திருச்சியில் 9 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை ! மைனர் ராஜாவுக்கு கால்கட்டு ! நடந்தது என்ன?

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சியில் 9 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை ! அக்யூஸ்டு சின்ன ராஜா கைது ! நடந்தது என்ன? திருச்சி தில்லைநகரில் பத்து வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய குற்றச்சாட்டின் கீழ் 23 வயதான சின்னராஜா என்ற வக்கிரப்புத்திக் காரன் ஒருவன் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மேற்குவங்கத்தில் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியிருப்பதோடு, பெண்கள் பாதுகாப்பு குறித்த விவாதத்தையும் கிளப்பியிருக்கிறது. பள்ளிச்சிறுமிகள் தொடங்கி வயது வித்தியாசமின்றி பொதுவில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவிவருவதாக பலரும் கண்டனங்களை எழுப்பி வருகிறார்கள்.

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

இந்த பின்னணியில்தான், கிருஷ்ணகிரியில் என்.சி.சி. கேம்ப் நடத்துகிறேன் என்று சொல்லி நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சிவராமன் என்பவன் 12 வயதேயான பள்ளிச்சிறுமியை சீரழித்தக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறான். இந்த சம்பவத்தில் அந்த பள்ளியில் என்.சி.சி. பிரிவே கிடையாது என்பது உள்ளிட்ட அடுத்தடுத்து அதிர்ச்சிகரமான தகவல்கள் தற்போது வெளியாகி வருகின்றன.

இவை குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியாகி பெண் பிள்ளைகளை கொண்டிருக்கும் பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில்தான், இவை எவற்றுக்கும் அசராமல் ”தங்களது வேலையை தடையின்றி தொடர்வோம்” என்பதாக, பாலியல் வக்கிரப்புத்திக் காரர்களின் கொடூரங்களும் அடுத்தடுத்து அரங்கேறி வருகின்றன.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

திருச்சி தில்லைநகரைச் சேர்ந்த சிறுமிக்கு நேர்ந்த கொடுமை பதபதைக்க வைக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆதரவாக, குற்றவாளி கைது செய்யப்பட வேண்டுமென்று உறுதியான போராட்டத்தை முன்னெடுத்து வரும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் திருச்சி மாவட்ட செயலர் ஜீவா விடம் பேசினோம்.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தினர் போஸ்டர்
மக்கள் கலை இலக்கியக் கழகத்தினர் போஸ்டர்

என்ன நடந்தது?
“வெறும் ஒன்பதே வயதான அந்த பச்ச புள்ள 4 வது படிக்கிறா. அப்பா, அம்மா ரெண்டு பேருமே கிடையாது. அம்மா இறந்துட்டாங்க. அப்பா எங்கே இருக்காருனே தெரியல. பாட்டிதான் இந்த பிள்ளைய வளர்த்துட்டு வந்திருக்காங்க. ரொம்ப சாதாரணமான குடும்பம். வீட்டு வேலை செஞ்சிதான் அந்த புள்ளய படிக்க வச்சிட்டு வராங்க.

உய்யகொண்டான்திருமலை பகுதியை சார்ந்தவன் சினிக்கி என்கிற சின்ன ராஜா. கிடைக்கிற வேலைய செஞ்சிகிட்டு உதிரித்தனமா சுத்திகிட்டு திரியிறவன். ஏற்கெனவே, இவனுக்கு கல்யாணம் நடந்து அந்த பொண்ணோட வாழாம, வேற ரெண்டு பொண்ணுங்ககூட சுத்திகிட்டு திரிஞ்சான். கடைசியில் அந்த பெண்களும் இவனை விட்டு போய்விட்டாங்கன்னு சொல்றாங்க.  இந்த சிறுமி வசிக்கிற பகுதியில அவனுக்கு நண்பர்கள் வட்டாரம் இருக்கும்போல. பெயிண்டிங், கட்டிட வேலைனு கிடைக்கிற வேலைக்கு போய்கிட்ட நண்பர்களோடு தங்கிட்டு இருந்திருக்கான். இந்த பகுதியில ரெண்டு மாசமா இருக்கானாம். அந்த வகையில அந்த சிறுமிக்கு நல்லாவே தெரிஞ்சவனா இருந்திருக்கான்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

