ஒன்று ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை. உள் நோயாளிகளாக.. அதாவது படுக்கையில் அட்மிட் ஆன நோயாளிகளாகவே ஒரே நேரத்தில் ஆயிரத்து ஐநூறு பேர் மருத்துவம் பார்த்துக் கொள்ளலாம்.

அந்தளவுக்கு மாபெரும் மருத்துவமனை அது. மருத்துவக் கல்லூரியுடனான மருத்துவமனை.. அது எவ்வளவு பெரியது என்றால் அதன் கேம்ப்பசுக்கு உள்ளேயே ஒரு போலீஸ் ஸ்டேஷனும் போலீஸ் அவுட் போஸ்ட்டும் உண்டு. அவ்வளவு பெரிய மருத்துவமனை.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

அதில் PG மருத்துவம் பயின்ற மாணவிதான் கொலை செய்யப்பட்டவர். முப்பத்தோரு வயது மருத்துவர்.. பொதுவாக முதுகலை மருத்துவ மாணவர்களுக்கு இரவு டியூட்டி என்பது இந்தியா முழுமைக்குமே பொதுவான விதியாக மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் இருக்கிறது.

அந்த வகையில் குறிப்பிட்ட நாளில் இந்த மாணவி அன்றைக்கு டியூட்டியில் இருந்திருக்கிறார். இவரது டியூட்டி நேரம் அதிகாலை நான்கு மணிக்கு முடிகிறது. அதன்பின் மறுபடி அவர் ஆறு மணிக்கு மீண்டும் மருத்துவமனைக்கு வரவேண்டும். பொதுவாகவே இந்த இரண்டு மணி நேரத்தில் உறங்குவதற்காக வீட்டுக்குப் போய்விட்டுத்தான் முதுநிலை மாணவர்கள் வருவார்கள்.

RG Kar Medical College and Hospital,
RG Kar Medical College and Hospital,

அந்த மாணவியின் வீடு தொலைவில் இருந்திருக்கிறது. அவ்வளவு தூரம் சென்று திரும்பினால் உறங்க முடியாது என்ற ஒரே காரணத்துக்காக உறங்குவதற்காக அவர் அந்த மருத்துவமனையின் கான்ஃபரன்ஸ் ஹாலைத் தேர்ந்தெடுக்கிறார். நான்கு மணிக்கு கான்ஃபரன்ஸ் ஹாலில் சென்று படுத்திருக்கிறார்.

பின்னர் விடிந்த பின் கிட்டத்தட்ட பதினொன்றரை மணிக்கு உள்ளே சென்றவர்கள் தான் அந்த மருத்துவர் கொடூரமாகக் கற்பழிக்கப்பட்டுக் கொல்லப் பட்டிருக்கிறார் என்பதைப் பார்க்கிறார்கள். இது மற்றுமொரு கொலை வழக்காக மாறிவிடும் என்று எதிர்பார்த்தார்கள்.

போலீஸ் வந்தது.. ஆய்வுகளை நடத்தியது.. கெடு வாய்ப்பாக அந்த மருத்துவமனை முழுவதுமே சிசிடிவி கேமரா இருந்தபோதும் அந்த கான்ஃபரன்ஸ் ஹாலில் மட்டும் எந்தக் கேமராவும் இல்லை.. போலீசார் துப்புக் கிடைக்காமல் திணறினார்கள். மருத்துவரின் உடல் மருத்துவக் உடற்கூராய்வுக்குக் கொண்டுசெல்லப்பட்டது.

அப்போதுதான் அவர்களுக்கு ஒரு க்ளூ கிடைக்கிறது. அங்கே ஒரு ப்ளூ டூத் இயர்பட்டின் ஒரு பார்ட் மட்டும் கிடக்கிறது. அங்கே இருந்தவர்களில் சஞ்சய் ராய் என்பவனின் மொபைலில் அந்த ப்ளூ டூத் இயர் பீஸ் உடனே pair ஆகிறது. போலீசார் உடனடியாக அவனைக் கைது செய்து விடுகிறார்கள்.

Sanjay Roy Confession
Sanjay Roy Confession

பின்னர் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது சஞ்சய் ராய் அந்த கான்ஃபரன்ஸ் ஹாலுக்குள் நான்கு மணிக்குச் செல்வதும் பின்னர் நான்கே முக்காலுக்கு உள்ளே இருந்து வெளியே வருவதும் பதிவாகி இருப்பது தெரிகிறது. கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் உள்ளே இருந்திருக்கிறான். ஆக கொலையாளி இவன்தான் என்று போலீசார் முடிவு செய்கிறார்கள்.

இதில் கொடுமை என்னவென்றால் அவன் இடைப்பட்ட நேரத்தில் நிதானமாக வீட்டுக்குச் சென்று குளித்து முடித்துவிட்டுத் திரும்ப வந்திருக்கிறான்.. மருத்துவர் உடலை அங்கிருந்து அப்புறப்படுத்தவும் அவன் உதவி செய்திருக்கிறான்.

யார் இந்த சஞ்சய் ராய் என்று பார்த்தால் அவனுக்கு அங்கே ஒரு வரலாறு இருக்கிறது. மேற்கு வங்க அரசு அங்கே பேரழிவு மேலாண்மை எனப்படும் disaster management க்காகத் தன்னார்வலர்களை வைத்துப் பல இடங்களில் குழுக்களை அமைத்து வைத்திருககிறது. நம்ம ஊரில் இருக்கும் friends of police மாதிரி அங்கே இவர்களைப் போலீசாரும் பயன்படுத்திக் கொள்வார்கள்.

அந்தப் பேரிடர் மேலாண்மைத் தன்னார்வலர்களில் ஒருவன் தான் இந்த சஞ்சய் ராய்.. அந்த வளாகத்தில் இருக்கும் போலீஸ் அவுட் போஸ்ட்டில் எப்போதும் இவன் இரவு டியூட்டிக்கு வந்து விடுவானாம்..

Sanjay Roy Confession
Sanjay Roy Confession

அங்கே இருக்கும் பேஷண்ட்களின் உறவினர்களுக்குச் சின்ன சின்ன உதவிகள் செய்வானாம்.. அட்டண்டர் இல்லாத பேஷண்ட்டுகளுக்கு அட்டண்டராகவும் வேலை செய்திருக்கிறான்.

இப்படி இருக்கையிலேயே அங்கே வந்த நோயாளிகள், அவர்களின் உறவினர்கள் என்று பல பெண்களிடம் இவன் பாலியல் சீண்டலிலும் ஈடுபட்டிருக்கிறான். அவன் மீது ஏராளமாக புகார்கள் இருந்தும் போலீசுக்கு அணுக்கமாக இருப்பதால் அவன் தப்பித்துக் கொண்டே இருந்திருக்கிறான்.

சரி. குற்றம் நடந்தது. குற்றவாளி கைது செய்யப் பட்டுவிட்டான். மருத்துவர்களும் பெண் மருத்துவர்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்று குரல் எழுப்பிச் சிறு சிறு போராட்டங்களை நடத்தியபடி இருந்தார்கள்.

இப்போது முதல் கட்ட உடற்கூராய்வு அறிக்கை வெளி வருகிறது. அதில்தான் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த மருத்துவரின் பெண் உறுப்பில் மொத்தம் 150 மி.லி. செமன் எனப்படும் விந்து இருந்திருக்கிறது.

Junior doctors, trainee doctors and medical students during a protest against the sexual assault and killing of a post-graduate trainee doctor at RG Kar Medical College, in Kolkata. (PTI)
Junior doctors, trainee doctors and medical students during a protest against the sexual assault and killing of a post-graduate trainee doctor at RG Kar Medical College, in Kolkata. (PTI)

நிஜமாகவே அப்படித்தான் இருந்திருக்கிறது. 150 மிலி.. இவ்வளவும் ஒரே மனிதனிடம் இருந்து வந்திருக்கச் சாத்தியமே இல்லை. அதுவும் முக்கால் மணி நேரத்தில்.. என்பதுதான் மருத்துவர்களுக்கு முதல் முறையாகச் சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அது தவிர அந்த மருத்துவரின் கால்களை லிட்டரலி உடைத்துத்தான் உறவு கொண்டிருககிறார்கள். கண்ணாடியோடு முகத்தில் குத்தியதில் கண்ணாடி கண்ணுக்குள் பாய்ந்திருக்கிறது. வாய் முழுக்க இரத்தம் வழிந்திருக்கிறது. வாயில் என்ன கொடூரம் செய்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை..