ஏழு மணிக்கு மேல குழந்தைய காணோம்னு ஏரியா முழுக்க தேடியிருக்காங்க. எங்கேயும் இல்லைன்னதும் தில்லைநகர் ஸ்டேஷன்ல கம்ப்ளெயிண்ட் கொடுத்திட்டாங்க. போலீசார் ஒரு பக்கம் தேட, அந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் பலரும் பதைபதைப்பில் இரவு எட்டு மணிக்கு மேலாகவும் சுற்று வட்டார பகுதி முழுவதும் தேடியிருக்கிறார்கள். இந்நிலையில் மறுநாள் காலைல, கோட்டை ஸ்டேஷன் பக்கத்துல மேல் சட்டையே இல்லாம அந்த சிறுமி நடந்து வந்திருக்கு. வழிப்போக்கனா வந்த ஒருத்தரு பார்த்து என்ன ஏதுன்னு விசாரிச்சு அந்த சிறுமியை அவங்க தாத்தா பாட்டிகிட்ட சேர்த்திருக்காரு. அதுக்கு அப்புறம்தான் போலீசுக்கு தகவல் சொல்லி, ஜி.எச். ல சேர்த்திருக்காங்க. போலீசு, டாக்டர், சொந்தக் காரங்கனு எல்லோரும் பேசி பார்த்தும் அந்த சிறுமி எதுவுமே சொல்லலை.

அப்புறம் டாக்டருங்கதான், எல்லோரையும் வெளிய போக சொல்லிட்டு நம்பிக்கை கொடுத்து மெல்ல பேசியிருக்காங்க. தைரியம் கொடுத்து பேச வச்ச பிறகுதான் முழு கதையும் வெளிய வந்திருக்கு.

சம்பவத்தன்னைக்கு அந்த சிறுமியை சின்ன ராஜாதான் கூட்டிட்டு போயிருக்கான். எங்கே கூட்டிட்டு போனான்? என்ன பன்னினான்? எதுவுமே தெரியாது. ஆனாலும், இரவு முழுக்க அந்த பச்ச புள்ளய சித்தரவதை பன்னியிருக்கான். உடம்பெல்லாம் ரத்தக் காயங்களா இருந்திருக்கு. அந்த சிறுமிக்கு ஏற்கெனவே, தெரிஞ்சவன்தான்றதலால “நடந்தத உங்க தாத்தா பாட்டிகிட்ட கூட சொல்லக்கூடாது.

சொன்னா, உங்க மூனு பேத்தையும் சோலிய முடிச்சிருவேன்னு” மிரட்டியிருக்கான். அதுக்கு பயந்துகிட்டே யாருகிட்டயும் சொல்லாம அழுதிருக்கு. பக்கத்துல யாரும் இல்லாம தனியா நம்பிக்கை கொடுத்து பேசவும் சொல்லியிருச்சி.

நாங்களும் தில்லைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகனிடம் பேசினோம். அவரும், சின்னபுள்ளைய இந்த மாதிரி பன்னியிருக்கான். நாங்க சும்மா விடுவோமா? கண்டிப்பாக கடுமையான நடவடிக்கை எடுப்போம். என்று வாக்குறுதியளித்தார். அதுபோலவே, இப்போது ஆளையையும் கைது செய்திருக்கிறார்கள். போலீசு புடிக்க போறப்ப கீழ விழுந்து கால் முறிஞ்சி இப்போ ஜி.எச்.ல அட்மிட்டாயிருக்கான் அக்யூஸ்டு சின்னாராஜா ” என்கிறார், தோழர் ஜீவா.

“இப்போது வரையில், அந்த சிறுமியை பார்த்து பேசுவதற்கு எங்களுக்கே அனுமதி மறுக்கிறார்கள். நாளை இந்த சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தவிருக்கிறோம்.” என்கிறார், இந்திய மாதர் தேசிய சம்மேளன (NFIW)த்தை சேர்ந்த எம்.சுமதி.
இன்ஸ்பெக்டர் வேல்முருகனை தொடர்பு கொண்டோம். நமது அழைப்பை அவர் ஏற்று பதிலளிக்கவில்லை.

நிர்பயா சம்பவத்திற்குப் பிறகு, இதுபோன்ற போக்சோ குற்றவாளிகளை தயவுதாட்சன்யமின்றி விசாரணையே இல்லாமல் தூக்கில் போட வேண்டும் என்ற குரல்கள் மேலெழும்பின. ஆண்டுகளைப் போலவே, போக்சோ குற்றங்களின் எண்ணிக்கைகளும் கூடிக்கொண்டுதான் போகின்றன.

இதோ இப்போதைய சூழலில் நிர்பயாவின் இடத்தில் மேற்குவங்க பயிற்சி பெண் மருத்துவரின் மரணம். இவற்றோடு, பதினைந்து வயதிற்கும் கீழான சிறுமிகளும்கூட பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கும் கொடுமைகளும் சமூகத்தை அச்சுறுத்துகின்றன.

– தி.கலைமதி.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.