இந்த விஷயம் தெரிந்தபின்தான் மருத்துவர்கள் மத்தியில் மாபெரும் போராட்டம் வெடிக்கிறது. நிச்சயம் இது சஞ்சய் ராய் என்ற தனி மனிதனால் நிகழ்த்தப்பட்டிருக்க முடியாது. நிச்சயம் அங்கே ஒரு கூட்டுப் பாலியல் வன்முறை நிகழ்த்தப்பட்டிருக்கிறது என்று டாக்டர்கள் சொல்கிறார்கள். ஆனால் போலீஸ் மறுபடி மறுபடி சஞ்சய் ராய்தான் குற்றவாளி என்று சொன்னபடியே இருக்கிறார்கள்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

CCTV Footage of RG Kar from Rape-Murder Night accessed by CBI
CCTV Footage of RG Kar from Rape-Murder Night accessed by CBI

பெரும் போராட்டம் வெடிக்கிறது.

இதற்குள் சஞ்சய் ராய் பற்றிப் பல்வேறு தகவல்கள் வெளிவருகின்றன அல்லது பரப்பப்படுகின்றன. அவை அனைத்தும் உண்மைதான். ஆனால் இதில் சஞ்சய் ராயை மட்டும் குற்றவாளியாக்க நடக்கும் முயற்சிதான் இது என்று போராடும் மருத்துவர்கள் சந்தேகப் பட ஆரம்பித்தார்கள்.

சஞ்சய் ராய் இதற்கு முன்பே மூன்று முறை மணமானவன். அவனது மனைவிகள் அத்தனை பேருமே அவனது சைக்கோத்தனமான செக்ஸ் டார்ச்சர் தாங்க முடியாமல்தான் விட்டு விட்டு ஓடி இருக்கிறார்கள். தற்போது அவன் தனியாளாகத்தான் வசித்து வருகிறான். என்றொரு செய்தி.. அது உண்மையான செய்திதான்.

அடுத்து சஞ்சய் ராயின் மொபைல் ஃபோனில் கிடைத்த ஆபாசப் படங்கள் அனைத்துமே குரூரமான செக்ஸ் வீடியோக்கள்தான்.. சஞ்சய் தொடர்ந்து இவற்றைப் பார்த்து வந்திருக்கிறான் என்றொரு செய்தி.. இதுவும் உண்மையே..

இதற்கிடையில் உச்சநீதிமன்றம் சுவோ மோட்டோவாக இந்தக்கேசைக் கையில் எடுத்துக் கேள்விகள் கேட்க ஆரம்பித்திருக்கிறது. மம்தா இதை நாங்களே சிபிஐயிடம் ஒப்படைக்கிறோம் என்று ஒப்படைத்திருக்கிறார்.

CCTV Footage of RG Kar from Rape-Murder Night accessed by CBI
CCTV Footage of RG Kar from Rape-Murder Night accessed by CBI

ஆனால் இதில் பலப்பல மர்மங்கள் இப்போது வரை இருக்கின்றன. சஞ்சய் ராயைப் போலீசோ சிபிஐயோ தானே விசாரிக்க வேண்டும். ஆனால் மம்தா அரசு மனநல மருத்துவர்களின் குழுவை வைத்து சஞ்சயை ஆய்வு செய்திருக்கிறது. அதாவது சஞ்சய் என்பவன் மன நலம் பிறழ்ந்தவன்.

ஆகவே இந்த செயலை மன நலம் பிறழ்ந்த நேரத்தில் செய்து விட்டான். இந்தப் பிறழ்வுக்கு அவனது சிறுவயது வாழ்க்கை காரணமாக இருக்கும் என்ற கோணத்தில் சஞ்சயையும் சேர்த்தே தப்ப வைக்க மம்தா அரசு முயற்சி செய்து வருகிறது.

இதற்கிடையில் டாக்டர்கள் வெளியே போராடிக் கொண்டிருந்த போது டாக்டர் வேடத்தில் இருந்த சில ரவுடிகள் மருத்துவ மனைக்குள் புகுந்து அங்கிருந்த குறிப்பிட்ட சிசி டிவி கேமராக்களை உடைத்து நொறுக்கிப் போட்டிருக்கிறார்கள். கமிஷனர் இந்த மருத்துவர் போராட்டத்துக்குள் யாரோ விஷமிகள் புகுந்து விட்டார்கள் என்று மட்டும் அறிக்கை கொடுத்திருக்கிறார்..

New Principal Suhrita
New Principal Suhrita

சரி. அந்த விஷமிகள் புகுந்தாலும் மருத்துவ மனையில் உடைப்பதற்கு ஆயிரம் பொருட்கள் இருக்கும்போது எதற்காக வெறும் சிசிடிவிகளை மட்டும் உடைக்கிறார்கள் என்று கேள்வி எழுப்புகிறார்கள் மருத்துவர்கள்.

இதற்கு இடையில் வெளியே தெரியாமல் போலீசார் இது வரை 19 பேரைக் கைது செய்து விசாரித்து வருவதாக இப்போது தகவல் தெரிவித்திருககிறார்கள். யார் அந்த பத்தொன்பது பேர்.. சஞ்சய் ராய் தனியாளாகச் செய்த இந்த பாலியல் வன்புணர்வில் இந்த பத்தொன்பது பேருக்கு என்ன சம்பந்தம்..? என்று கேட்கிறார்கள் மருத்துவர்கள்.

இதை விட ஹைலைட் என்னவென்றால் அந்த மருத்துவக்கல்லூரியின் முதல்வர் இந்த டாக்டர்கள் போராட்டத்தின் மூலம் “என்னைக் களங்கப் படுத்துகிறார்கள், சமூக வலைத்தளங்களில் நான் கடுமையாகத் தாக்கப்படுகிறேன், ஆகவே இராஜினாமா செய்கிறேன்” என்று முதல்வர் பதவியை இராஜினாமா செய்துவிட்டார்.

ஆனால் அவர் இராஜினாமா செய்த அடுத்த நாளே அவர் கல்கத்தா தேசீய மருத்துவக் கல்லூரிக்கு முதல்வராக நியமிக்கப் படுகிறார்.. இது போராடும் மருத்துவர்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தையும் பெரும் ஆட்சேபணையையும் எழுப்பி இருக்கிறது.

இந்த மரணத்துக்கு எதிராக மும்பை, டெல்லி என்று பெருநகரங்களில் மருத்துவர்களின் பெரும் போராட்டம் அரசை தற்போது உலுக்கி வருகிறது.

old Principal DR Sandip ghosh
old Principal DR Sandip ghosh

வெறும் சஞ்சய் ராய் மட்டும் செய்த கொடுஞ்செயல் என்றால் எதற்காக போலீசார் பத்தொன்பது பேரைக் கைது செய்தார்கள்.? எதற்காகக் கைது செய்ததை வெளியே சொல்லாமல் மறைத்தார்கள்?. மம்தா எதற்காக சந்தீப் கோஷுக்குப் பெரும் ஆதரவு தந்து வருகிறார்?.

இதற்கிடையே சிபிஐ சந்தீப் கோஷை பத்து மணி நேரத்துக்குமேல் விசாரணை செய்ததாகத் தகவல்கள் வருகின்றன. சந்தீப் கோஷ் எந்தத் தவறும் செய்யவில்லை என்றால் அவரை எதற்காக சிபிஐ பத்து மணி நேரத்துக்கு மேல் விசாரணை செய்கிறது?.. இதில் அரசியல் ரீதியாக யாரும் சம்பந்தப் பட்டிருக்கிறார்களா.. ?

அனைத்துக்கும் விடை கிடைக்குமா.. அல்லது மம்தா பேனர்ஜி தன் அதிகாரத்தின் கரங்களை வைத்து எதிர்க் குரல்களை ஒடுக்கி நசுக்கி விடுவாரா என்பது போகப் போகத்தான் தெரியும்.

கொல்லப்பட்ட மருத்துவர் தற்போது முதுகலை படித்து வருகிறார். எல்கேஜியில் இருந்து கணக்கிட்டால் கிட்டத்தட்ட இருபத்தெட்டு வருடங்களைப் படிப்பதற்கே செலவழித்திருப்பார். கோவிட் காலகட்டத்தில் கூட அவர் நிச்சயம் மருத்துவராக இருந்திருப்பார். மருத்துவம் ஒன்றே கனவாக இருந்தவர். ஒரு பெண்..

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

ஒரு பெரிய மாநிலத்தின் தலைநகரில் உள்ள மிகப்பெரிய மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வல்லுறவு செய்யப் பட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்.. எவ்வளவு பெரிய துயரம் இது!.

அந்த மரணமடைந்த மருத்துவரின் பெயர் தெரியும் என்றாலும் நாகரிகம் கருதி அவர் பெயரை மறைத்திருக்கிறேன்.

கீழே சஞ்சய் ராயின் சில படங்களை இணைக்க முயற்சி செய்தேன். மார்க்கான் அவற்றைப் பதிவேற்ற முடியாமல் தடுக்கிறான். ஆகவே வெறும் இடுகை மட்டும். அவனது போட்டோக்களை கமெண்ட்டில் கொடுத்திருக்கிறேன்.

கட்டுரை

நந்தன் ஸ்ரீதரன் – Nandhan Sreedharan

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.